― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்மகாபாரதத்தில் எரிமலை

மகாபாரதத்தில் எரிமலை

- Advertisement -

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          மகாபாரதம், வன பர்வம் இக்ஷ்வாகு மன்னன் குவலயஸ்வா மற்றும் அவனது 21000 மகன்களால் கொல்லப்பட்ட ‘துந்து’ என்ற அரக்கனை விவரிக்கிறது. துந்து உண்மையில் ஒரு எரிமலை, இது ஒரு ராஜா மற்றும் அவரது இராணுவத்தால் நிரந்தரமாக மூடப்பட்டது.

துந்து, மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்ட அசுரர்களான மது-கைடபர்களின் மகன் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. மதுவும் கைடபனும் உண்மையில் பிரளயம், எரிமலை போன்ற உலகப் பேரழிவுகள்.

குவலயஸ்வா இக்ஷ்வாகு வம்சத்தில் 14ஆவது மன்னராக இருந்தார், அவர் மகாபாரதம், பாகதவம் மற்றும் ஹரி வம்ச புராணத்தில் இவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாகவத புராணம், ஒன்பதாவது காண்டத்தில் ‘துந்து’ என்ற அரக்கனை விவரம் உள்ளது. துந்து குவலயஸ்வாவால் கொல்லப்பட்டதாகவும், துந்துவிலிருந்து வெளிப்பட்ட சாம்பலில் அவரது மகன்கள் எரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. துந்துவைக் கொன்றதற்காக அல்லது அழித்ததற்காக, குவலயஸ்வாவுக்கு ‘துந்துமாரா’ என்று பெயரிடப்பட்டது.

          துந்துவை ஒரு அரக்கனாக கவிஞர்கள் கற்பனை. செய்துள்ளனர். துந்துவின் அசல் விளக்கம் உத்தங்க முனிவரால் மன்னருக்கு மகாபாரதத்தில், வன பர்வத்தில், ஹரி வம்சம் என்ற பதினோறாவது பகுதியில் எரிமலை “துந்து மருதன்வா” என்று சொல்லப்படுகிறது.

எனது ஆசிரமத்திற்கு அருகில் ஒரு தரிசு நிலம் உள்ளது. அங்கே மக்கள் வசிப்பதில்லை. மருதன்வ நாட்டில் உள்ள இந்த சமதளமான நிலம் முழுவதும் கடல் மணலால் மூடப்பட்டுள்ளது. துந்து என்ற அரக்கன் மணலுக்கு அடியில் ஒளிந்திருக்கிறான். அவர் ஆழமான, பிரமாண்டமான பெருமூச்சை அவ்வப்போது விடுகிறான். இதன் காரணமாக பூமியும் அதன் மீது உள்ள அனைத்து மரங்களும் மலைகளும்  நடுங்குகின்றன. ஏழு நாட்களுக்கு சூரியனை மறைக்கும் அளவிற்கு பெரும் தூசிப்படலம் வானத்தில் எழுகிறது. நிலம் நெருப்பைக் கக்குகிறது; வானத்தில் நெருப்பு பிரகாசிக்கிறது. ஒரு வாரத்திற்கு நிலநடுக்கங்களால் பூமி பயங்கரமாக நடுங்குகிறது. இதனால் என் ஆசிரமத்தில் தங்க முடியவில்லை. தயவுசெய்து இதை நிறுத்துங்கள்.”

மேலே உள்ள விளக்கம் துந்து ஒரு எரிமலை என்பதை நிரூபிக்கிறது.

          எரிமலை வெடிக்க மலையே தேவையில்லை. இது நிலத்தில் ஒரு விரிசல் மூலம் கூட வெடிக்கலாம். மருதன்வா என்பது குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள நிலத்தின் பண்டைய பெயராக இருக்க வேண்டும். கடந்த 15000-20000 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த எரிமலையும் வெடிக்கவில்லை என்பதை வரலாறு சொல்கிறது. எனவே இந்த சம்பவம் இந்த காலவரிசையை விட பழையதாக இருக்க வேண்டும்.

எரிமலை துந்து மருதன்வா கட்ச்

          ‘துந்து’ அரக்கன் பற்றி குவலயஸ்வா கேள்விப்பட்டு அவனுடன் போரிடப் படையெடுத்தான். அவன் மகன்களுடன் சேர்ந்து துந்துவுக்கு எதிராகப் போரிடச் சென்றான். அவர்கள் துந்துவைத் தேடிக் கொண்டிருக்கையில், ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அதில் அனைத்து இராணுவமும் குவல்யவனின் மகன்களும் எரிந்து சாம்பலானார்கள். மன்னன் அந்த மணலை தோண்டி கடலை அங்கே கொண்டு வந்தான். இந்த இடம் கட்ச் பகுதியில் அல்லது அரபிக்கடலுக்கு அருகில் உள்ள 2 பெரிய ஏரிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

குவலயஸ்வாவின் முயற்சியால் கடல் நீர் ஆழமாக கீழே சென்றதும் எரிமலை அமைதியடைந்தது. துந்து அரக்கன் கொல்லப்பட்டான்.

எரிமலை மலை மீதுள்ள உள்ள நரசிம்மர் கோவில்

          மலைகள் அல்லது குன்றுகளின் மேல் கட்டப்பட்ட பல கோயில்கள் உண்மையில் கீழே உள்ள ஆற்றல்மிக்க எரிமலைகளை அடக்குவதற்காகவே உள்ளன.

          ஆந்திராவில் குண்டூர் அருகே உள்ள மங்களகிரி மலையின் மீது ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு செயலற்ற எரிமலை ஆகும். இந்தியாவின் புவியியல் ஆய்வு 1800களில் இந்த உண்மையை உறுதிப்படுத்தும் பதிவுகளைக் கொண்டுள்ளது.

மலைக்கு அடியில் உறங்கிக் கிடக்கும் எரிமலையை பக்தர்கள் இறைவனுக்கு ஊற்றும் பானகம் (வெல்லம் தண்ணீர்) தணிக்கிறது என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். சர்க்கரைத் தண்ணீர் கலவை எரிமலையின் கந்தக சேர்மங்களுடன் எதிர் வினைபுரிகின்றன. ஊற்றப்படும் சர்க்கரைத் தண்ணீரில் பாதி எரிமலையால் உறிஞ்சப்பட்டு, மீதமுள்ளவை வெளியே வருகின்றன. தினமும் நிறைய வெல்லத் தண்ணீர் நிறையப் பயன்படுத்தப்பட்டாலும் இந்த மலையில் ஈக்கள் மற்றும் எறும்புகள் எதுவும் இல்லை, இது மலையின் கீழே உள்ள வெப்பத்தைக் குறிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version