Month: December 2015

  • கட்சி இதழில் நேரு, சோனியாவை விமர்சித்து கட்டுரை: கண்டண்ட் எடிட்டர் அதிரடி நீக்கம்

    மும்பை: காங்கிரஸ் கட்சியின் இதழான மும்பை காங்கிரஸ் தர்ஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் நேரு, சோனியாவை விமர்சித்து, பட்டேலை புகழ்ந்துள்ளதால் காங்கிரசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அப்பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் ஜோஷி அதிரடியாக நீக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் 131-வது தொடக்கநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் சர்தார் பட்டேல் பராட்டப்பட்டு, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மும்பை பிராந்தியத்தால்…

  • தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்கு

    தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, 4 பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்குகள் பதிவு…

  • ஜேட்லி விவகாரத்தில் சோனியா தூண்டவில்லை: கீர்த்தி ஆசாத் மறுப்பு

    புதுதில்லி: தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேட்டில் ஜேட்லி தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்ற அவையில் கிளப்ப சோனியா காந்தி தூண்டவில்லை என பாஜ எம்பி கீர்த்தி ஆசாத் மறுத்துள்ளார். தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் அருண் ஜேட்லி மீது குற்றம் சாட்டிய பாஜ எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், பின்னர் அதை நாடாளுமன்ற அவையிலும் எழுப்பினார். அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரும் இந்த விவகார்ததை கிளப்பினர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தலைவர்…

  • நல்லவர்களுக்கு ஓட்டு போடணுமாம்: விஜயகாந்த் வேண்டுகோள்

    தஞ்சாவூர் :. நடைபெற உள்ள தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியபோது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர் வாரப் படாததால்தான், மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை…

  • ஜி.கே.வாசன் பிறந்த நாள்: மாணவரணித் தொண்டர்கள் ரத்த தானம்

    சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் மாணவர் அணியினர் ரத்த தானம் செய்தனர். இன்று 28.12.2015 திங்கட் கிழமை, காலை 11.00 மணிக்கு எண்.14, எல்லையம்மன் காலனி 1வது தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 86 என்ற முகவரியிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஜி.கே.வாசன் 51வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் அணி சார்பில் மாணவர் அணி மாநில தலைவர் எம்.சுனில் ராஜா, தலைமையில்…

  • காறித் துப்பிய விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆணையரிடம் பத்திரிகையாளர்கள் புகார்!

    சென்னை: பத்திரிக்கையாளர்களிடம் த்தூ எனத் துப்பி, அநாகரீகமாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனம் சார்பில், அதன் இணைச் செயலாளரும் பத்திரிக்கையாளருமான எஸ்.சீனுவாசன், விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து இன்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், ” விஜயகாந்த் ‘துா’ என்று துப்பி, செய்தியாளர்களாகிய எங்களை மட்டுமல்ல; அனைத்து ஊடகங்களையும் இழிவுபடுத்தியுள்ளார். அவர்…

  • 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

    சென்னை: அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்ட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:  இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன்  உள்ளிட்ட 7 தமிழர்களையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432&ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள்…

  • சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்: அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர்

    மும்பை, நாட்டில் கட்டுங்கடங்காத வகையில் சென்று கொண்டிருக்கும் மக்கள்தொகை வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான மக்கள்தொகைக் கொள்கையை வகுக்க வேண்டும்; சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டது… மக்கள்தொகை கட்டுக்குள் இருந்தால்தான் அனைத்து வழிகளிலும் நாட்டின் வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் வளர்ச்சிக்கான இலக்கை…

  • ஒவ்வொருவர் தலையிலும் ரூ.31,000 கடன் சுமை; நிர்வாகச் சீர்கேடு அதிகரிப்பு: அடுக்குகிறார் கருணாநிதி

    சென்னை: தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கை: கேள்வி: தமிழக அரசின் நிர்வாகத்தில் சீர்கேடுகள் அதிகமாகி விட்டதாகத் தொடர்ந்து கூறப் படுகிறதே, அதற்குச் சில உதாரணங்கள் கூறுங்களேன்? கருணாநிதி:- ஒன்றா? இரண்டா? எதைக் கூறுவது? எதை விடுவது? உதாரணம்தானே கேட்கிறீர்கள், கூறுகிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,…

  • கீழப்பாவூர் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

    ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அடைகலப்பட்டணத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் திறந்து வைத்தார் ,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார் ,திருநெல்வேலி பாராளுமன்ற உறுபினர் கே.ஆர்.பி பிரபாகரன் ,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் ,தென்காசி கோட்டசியர் வெங்கடேஷ் ,வட்டாசியர் கோபிகிருஷ்ணன் ,கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டியன் ,வருவாய் ஆய்வாளர் மாரிச்செல்வம் ,கிராம…