வரலாற்று சாதனை வெற்றி கண்ட இந்திய அணி; தொடரை வென்றது

வரலாற்று சாதனை வெற்றி கண்ட இந்திய அணி, தொடரை வென்று சாதித்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். இதனால் நன்கு முன்னிலை பெற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 73 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது. மேலும் தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரையும் வென்று அசத்தியது.

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது.

இதை அடுத்து நேற்று ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின் தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி (36) ரன்-அவுட்டானார். ரகானே 8 ரன்களில் திரும்பினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். இவர் 115 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

நிகிடி ‘வேகத்தில்’ பாண்ட்யா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (30) அவுட் ஆயினர். தோனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர் (19), குல்தீப் (2) களத்தில் இருக்க, இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது.

பின்னர், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், ஆம்லா ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். டுமினி (1), டிவிலியர்ஸ் (6)  சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க. ஆம்லா (71) அரை சதம் அடித்து அசத்தினார். மில்லர் 36, கிளாசன் 39 நன்கு விளையாடிய போதும், ஒரு புறம் விக்கெட் சரிந்து கொண்டே வந்தது. முடிவில், தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 4-1 என்ற நிலையில் கைப்பற்றியது.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இந்த தொடர் வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 4 முறை (1992-93ல் 2-5, 2006-07 ல் 0-4, 2010-11ல் 2-3, 2013-14ல் 0-2) தென்னாபிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories