லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நார்த்தங்காய் சாதம்!

Published:

Northang rice - 2026

நார்த்தங்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் – 3 கப்
நார்த்தங்காய் – 1 பெரியது மற்றும் சாறு எடுத்துக் கொள்ளவும்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் பெருங்காயத் தூள் வரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, நார்த்தங்காய் சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, பின் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டினால், நார்த்தங்காய் சாதம் ரெடி!!

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img