― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதீபாவளி: பள்ளி விடுமுறை அறிவிப்பில் அரசியல்... ஆசிரியர்கள் குமுறல்!

தீபாவளி: பள்ளி விடுமுறை அறிவிப்பில் அரசியல்… ஆசிரியர்கள் குமுறல்!

தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் மிகப்பெரிய அரசியல் இருக்குமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது என்று குமுறுகின்றனர் ஆசிரியர்கள்.

இது குறித்து ஆசிரியர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள்…

சென்ற மாதம் வரை சனிக்கிழமைகளில் பள்ளி வைக்க எந்தவித அறிவிப்புகளும் வழங்காத பள்ளிக்கல்வித்துறை திடீரென இம்மாதம் மட்டும் முன்கூட்டியே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அக்டோபர் மாத நாள்காட்டியை மின்னஞ்சலில் அனுப்பியது…. அவ்வாறு அனுப்பியதில் தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை பள்ளி வேலைநாள் ஆக செயல்படும் என்றும், தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும், வேலை நாட்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது…

பொதுவாக சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பதற்கு நடைமுறையில் இருப்பது என்னவென்றால் வார நாட்களில் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை யிலான வேலை நாட்களில் ஏதேனும் ஒரு நாள் அரசு விடுமுறை வருமாயின் அந்த வாரத்தின் வரும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பதே வழக்கம் ….

ஆனால் இம்மாதம் 14 முதல் 18 வரை வார நாட்கள் வேலை நாட்களாக இருந்தும் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 21 முதல் 25 வரை வார வேலை நாட்களாக இருக்கும் நிலையில் 26ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு முன்னாள் சனிக்கிழமை வேலை நாள் என குறிப்பிட்டு பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டி வெளியிட்டது.

இதில் என்ன விசேஷம் என்றால் இந்த ஆண்டு தீபாவளி திருநாள் ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது எனவே வருடந்தோறும் தீபாவளிக்கு விடப்படும் விடுமுறை இவ்வாண்டு விடப்பட வேண்டிய சூழல் இல்லை……

பொதுவாக தீபாவளி பண்டிகை யானது தமிழகம் முழுவதும் அல்லாது இந்தியா முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடும் ஒரு பண்டிகை ஆகும் தமிழகத்தைப் பொருத்தவரை தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அதாவது ஆந்திரா கர்நாடகா பாண்டி போன்ற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊருக்கு வருவதே வழக்கமாக இருந்து வருகிறது…..

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை பட்டியல் தயாரிக்கும் பொழுதே தீபாவளிக்கு மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களும் சொந்த ஊருக்கு செல்வர் என்பதை கருத்தில் கொள்ளாது தீபாவளிக்கு முந்தைய நாளை வேலை நாளாக அறிவித்தது எவ்வாறு என கணிக்க இயலவில்லை…

மேலும் இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் ஞாயிறு அன்று கேதாரீஸ்வரர் நோன்பும் வருகிறது. பொதுவாக அமாவாசைக்கு முந்தைய நாள் தான் தீபாவளி கொண்டாடுவார்கள். தீபாவளி கொண்டாடும் நாளில் முக்கியமாக அசைவம் உணவு சமைத்து சாப்பிடுவதே தமிழகத்தில் வழக்கம்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளியும் அமாவாசை நோன்பும் சேர்ந்தே வருவதால் அசைவம் உண்டு தீபாவளி கொண்டாடுபவர்கள் ஒருநாள் முன்னதாக அதாவது சனிக்கிழமை அன்று தான் தாங்களுக்கு தீபாவளி என எண்ணி கொண்டாடுவார்கள்…. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை….!

அண்டை மாநிலம் ஆந்திராவில் செயல்படும் ஜியோமி போன் நிறுவனம் தனது வேலைநாட்களை சனி ஞாயிறு விடுமுறை விடப்படும் சூழலில், தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமைக்கு விடுமுறை அளித்து அதற்கு ஈடு செய்யும் விதமாக இந்த வாரம் அதாவது கடந்த 5ஆம் தேதி சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்து வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது.

அதுபோன்று திட்டமிட்டு தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும்பொழுது….

தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு பள்ளி கல்வித்துறை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது வாடிக்கையாகவும் அதே நேரம் வேடிக்கையாகவும் உள்ளது…!

பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் வேலை நாள். அதேபோன்று பெரும் பொங்கலுக்கு முன்னால் அதாவது போகி பொங்கல் அன்று வேலை நாளாக பள்ளிக்கல்வித் துறை அறிவிக்கும். அதன் பிறகு ஆசிரியர் சங்கங்கள் அனைவரும் இயக்குனர்களை சந்தித்து போகி பொங்கலுக்கும் தீபாவளிக்கு முந்தைய நாளுக்கும் விடுமுறை விடுங்கள் என்று கோரிக்கை வைப்பார்கள்… அரசாங்கம் ஏதோ இவர்கள் கோரிக்கையை ஏற்று அறிவிப்பது போல விடுமுறையை அறிவிப்பார்கள்….

நியாயமாகப் பார்த்தால் அரசாங்கமே பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு முந்தைய நாள் விடுமுறை அறிவிக்க வேண்டிய பணியை செய்ய வேண்டும். அதுவே மக்கள் நலன் நாடும் அரசு!

அதற்கு மாறாக முந்தைய நாள் வேலை நாளாக அறிவித்துவிட்டு பின்னர் அதை விடுமுறை நாள் என்று அறிவித்து அதனை அனைத்து ஊடகங்களிலும் பிளாஷ் நியூஸ் வெளியிட்டு ஏதோ இந்த அரசாங்கம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மக்களுக்கு விடுமுறை அளிப்பது போல ஒரு மாயையை உருவாக்குவது அரசியல் தான் என்பதை கண்கூடாக கணிக்க தோன்றுகின்றது…!

இனியாவது அரசு தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை திட்டமிட்டு அதற்கு முந்தைய நாட்களையும் பிந்தைய நாட்களையும் விடுமுறையாக அறிவிக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என பொதுமக்கள் எண்ணுகிறார்கள்…!

இன்றைய அறிவிப்புகளைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்… தீபாவளிக்கு தொடர் விடுமுறை … வாவ் அறிவிப்பு…! என தொலைக்காட்சிகள் ஸ்கோரல் நியூஸ் போடுகின்றன… மேலும் தீபாவளிக்கு விடுமுறை நீட்டிப்பு என்று செய்தியும் அறிவிக்கிறார்கள்…!

உண்மையில் தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை தீபாவளி அன்று ஞாயிற்றுக்கிழமை ஆக இரு நாட்கள் வார விடுமுறை நாட்கள் தவிர சிறப்பு விடுமுறை நாட்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை…!

இப்படி இருக்க இந்த அரசாங்கம் ஏதோ தீபாவளிக்கு விடுமுறை அறிவித்து விட்டது போல விளம்பரம் தேடுவது ஏன்? மக்களை ஏமாற்றவா? ஒன்றும் புரியவில்லை எல்லாம் அரசியல் மயம்! விடுமுறை அறிவிப்பிலும் அரசியல் மயம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version