― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகல்வியுடன் கலாசாரத்தையும் கற்பிக்க வேண்டும்! எப்படி தெரியுமா?

கல்வியுடன் கலாசாரத்தையும் கற்பிக்க வேண்டும்! எப்படி தெரியுமா?

- Advertisement -

கல்வியோடு சேர்த்து கலாச்சாரத்தை ஏன் கற்பிக்க வேண்டும் எப்படி கற்பிக்க வேண்டும்? How can cultural Education be imbibed in educational institutions? (Your valuable comments are expected to improvise this note)

பாரத தேசத்தின் கலாச்சாரம் வெறும் பழமையானது மட்டுமல்ல. அது எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய இளமையான கலாச்சாரம். தொன்று தொட்டு வழிவழியாக குடும்பம், ஆசிரியர் , கல்விகக்கூடம், கோவில்கள் மற்றும் சமூகப்பழக்க வழக்கங்கள் மூலம் எல்லா சந்தர்பங்களிலும் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த கலாச்சாரம். சம்ஸ்க்ருதி அல்லது பண்பாடு என்பவை கலாச்சாரத்தைக் குறிக்கும் வேறு சொற்கள். சம்ஸ்கிருதி என்றால் நன்கு சீர்செய்யப்பட்டது. ஆதாவது பண்பட்டது. அதனால் தான் தமிழில் பண்பாடு என்கிறோம். மனிதர்களை பண்படுத்தும் தொழில்நுட்பம் தான் கலாச்சாரம்.

கலாச்சாரத்தில் வரலாறும் அறிவியலும் ஆனந்தமும் வாழ்க்கை கல்வியும் இன்னும் பல விசயங்களையும் நம் முன்னோர்கள் பொதித்து வைத்துள்ளனர். அதை நாம் தொடர்ந்து கற்பதற்காக விழாக்கள் , வழிபாடுகள், சடங்குகள் என பல பயிற்சிகளை வைத்துள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை நாம் மகிழ்ச்சியாக வாழ தேவையான அனைத்தும் பண்பாட்டு முறைகளில் உள்ளன. இந்த துறை ஒரு கடல் போன்ற துறை.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு முன் பாரதத்தின் கல்விக்கூடங்களில் கலாச்சாரமும் பொருளீட்டும் கல்வியும் தனித்தனியாக இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தது. சரி. விசயத்துக்கு வருகிறேன். மதச்சார்பற்ற அரசாங்கம் பாரத கலாச்சாரத்தை அரசு பள்ளிகளில் கற்பிக்க சம்மதிக்காது. காரணம் அரசின் பார்வையில் இந்து சனாதன கலாச்சாரம் ரிலீஜியனாகத்தான் (Religion as meant by western culture) தெரியும்.

குழந்தை பருவத்திலிருந்தே பண்பாட்டு கல்வியை சரியான முறையில் கற்பித்தல் மூலம் வாழ்வியல் திறன்களும் படைப்பாற்றல் திறனும் வளரும். அறிவும் செய்திகளும் மட்டுமே தற்போதுள்ள கல்வியில் கிடைக்கின்ற பொருட்கள். காரணம் இது கமெர்சியல் கல்வி.

இப்போது தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பெரிய கடமை உள்ளது. எனது சில யோஜனைகள்.

1. நமது அனைத்து விழாக்களையும் கல்வி நிலையங்களில் அனுசரிக்க வேண்டும். கொண்டாட வேண்டும். ஒவ்வொரு விழாவின் பின் உள்ள ஆத்மீக அறிவியல் காரணங்களை சொல்லி அவற்றை வாழ்க்கையில் அப்ளை (Apply in life ) பண்ண பயிற்சி தரலாம்.

2. கோவில்கள் , சிற்பகலை மற்றும் கட்டிடக்கலை இவற்றைப் பற்றி நேரிடையாக மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யலாம்.

3. நமது தேசத்தில் பிறந்த மஹான்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை மாணவர்களுக்கு சொல்லித்தரலாம். அவர்களது பிறந்த நட்சத்திர தினங்களை அனுசரித்து நினைவுகூரலாம். ஆதிசங்கரர், இராமானுஜர், வியாசர், கபிலாச்சார்யர், திருவள்ளுவர், ஔவையார், நாயன்மார் மற்றும் ஆழ்வார் போன்ற பலர்.

4. பாரதத்தின் அறிவுக் களஞ்சியங்களாக விளங்கும் வேதங்கள் , உபநிசத், திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், அர்த்த சாஸ்திரம் மற்றும் பல நூல்கள் கூறும் அறிவு சாரம்சத்தை வயதுக்கு ஏற்ப படிப்பிக்கலாம்.

5. தேசபக்தியை உணர்வில் ஏற்படுத்த வரலாறு மற்றும் சுதந்திர போர் தியாகிகளை நினைவு செய்யலாம் .

6. உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற நம் நாட்டு விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்ளச் செய்யலாம்.

7. சனாதன தர்மத்திலுள்ள அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை பாடத்தில் சேர்க்கலாம்.

– முனைவர் சந்தோஷ் முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version