Home சுற்றுலா இன்றைய குற்றாலம்.. குளிக்க ஏத்த மாதிரி..!

இன்றைய குற்றாலம்.. குளிக்க ஏத்த மாதிரி..!

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற அளவில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிக் குளியலை அனுபவித்தனர்.

குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை இல்லாததால் அருவிகளுக்கு மிதமான அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சீஸன் காலம் முடிந்து ஆஃப் சீஸன் எனப்படும் இரண்டாம் கட்ட சீஸன் காலம் என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகம் இல்லாமல் இருந்தது. இதனால் விடுமுறை தினங்களை ஒட்டி குற்றாலம் வந்த பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து அனுபவித்தனர்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-09-2019)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 119.75 அடி
நீர் வரத்து : 900 கன அடி
வெளியேற்றம் : 954.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 128.18 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 50 அடி
நீர் வரத்து : 66 கனஅடி
வெளியேற்றம் : 400 கன அடி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version