More
    Homeகட்டுரைகள்விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்(5)- செயலாற்றுவதில் தாமதம் கூடாது!

    To Read in other Indian Languages…

    விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்(5)- செயலாற்றுவதில் தாமதம் கூடாது!

    விஜய பதம்… வேத மொழியின் வெற்றி வழிகள்! -5
    (சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

    5.Time Management
    செயலாற்றுவதில் தாமதம் கூடாது!

    தெலுங்கில்: பிஎஸ். சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்

    நாட்டு நலனில் அக்கறை கொண்ட தலைவனிடம் சரியான நேரத்தில் சரியான முடிவைத் தயங்காமல் எடுக்கும் தைரியமும் சாமர்த்தியமும் இருக்கவேண்டும். வேலையை ஒத்திப் போடும் குணம் தலைவனிடம் இருக்கக்கூடாது.

    A stich in time saves nine  என்பது ஆங்கிலப் பழமொழி. சரியான நேரத்தில் போடும் ஒரு தையல் அதன்பின் ஒன்பது முறை தைக்க வேண்டிய ஆபத்திலிருந்து காத்திடும் என்பார்கள். நகத்தால் கிள்ளி எறியக் கூடியதற்கு கோடாலியின் தேவை ஏற்படும்படி விடக்கூடாது.

    சுதந்திரம் வந்த பின் 1951ல் பாரத தேசத்தில் 6 லட்சம் பேர் ஊடுருவி இருப்பதாக அன்றைய பிரதமர் நேரு பார்லிமென்டில் அறிவித்தாலும் அவர்களைத் திருப்பி அனுப்பும் விஷயத்தில் செய்த தாமதம் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவித்து.

    காஷ்மீரில் நடந்த கொடூரத்தால் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கானோரை மதவெறி என்னும் சர்ப்பம் கடித்து விளையாடியது.

    சாமர்த்தியமற்ற தலைவர்களின் ஒத்திப்போடும் குணத்தால் பாரததேசம் மீள முடியாத நஷ்டத்தை அடைந்தது.

    ‘தற்காலிகம்’ என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறிய ஆர்டிகிள் 370ஐ ரத்து செய்தது, அரசியலமைப்பு குறிப்பிட்டபடி பசுவதைத் தடுப்பு, அதிகார மொழியை அமல்படுத்துவது… போன்ற முக்கிய அம்சங்களை வாய்தா போட்டபடி 17 ஆண்டுகளைக்  கடத்தினார் நேரு. வாய்தா போடுவதில் நேரு ஒரு சரியான உதாரணம். 

    ஒரு யோசனை தோன்றுவதற்கும் அதனை அமல்படுத்துவதற்கும்  இடையில் தாமதமில்லாமல் களத்தில் இறங்குவது சிறந்த தலைவனுக்கு இருக்க வேண்டிய குணம். செய்யத் தீர்மானித்த செயலை தாமதமின்றித் தொடங்குவது தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணம்.

    ஸ்ரீராமன் வனவாசம் சென்று விட்டான். பரதன் தன் அண்ணனைத் தேடிச் சென்று சந்தித்தான். அப்போது ஸ்ரீராமன் தம்பியிடம் இவ்வாறு கேட்கிறான்:

    கச்சிதர்தம் வினிஸ்சித்ய லகுமூலம் மஹோதயம் ! க்ஷிப்ரமாரபசே கர்தும் ந தீர்கயசி ராகவ !!
    – ராமாயணம் அயோத்தியா காண்டம் 100/19 

    “பரதா! மிகக்குறைந்த முயற்சியால் அதிக பலனைப் பெறும் உன் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்து அமல்படுத்துவதில் தாமதம் செய்யவில்லை அல்லவா? உடனுக்குடன் தொடங்கிவிடுகிறாய் அல்லவா?”

    பல நல்ல ஆலோசனைகள் தலைவர்கள் செய்யும் குற்றத்தால் பரணில் போடப்படுகின்றன. பாரத தேசத்தில் பல இடங்களில் அடிக்கல் நாட்டி விடப்பட்ட சிதிலங்கள் தென்படுகின்றன. ஆடம்பரமாகத் தொடங்கிவிட்டு அதன்பின் கைவிட்டுவிட்ட திட்டங்கள் அந்தந்த தலைவர்களின் தோல்விக்கான சான்றுகளாக உள்ளன. சரியான வேலையை சரியான நேரத்தில் செய்யாமல் போனதால் நம் தேசத்திற்கு நஷ்டங்கள் ஏற்பட்ட உதாரணங்கள் பலப்பல உள்ளன. அரசாங்கம் நியமித்த பல கமிஷன்கள், நிர்வகித்த சர்வேக்கள், வடிவமைத்த அறிக்கை ரிப்போர்ட்டுகள்… அமலுக்கு வராமல் கரையானுக்கு இயையாயின.

    Guruji MSGolwalkar

    குருஜியின் எச்சரிக்கை:

    My madness is better than your wisdom என்றார் ஸ்ரீ மாதவராவு சதாசிவராவு கோல்வல்கர். இவர் தேசிய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர் சங்க்  சாலக். 

    சைனா ஆக்கிரமிப்புக்கு பின்னர் நடந்த  செய்தியாளர் கூட்டத்தில் பிளிட்ஜ் இதழின் பிரதிநிதியிடம் குருஜி ‘உன் புத்திசாலித்தனத்தை விட என் பைத்தியக்காரத்தனம் மேலானது’ என்று மேற்சொன்ன நையாண்டி பாணத்தை விடுத்தார். 

    நேரு பிரதமராக இருந்து கற்பனை உலகில் பயணித்திருந்த நாட்கள் அவை. “ஹிந்தீ – சீனி பாய் பாய்!” என்று கோஷமிட்டு பஞ்சசீல கொள்கையை பிரச்சாரம் செய்து வந்த நாட்களில் 1958ல் குருஜி பல கூட்டங்களில், “நாம் கவனமாக இருக்க வேண்டும். சைனா நம் எல்லையில் சாலை போட்டு வருகிறது. சைனா நம் மேல் படை எடுத்து வருவதற்கு முயற்சிக்கிறது” என்று எச்சரித்தார். 

    அதற்கு நேருவிடம் இருந்தும் அவருடைய ஆதரவாளர்களிடம் இருந்தும் கடினமான எதிர்ப்பு வந்தது. கம்யூனிஸ்டுகள் குருஜியை, “போர் வெறியர்!” (War monger)என்று வர்ணித்தார்கள். 

    “கோல்வல்கருக்கு போர் வெறி பிடித்துள்ளது. நாம் செய்துவரும் இந்த உற்சவங்களை பார்த்து இவருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது” என்று நேரு விமர்சித்தார்.

    ப்ளிட்ஜ் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில், “ஆர்எஸ்எஸின் குருஜிக்கு பைத்தியம் பிடித்துள்ளது. Guruji has gone mad” என்று எழுதினார். 

    சைனா 1962ல் நம் தேசத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்தது. அப்போது ப்ளிட்ஜ் பத்திரிகை எழுதிய பைத்தியக்கார எழுத்துக்களுக்கு குருஜி கூறிய பதிலே “உன் புத்திசாலித்தனத்தை விட என்  பைத்தியக்காரத்தனம்  மேல்” என்பது.

    குருஜி கூறிய சொற்களை அலட்சியம் செய்யாமல் அன்றைய பிரதமர் தகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருந்தால் சைனா நம் தேசத்தை ஆக்கிரமித்திருக்காது.  நேருவின் முட்டாள்தனமான ஒத்திப் போடும் குணம் மற்றும் அஜாக்கிரதையால் பாரத தேசம் நிலப்பகுதிகளையும் படை வீரர்கள் பலரையும் இழக்க நேர்ந்தது.

    அகண்ட பாரதப் பிரிவினை நடந்தபின் நம் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத்துக்கும் இடையே 1950ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளிலும் உள்ள மைனாரிட்டி மக்களுக்கு முழு பாதுகாப்பும் குடியுரிமையும் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்பட்டது.

    பாரத தேசத்தில் உள்ள மைனாரிட்டிகளுக்கு முழுப்பாதுகாப்பும்  அரசியல் உரிமையும் கிடைத்து வருகிறது. அது மட்டுமல்ல அவர்களை திருப்தி அடையச் செய்வதற்கு பிரத்தியேக சலுகைகளும் உரிமைகளும் இந்திய அரசியலமைப்பில் ஏற்படுத்தி உள்ளார்கள்.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானில் அமல்படுத்துவதற்கு நேரு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இன்றைய பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் மைனாரிட்டி மக்களான ஹிந்துக்கள் கடுமையான கஷ்டங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். அங்கிருந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தவர்களுக்கு இந்தியாவிலும் சரியான வசதிகள் ஏற்படுத்தப்படுவதில்லை.

    நேருவின் வாய்தா போடும் குணத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு இது.

    ஒளிபொருந்திய ஹிந்து தேசம்: 

    மெக்காலேவின் குருட்டுத்தனத்திற்கு மாறாக எட்மண்ட் பர்க் நம் தேசத்தின் உயர்வையும் நம் தேச கலாச்சாரத்தையும் புரிந்து கொண்டிருந்தார்.

    ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் உரிமையாளராக, தன் சக ஆங்கிலேயர்களை இவ்விதம் எச்சரித்தார்: 

    “பாரத தேசத்தில் குறைகள் இருக்கலாம். ஆனால் நாம் நேற்று புழுக்களாகப் பிறந்தோம். அவர்கள் என்றோ சாசனங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். பகை அரசர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் ஒரேவிதமான நியமத்திற்கு கட்டுப்பட்டிருப்பது என்பது அவர்களுடைய தைரியத்தைக் காட்டுகிறது. அரேபியர்களின் கொடூரத்தையும் ஆங்கிலேயரின் ஆட்சி அமைக்கும் பேராசையையும் அவர்கள் பார்த்துள்ளார்கள். நாம் நம் சிந்தனைகளின் குறுகிய எல்லைக்குள் அவர்களை இழுக்கக்கூடாது. இந்து மதம் பரவிய இடங்களில் நாடு ஒளி பொருந்தியதாக விளங்குகிறது.  குடியுரிமை தொடர்பான ஹிந்து மதத்தின்  ஒன்றிணைந்த வழிமுறைகள் அவர்களின் மக்களை ஆனந்தமாக வாழ வைக்கிறது. நாட்டை முன்னேற்றுகிறது”.

    சுபம்!

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty − 8 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...

    Exit mobile version