― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஎன்ன ஆகும் கத்தார்?

என்ன ஆகும் கத்தார்?

qatar-people-rush-mall

கத்தார் நாட்டின் மீதான சவுதி, அமீரக, தடையால் என்ன ஆகும். இதற்கு முன்.. சவுதிக்கு வட கிழக்கில், ஒரு துக்குணியூண்டு நாடு கத்தார். தோஹா தலைநகரம். பிரதான தொழில், பெட்ரோலிய வாயு ஏற்றுமதி, உப தொழில் மற்ற ரௌடிகளைப்போல் தீவிரவாத ஏற்றுமதி.

இந்த நாடு முஸ்லிம் ப்ரதர்ஹூட என்கிற இத்துப்போன தீவிரவாத கும்பலை ஆதரித்து தொலைத்ததால்.. சவுதியும், அதன் அடியாட்களும் கடுப்பாகிப்போனார்கள். முஸ்லிம் ப்ரதர்ஹூட் ஏற்கெனவே எகிப்தை முடிந்தளவு நாசமாக்கி விட்டிருந்தது. இதைப்போய் சப்போர்ட் பண்ணி கத்தார் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறது. மு ப் க்கு சவுதி எதிரி.

85 சத உணவு பொருட்களர சவுதி பார்டர் வழியாகத்தான் போகிறது. இந்த கேட்டை இறுக்க போட்டபடியால், இனி எல்லாம் கடல் மற்றும் விமான மூலம் வரும் என்றால், விலை கிடுகிடுவென உயரும். ஏற்கெனவே கத்தார் சூப்பர் மார்க்கெட்டில் panic buying. விளக்குமாறைக்கூட விட்டு வைக்கவில்லை.
ஏழை கத்தாரிகள், பார்டர் தாண்டி சவுதிக்குள் வந்து பர்சேஸ் பண்ணுவதெல்லாம் இனி நடக்காது.

முக்கியமாய், கத்தார் ஏர்வேய்ஸுக்கு இந்த நாடுகள் வான் வெளியை மூடிவிட்டது. மும்பையிலிருந்து போக ஈரான் மீதும், அரேபியன் சீ மேல் போய்தான் சேரவேண்டியிருக்கும். இதனால் டிக்கட் விலை கூடும். இதன் சவுதி, அமீரக சேவைகளில் காசை அள்ளியது ஒரு காலம். இனி கஷ்டம்தான். இந்த ஏர்லைன் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஹப் ஏர்லைன்ஸ். இதன்பாடு இனி கஷ்டம்தான்.

மூன்றாவது அடி வாங்கியிருப்பது ஃபைனான்ஸ். எல்லா வங்கிகளும் இப்போது புதிய கிளைகள், அல்லது பாண்டுகளை விட முயற்சி பண்ணியிருக்கும் நேரத்தில்.. தேவையில்லாத விஷயத்தில் கத்தார் சிக்கி சீக்கியடித்துக்கொண்டிருக்கிறது.

ஈரான் மீது டரம்ப் விதித்த பயணத்தடை தவறு என்று அங்கத்து ராஜா சொன்னதாய் ஒரு நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த கத்தார் ராஜா அது நானில்லை, ஹேக் ஆகிவிட்டது என்று அலற ஆரம்பித்து இருக்கிறார். அல் ஜஸீரா, கொஞ்சம் பொத்திக்கொண்டால், மற்ற தலப்பாகட்டுக்கள், தொலைந்துபோ என்று கத்தாரை விட வாய்ப்புண்டு. அதைவிட முக்கியமாய், முஸ்லிம் பரதர்ஹூட்டை கை கழவவேண்டும்.

சவுதியின் அல் அஹிலி டீம் கத்தார் ஏர்வேய்ஸை ஸ்பான்ஸரிலிருந்து நீக்கிவிட்டது. ரேட்டிங் நிறுவனங்கள், இதன் ரேட்டிங்கை கீழிறக்கிவிட்டது. இதனால், கடன் விலை அதிகமாகும் கத்தாருக்கு.

கத்தாரிகள்..சவுதி, குவைத்திகளைவிட தேவலாம் என்கிற மாதிரி ஆட்கள்தான். ஆனால் ஒருத்தனும் இந்த மிடில் ஈஸ்ட்ல சும்மா இருக்கவே மாட்டானுங்க. சவுதி, யெமன்ல குண்டுபோட்டான்யான்னு கத்தார் சொன்னா.. இவன் வேற ஆரம்பிப்பான். இது தொடர்கதைதான். எவனும் முன்னறமாட்டானுங்க, முன்னேற விடவும் மாட்டானுங்க. சண்டையெல்லாம் வராது. 2022இல் ஃபுட்பால் கூட வராது போல

 

கட்டுரை : பிரகாஷ் ராமசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version