Home Reporters Diary ஆரம்பமே அடாவடி! வேட்புமனுத் தாக்கலே ரவுடித்தனம்! கார்த்தி சிதம்பரத்துக்கு துணை போன ஆட்சியர்!

ஆரம்பமே அடாவடி! வேட்புமனுத் தாக்கலே ரவுடித்தனம்! கார்த்தி சிதம்பரத்துக்கு துணை போன ஆட்சியர்!

ஆரம்பமே அடாவடி இதுதான் ப சிதம்பரத்தின் ரவுடித்தனம் என்று குரல் எழுப்புகின்றனர் சக சுயேச்சை வேட்பாளர்கள்.

வேட்புமனு தாக்கல் செய்ய கார்த்தி சிதம்பரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார்! அப்போது நல்ல நேரம் முடிவடைந்துவிடும் என்று கூறி ஏற்கனவே காத்திருந்த சுயேச்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேறினார் கார்த்தி சிதம்பரம். இது ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்!அப்போது அவர் தன்னுடன் பத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார்!

உள்ளே நுழைய முயன்ற அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்று கூறினர்! ஆனால் அவரது ஆதரவாளர்கள் இதை காது கொடுத்து கேட்கவில்லை! அடாவடித்தனமாக போலீசாரை மீறி அனைவரும் உள்ளே சென்றனர்!

அப்போது உள்ளே ஏற்கெனவே சுயேட்சை வேட்பாளர்கள் நேரம் கொடுத்தபடி காத்திருந்தனர்! வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருந்த சுயேட்சை வேட்பாளர்களால் வெறுத்துப்போன கார்த்தி சிதம்பரம் தான் வந்தவுடன் நல்ல நேரம் முடிவடைந்து விடப்போகிறது என்று கூறி ஏற்கனவே காத்திருந்த ராஜேந்திரன் என்ற சுயேச்சை வேட்பாளரை அங்கிருந்து அகற்றினார்! அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம் பின்னர் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இதுகுறித்து மனம் குமுறிய சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, வேட்பாளர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது தன்னை மட்டும் அங்கிருந்து வெளியேற்றி கார்த்தி சிதம்பரத்துக்கு நேரம் கொடுத்து மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக் கொண்டது தேர்தல் விதிமுறை மீறிய செயலாகும் என்று கூறினார்!

ஒரு சுயேச்சை வேட்பாளர்  நான் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருக்கிறேன் என்னை எழுந்திருங்கள் என்று கூறி கார்த்திக்கு முக்கியத்துவம் கொடுத்து மாவட்ட ஆட்சியர்  வேட்புமனுவை வாங்கினார்! அவ்வாறு வாங்குவது தவறு! 40க்கும் மேற்பட்டோர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். எவ்வாறு அப்படி வரமுடியும்? சுயேச்சைக்கு ஒரு நீதி தேசிய கட்சிக்கு ஒரு நீதியா? என்று ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்!

தேர்தல் விதிமுறைகளை மீறிய கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்! தேர்தல் தொடங்கும் முன்னரே அடாவடியா என்று பலரும் கார்த்தியை வியந்து பார்க்கின்றனர்! காரணம், ரீகவுண்டிங்கில் வெற்றி பெற்று, தேர்தலின் முடிவையே தனது அசுர பலத்தாலும் செல்வாக்காலும் மாற்றி மாபெரும் கொள்ளைகளை அரங்கேற்றி, நாட்டின் கஜானாவைக் காலி செய்த பெருமை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையே சாரும். அவரது மகன் வேட்புமனு தாக்கலின் போதே அடாவடியில் இறங்கியது அப்படி ஒன்றும் வியப்பில்லைதான்!

ஏற்கெனவே எச் ராஜா கார்த்தியின் பணபலம் மற்றும் செல்வாக்கு தான் தனக்கு சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்! அந்த சவால் இன்று தொடங்கி யுள்ளது!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version