― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுகாது வலியா? பாட்டி வைத்தியம்!

காது வலியா? பாட்டி வைத்தியம்!

- Advertisement -

காதுகளில் வலி ஏற்படுவது என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு பிரச்சனையாகும். பலர் காது வலியை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது கிடையாது.

ஆனால், இது போன்ற வலிகளை புறக்கணிப்பது சில சமயங்களில் பெரிய பிரச்சனையில் வந்து முடிந்துவிடும். அதாவது, அடிக்கடி ஏற்படக்கூடிய காது வலி என்பது சைனஸ் தொற்று, டான்சில்லிடிஸ், துவாரங்கள் போன்ற பிரச்சனைகளில் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

எனவே, எப்போது காதுகளில் கடுமையான, தாங்கி கொள்ள முடியாத அளவு வலி ஏற்படுகிறதோ, உடனே காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணரை பார்ப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.

மனிதனின் காதுகளில் மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. உள் காது, நடு காது மற்றும் வெளி காது. பெரும்பாலும் காது வலி என்பது மூன்றில் ஏதாவது ஒரு பகுதியிலோ அல்லது 3 பகுதிகளிலோ தான் ஏற்படக்கூடும்.

பொதுவாக காது வலிக்கு காரணமாக 2 காது தொற்றுகள் கருதப்படுகின்றன. ஒன்று, வெளிப்புற காது தொற்று(otitis ecterna), இரண்டாவது, நடுப்பகுதி காது தொற்று (otitis media).

வெளிப்புற காது தொற்றின் அறிகுறிகள்:

காதுகளுக்குள் வீக்கம், அரிப்பு, தற்காலிக காது கேளாமை, திரவ வெளியேற்றம், கூர்மையான, தீவிரமான காது வலி மிதமான காய்ச்சல்

நடுப்பகுதி காது தொற்றின் அறிகுறிகள்:

வலி இருக்கும் காதில் கேட்கும் திறனில் பிரச்சனை கடுமையான வலி ,கடுமையான அரிப்பு , திரவ வெளியேற்றம் , வாந்தி , காய்ச்சல் , தலைச்சுற்றல்

ஏன் காதுகளில் வலி ஏற்படுகிறது?

கபம் மற்றும் வாத தோஷத்தின் விளைவாக காதுகளில் வலி ஏற்படுகிறது. கப தோஷம் செயலிழப்பதன் விளைவாக, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அரிப்பு, தொடர்ச்சியான வீக்கம், லேசான வலி, அசாதாரண செவித்திறன், பாதிக்கப்பட்ட காதில் இருந்து வெள்ளை வெளியேற்றம் ஆகியவை ஏற்படக்கூடும்.

அதுவே, வாத தோஷம் செயலிழப்பு, காதுகளில் இரைச்சல், உலர்ந்த காது மெழுகு, திரவ வெளியேற்றம், காது கேளாமை, பாதிக்கப்பட்ட காதில் கூர்மையான வலி போன்றவை ஏற்படும்.

காது வலிக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்:

1 பூண்டு எண்ணெய் பூண்டில் நோய்தொற்று எதிர்ப்பு பண்புகளும், வலி நிவாரண பண்புகளும் அதிகமாகவே உள்ளன. இவை, காது வலியை குறைக்க உதவும்.

பூண்டு எண்ணெய் தயாரிக்கும் முறை: முதலில் பூண்டு பற்களை தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 3-4 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அதில், தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து எண்ணெயை ஆற வைக்கவும். தயாரித்து வைத்துள்ள பூண்டு எண்ணெயை 2-3 சொட்டுகள் வலி இருக்கும் காதில் தொடர்ந்து ஊற்றி வந்தால், காது வலி குணமாகும்.

சிறு துண்டு பூண்டை காதில் வைத்துக் கொள்வது. உடல் வலி போக்கவும், நீங்கள் உலகுவாக உணரவும் பயனளிக்கிறது. இதனால் காதில் சற்று துர்நாற்றம் வரலாம். ஆயினும் அதை நீர் ஊற்றி கழுவினால் போய்விடும். நன்மை #2 நோய் நீக்கும் காவலன் பூண்டு. காதில் பூண்டை வைப்பதால், இது உடலில் சற்று சூட்டை அதிகரித்து, உடலில் வீக்கம் உண்டாவது, தலைவலி, காய்ச்சல், காது வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது என கூறப்படுகிறது.

2 இஞ்சி

பூண்டை போலவே, இஞ்சியிலும் நோய்தொற்று எதிர்ப்பு பண்பும், வலி நிவாரணமும் உள்ளது. சிறிது இஞ்சியில் சாறு எடுத்து, அதனை 2-3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் சேர்க்கவும். * இதனை நன்கு கலந்து 3-4 சொட்டுக்கள் வலி இருக்கும் காதில், வலி போகும் வரை தொடர்ந்து ஊற்றி வரவும்.

3 டீ ட்ரீ ஆயில் டீ ட்ரீ ஆயிலில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகளாலே, காது வலிக்கு ஒரு சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. சிறிது ஆலிவ் ஆயிலை மிதமாக சூடேற்றி, அதனுடன், 2-3 சொட்டுக்கள் டீ ட்ரீ ஆயிரை சேர்க்கவும். * இந்த எண்ணெய் கலவையை நன்கு ஆற விடவும். பின்பு, 3-4 சொட்டு எண்ணெயை வலி இருக்கும் காதில் தொடர்ந்து ஊற்றி வலி இல்லாமல் போகும்.

4 மா இலைச் சாறு நிறைய பேருக்கு தெரிந்திருக்காது, மா இலையில் நோய் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளது என்பது. இதனாலேயே, காது வலிக்கு மா இலையின் சாறு சிறந்த மருந்தாக திகழ்கிறது. மா இலைகள் சிலவற்றை எடுத்து நன்கு கசக்கி, சாறு எடுத்துக் கொள்ளவும். வலி இருக்கும் காதில் மா இலையின் சாற்றை ஊற்றுவதற்கு முன்பு சிறிது மிதமான சூடேற்றி கொள்ளவும்.

5 ஹெர்பல் டீ குடியுங்கள் பொதுவாக ஹெர்பல் டீ குடிப்பது மொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தை நல்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதனாலேயே, காது வலி இருந்தாலும் ஹெர்பல் டீ குடிப்பதால், காது வலி தீரும். இதிலிருக்கும மென்மையான பண்புகள் வலியை குறைக்க உதவும். காது வலி இருக்கும் போது, துளசி டீ அல்லது கெமோமில் டீ குடித்தால், வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

6 ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளாலேயே, காது வலிக்கு சிறந்த அருமருந்தாக இது பார்க்கப்படுகிறது. 12 மணி நேர இடைவேளையில், தொடர்ந்து ஆப்பிள் சிடர் வினிகரை 3-4 சொட்டுகள் வலி இருக்கும் காதில் ஊற்றி வரவும்.

காதில் ஆப்பிள் சைடர் வினிகர் முக்கிய பஞ்சைக் கொண்டு அடைத்தால் பாக்டீர்யா மற்றும் வைரஸ்கள் வளருவதை அடியோடு அழிக்கலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகள் எந்தவொரு உடனடி நிவாரணத்தையும் தந்துவிடாது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே நீங்கள் விரும்பிய பலனை அடைந்திட முடியும்.

நம்முடைய காதுகளுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்னும் திரவம் சுரந்து கொண்டிருக்கிறது. அப்படி சுரப்பதனால் காதுக்குள் சேருகின்ற அழுக்குகள் ஒரு கட்டத்துக்கு மேல் தானாக வெளியே வந்துவிடும். அதனால் காதுக்குள் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்த பொருள்களையும் உள்ளு விட்டு சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரவம் செய்யக்கூடாது.

நம்முடைய காதுகள் 80 தல் 85 டெசிபல் வரையிலும் இருக்கின்ற சத்தத்தைத் தாங்கிக் கொள்ளும். அதற்கும் மேல் சத்தம் நம்முடைய செவிப்பறைகளை எட்டுகிற போது, அந்த அதிக சத்ததத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சவ்வு கிழிந்துவிடும்.

சிலர் காதில் இயர்போளை எப்போதும் மாட்டிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ பாட்டு கேட்டுக் கொண்டே அப்படியே இயர்போனோடு தூங்கிவிடுவார்கள். அதிக சத்தம் வெளிவரும் வீடியோ கேம், படம் பார்ப்பது, செல்போன் பேசிக் கொண்டிருப்பது ஆகியவை காதுகளில் பெரும் வலியை ஏற்படுத்தும். அதனால் ஒரே காதில் வைத்துப் பேசக்கூடாது. அவ்வப்போது காதுகளை மாற்றி மாற்றி பேச வேண்டும்.

சிலர் காதுவலி வந்தால் தேங்காய் எண்ணெய் இல்லையென்றால் நல்லெண்ணெயைக் காய்ச்சி வெதுவெதுப்பான இருக்கும்போது காதுக்குள் விடுவார்கள். இதை செய்யவே கூடாது. முதலில் காதுவலி எதனால் வந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளாமல் எண்ணெயை ஊற்றினால் அது வீண் விபரீதமாகிவிடும்.

இதுவே காதில் ஏதேனும் பூச்சி நுழைந்துவிட்டால் சில சொட்டு தேங்காய் எண்ணெயையோ அல்லது நல்லெண்ணெயையோ விட்டால் பூச்சி இறந்துவிடும். ஆனால் எண்ணெயை சூடுபடுத்தி ஊற்றக்கூடாது.

தலையை லேசாக சாய்த்து வைத்திருந்தாலே பூச்சி தானாக வெளியே வந்துவிடும்.

இந்த விஷயங்களையெல்லாம் முதலில் கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுவது மிக முக்கியம்.

தேங்காய்,

நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும்கூட என்கிறது சித்த மருத்துவம் காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வ‌லி குறையு‌ம்.

நல்லெண்ணெய்
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். நல்லெண்ணெயுடன் பூண்டும் ஓமமும் சேர்த்துக் காய்ச்சி காதில் விட்டால் காதுவலி குறையும்.

தூதுவளை
இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை இது .வாரம் இருமுறை இதன் இலையை ஏடுத்து ரசம் , கஷாயம் , அல்லது சூப் வைத்து குடித்தால் தீராத சளி , இருமல், அத்தனையும் விரட்டி அடித்துவிடும்.தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.

தூதுவளை இலைகள் 2௦ பெரிய இலைகளாகப் பறித்து சுத்தம் செய்து அவற்றை அம்மியில் சிறிதளவு நீர் விட்டு நசித்து ஒரு மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும் அவற்றை காலை, மாலை வேளைக்கு 2 சொட்டு சீழ் வரும் காதில் தொடர்ந்து 3 நாட்கள் விட்டுவர குணமாகும். ஒவ்வொரு முறையும் பஞ்சினால் காதை அடைத்துக் கொள்ள வேண்டும்.

தாழம் பூ
தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியுடையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளிகளை கா‌தி‌ல் ‌விட்டால் காது வ‌லி, கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.

மருதோன்றி
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.மருதா‌ணியின் வேரை நசு‌‌க்‌கி‌ அதில் வரும் சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட்டால், காது வ‌லி ‌தீரு‌ம்.

கிராம்பு
கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.கொஞ்சம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை போட்டு சூடு செ‌ய்து, பின் அ‌ந்த எ‌ண்ணெய்யை வ‌லி உ‌ள்ள கா‌தி‌ல் விட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.

குப்பைமேனி இலைகள் நெல்லிக்காயளவு பறித்து சுத்தம் செய்து அதை நசித்து மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும். இந்த சாற்றில் 2 சொட்டு வலியுள்ள காதில் விட்டு வர வலி நீங்கும்.

வாழை மட்டையை அனலில் வாட்டி முறுக்கினால் வரும் சாற்றைப் பிழிந்து அதில் 2 சொட்டு வலியுள்ள காதில் விட வலி நீங்கிவிடும்.

ஒரு பெரிய காய்ந்த மிளகாயை எடுத்து காம்புப் பக்கம் கிள்ளி விட்டு விதைகளை உதிர்த்து விட வேண்டும். மிளகாயின் ஓட்டை வழியே 1 ஸ்பூன் காய்ச்சிய நல்லெண்ணெயை மிளகாயின் உட்புறம் ஊற்றி சூடு ஆறியபின் வலியுள்ள காதில் விட வலி நீங்கிவிடும்.

பழுத்த எருக்கன் இலை ஒன்றைப் பறித்து மேலும் கீழும் நெய்யைத் தடவி அனலில் வாட்டி நசுக்கினால் வரும் சாற்றில் 2 சொட்டு வலியுள்ள காதில் விட வலி சரியாகும்.

ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வரும் சாற்றை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி வலியுள்ள ஒவ்வொரு காதிலும் 2 சொட்டு காலை, மாலை 2 நாட்கள் விட்டு வந்தால் வலி நீங்கும்.

காதில் சீழ் வடிதல் குணமாக:

நாயுறுவி இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தமான நீரில் கழுவி அம்மியில் நசித்து மேலே கூறியபடி ஒரு துணியில் வைத்து முறுக்கினால் வரும் சாற்றை எடுத்து சீழ் வரும் காதில் காலை, மாலை 2 சொட்டு வீதம் 2 நாட்கள் விட்டுவர குணம் பெறலாம்.

நாட்டு மருந்து கடையில் இந்துப்பு 1௦ கிராம் வாங்க வேண்டும். தோல் சீவிய சுக்கு 1௦ கிராம் இரண்டையும் நைசாக தூளாக்கி ஒரு சிறிய சட்டியில் 5௦ மில்லி நீர் விட்டு அதில் தூளைப் போட்டு காய்ச்சி, பின் இறக்கி ஆறியதும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, கஷாயத்தை ஒரு சிறிய பாட்டலில் ஊற்றி வைத்துக் கொண்டு சீழ் வரும் காதில் காலை, மாலை 2 சொட்டு சீழ் நிற்கும் வரை விட்டு பஞ்சினால் காதை அடைத்துவர நிவாரணம் கிடைக்கும்.

ஜாதி மல்லிகை இலைகள் 3௦ஐப் பறித்து சுத்தம் செய்து லேசாக உணர்ந்த உடன் ஒரு நடுத்தர கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இலைகளைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். சூடு ஆறியதும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி எண்ணெயை ஒரு சிறிய பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலை, மாலை காதில் 2 சொட்டு தொடர்ந்து சீழ் நிற்கும் வரை விட்டு வர வேண்டும். அவ்வப்போது காதில் பஞ்சினால் அடைத்து கொள்ள வேண்டும்.

காதில் இரைச்சல் குணமாக:

சிறிய வெங்காயம் 4,5 எடுத்து தோலுரித்து நசுக்கி ஒரு மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும். அந்த சாற்றில் 2 சொட்டு ஒவ்வொரு காதிலும் 2 நாட்கள் விட இரைச்சல் நின்று விடும்.

முசுமுசுக்கை இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தம் செய்து அத்துடன் 3 சிறிய வெங்காயம் தோலுரித்து இரண்டையும் அம்மியில் லேசாக நீர்விட்டு நசித்து சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும் அதை காலை, மாலை 2 சொட்டு 2 நாட்கள் விட சரியாகும்.

காது மந்தம் குணமாக:

துளசி இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தம் செய்து லேசாக நீர் விட்டு நசித்து மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதல் 2 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை அளவு நைசாக தூளாக்கி இந்துப்பை போட்டு குழப்பி, ஒவ்வொரு காதிலும் 2 சொட்டு வீதம் காது நன்றாக கேட்கும் வரை காலை, மாலை தினசரி விட்டு வந்தால் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

திருநீற்றுப் பச்சிலைச் செடியின் 2,3 கொம்புகளை ஒடித்து அதை தணலில் வாட்டி நசுக்கியும் இலைகளைப் பறித்து நசுக்கி இரண்டையும் ஒரு துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்து அதில் ஒவ்வொரு காதிலும் 2 சொட்டு காலை, மாலை தொடர்ந்து 7 நாட்கள் செய்ய நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

பத்துப் பூண்டுப் பற்களை தோலுரித்து, ஒரு பெரிய சில்வர் கரண்டியில் 5௦ மில்லி நல்லெண்ணெய் விட்டு அதில் பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். பின் எண்ணெயை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி ஒரு சிறு பாட்டிலில் இருப்பு வைத்து தினமும் காலை, மாலை 2 சொட்டு வீதம் ஒவ்வொரு காதிலும் தொடர்ந்து 1௦ நாட்கள் விட்டு வர காது மந்தம் சரியாகிவிடும்.

காதடைப்பு குணமாக:

தூதுவளை இலைகளைப் பறித்து சுத்தம் செய்து நசுக்கி ஒரு மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்து அடைப்பு ஏற்பட்டுள்ள காதில் 2 சொட்டு காலை, மாலை விட்டுவர ஒரே நாளில் சரியாகிவிடும்.

சிறுதேள் கொடுக்கு இலைகளைப் பறித்து நசித்து மேலே கூறிய முறைப்படி சாறு எடுத்து 3௦ மில்லி நல்லெண்ணெயைக் கலந்து ஒரு கரண்டியில் விட்டுக் காய்ச்சிய பின் ஆறியதும் மெலிதான துணியில் வடிகட்டி அடைப்புள்ள காதில் காலை, மாலை 2 சொட்டுவிட குணமாகும். சரியாகவில்லைஎனில் அடுத்த நாளும் மேலே கூறியவாறு செய்துவிட அடைப்பு நீங்கி குணமாகும்.

காதில் இரத்தம் வருதல் குணமாக:

வெள்ளை முள்ளங்கி இலைகளை லேசாக நீர் விட்டு நசித்து மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்து அதில் 2 சொட்டு இரத்தம் வரும் காதில் காலை, மாலை விட்டு காதில் பஞ்சை அடைத்துக் கொள்ள வேண்டும். 2 நாட்கள் செய்ய இரத்தம் வருவது நின்றுவிடும்.

காதில் சீழ் வடிதல் என்ற தலைப்பில் உள்ள சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் குணம் பெறலாம்.

காதில் ஈ, எறும்பு அல்லது பூச்சிகள் புகுந்துவிட்டால்:

இரண்டு ஸ்பூன் நீரில் அரை ஸ்பூன் உப்புத்தூளைக் கலக்கி காதில் ஊற்றி விரலால் நீர் வெளியே வராதபடி சிறிது நேரத்திற்கு அடைத்து 5 நிமிடம் கழித்து தலையை ஒரு பக்கமாக சாய்க்க உள்ளே புகுந்தது எதுவாயிருந்தாலும் அவை இறந்து நீருடன் வெளியே வந்து விடும்.

இரண்டு பூண்டு பற்களை எடுத்து கொண்டு, அதில் 2 ஸ்பூன் கடுகு எண்ணெய்யை சேர்த்து அந்த எண்ணெய்யை லேசாக சூடேற்றி பூண்டு சிறிது கறுப்பான நிறம் மாறும் வரை காய்ச்சி பின்பு ஆற விட்டு அந்த எண்ணெய்யை காதில் 2-3 சொட்டுகள் விட்டு வந்தால் காதுகளில் தோன்றும் தொற்று குணமாகும்.

சிறிதளவு ஓமம் மற்றும் நசுக்கிய பூண்டு பற்கள் அதனுடன் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்ச பின்பு பூண்டும், ஓமமும் சிவப்பாக மாறும் வரை சூடுபடுத்தி ஆற விட்ட பிறகு அந்த எண்ணெய்யை காது சொட்டு மருந்தாக பயன்படுத்தி வாரலாம்.

தேவையான அளவு துளசி இலைகளை நசுக்கி அதன் சாறை மட்டும் நன்றாக சக்கை இல்லாமல் வடிகட்டி கொண்டு அதை 2 சொட்டுகள் காதில் விடுவது காதிற்கு மிகவும் நல்லது, மேலும் துளசி காதிற்கு குளிர்ச்சியை தரும்.

காதில் ஏற்படும் வலிகளை குறைக்க கிராம்பு ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். மேலும் கிராம்பு நல்லெண்ணெய்யில் போட்டு வதக்கி பின்பு வெதுவெதுப்பான எண்ணெய்யை 2-3 சொட்டுகள் காதில் ஊற்ற வலி குறையும்.
கடுகு எண்ணெய் காதில் தோன்றும் நோய்த் தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வெதுவெதுப்பான கடுகு எண்ணெய்யை காதில் ஊற்றி வர காதில் ஏற்படும் தொற்றுகள் குறையும்.

மேலும் கடுகு எண்ணெய் காதில் தோன்றும் புண்களையும் ஆற்றும் ஆற்றலையும் கொண்டது.
வெதுவெதுப்பான நல்லெண்ணெயுடன் சிறிதளவு நசுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து காய்ச்சி பின்பு அதனை 1-2 ஸ்பூன் காதில் ஊற்றி வருவதும் நல்லது.

ஒரு இஞ்சி நன்றாக அரைத்து அதில் இருந்து கிடைக்கும் சாற்றை சிறிது நேரம் சூடேற்றி பின்பு அதை வெதுவெதுப்பாக பாதிக்கப்பட்ட காதில் ஊற்றி வர உடனடியாக காதில் உள்ள வலி குறையும்

ஒரு வெங்காயத்தின் சாற்றை நன்றாக பிழிந்து, அதை காட்டன் பஞ்சில் நனைத்து அதை காதில் பிழிந்து விட அழற்சி மற்றும் மைக்ரோ பியல் தொற்றால் ஏற்பட்ட அரிப்பு, சிவத்தல், வலி குணமாகும்.

வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு அல்லது வெங்காய சாற்றை காட்டன் உல் ப்ளக் மூலம் பாதிக்கப்பட்ட காதில் ஊற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய் காது வலிக்கு பெரிய மாயங்களை நிகழ்த்தும் என்பது அறியப்பட்ட ஒன்றே. ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கவும். குறுகிய வாயை கொண்ட ஒரு சுத்தமான குப்பியில் அதனை அடைக்கவும். அதிலிருந்து சில சொட்டுக்களை பாதிக்கப்பட்ட காதில் ஊற்றவும். உள்ளே சென்ற எண்ணெய் வெளியே வராமல் பார்த்துக் கொண்டால், அது அதன் வேலையை திறம்பட முடித்து விடும்..

உங்களுக்கு மூக்கடைப்பும் காது வலியும் சேர்ந்து இருந்தால், அது சளியினால் இருக்கலாம். மூக்கை சுத்தப்படுத்தினால், கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும்.

சுவாச பாதையில் இடைஞ்சல் இல்லையென்றால் காதில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும். இது வலியை குறைக்க உதவும். அழற்சியில் இருந்து விடுபட நீங்கள் வெங்காயத்தை ஒரு பேஸ்ட்டாக பயன்படுத்தலாம். வீக்கத்தால் உங்களுக்கு காது வலி ஏற்பட்டிருந்தால், வெங்காய பொடி மற்றும் தண்ணீரை கொண்டு பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை காதின் வெளிப்பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

உங்களிடம் ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் கீழ்கூறிய சேர்க்கையை பயன்படுத்தலாம். பூண்டு எண்ணெய் மற்றும் முல்லையின் எண்ணெயின் கலவை நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடவும் அழற்சியை குறைக்கவும் இந்த கலவை உதவும்.

உங்களுக்கு வெளிப்புற காதுகளில் எரிச்சல் இருந்தால், வெளிப்புற காதுகளில் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றி மெதுவாக தடவவும். இது மென்மையாக ஒத்தனம் கொடுப்பதை போல் இருக்கும். இதனை நாள் முழுவதும் செய்யலாம். .

மூக்கு குழாய்கள் மற்றும் காதுகளில் சேர்ந்திருக்கும் நீரை வெளியேற்ற நீரை கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் யூகலிப்டஸ் தைலத்தை ஊற்றுங்கள். ஆவி பறக்கும் இந்த தண்ணீரை சுவாசித்து, அடைப்பட்டிருக்கும் நீரை இந்த எண்ணெய் வெளியேற்ற உதவும்.

சளியினால் காதில் வலி ஏற்படுத்தால், உங்களின் உணவில் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் ஈ இதன் விளைவுகள் மறைமுகமாக இருந்தாலும் கூட, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுவடையச் செய்யும்..

1.வெற்றிலையை சாறு பிழிந்து ஒரு சில சொட்டுகளை வலியுள்ள காதுகளில் விட்டால் காது வலி குறையும். குறிப்பு 2: பெருங்காயத்தை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக காதில் சில துளிகளை விட காது வலி குறையும்.
3: எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து வடிகட்டி அதன் சொத்துகளை காதுகளில் விட வலி குறையும்.
4: கற்பூரத்தை காய்ச்சி அதன் சில துளிகளை காதுகளில் விட்டு, அந்த கற்பூர திரவத்தை காதுகளின் அடியில் கழுத்து பகுதிகளில் நன்கு சூடு பறக்க தேய்க்க காது வலி நீங்கும்.
5: குளிக்கும் போதோ அல்லது நீச்சல் பயிற்சிகளின் போதோ காதுகளில் நீர் புகா வண்ணம் பாதுகாக்க வேண்டும். அதிகளவு ஒலிகளை கேட்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இதனை சரியாக கடைபிடித்தாலே பாதி பேருக்கு காது வலியே வராது.

துளசி
துளசி இலையை வெந்நீரில் அரைத்து காதில் சில சொட்டுகள் விட, ஏற்பட்ட தொற்று நோய் தீரும்.

கடுகு எண்ணெய்
காதில் அவ்வப்போது 2-3 சொட்டு வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் சில துளிகள் விட்டு 10-25 நிமிடம் அசையாமல் இருக்கவும். இது காதில் உள்ள அழுக்கை எளிதாக சுத்தம் செய்யும்.

உப்பு
உப்பை சூடு செய்யவும். வெது வெதுபான பதத்தை அடைந்தவுடன் பஞ்சை அதில் முக்கி எடுக்கவும். இதைக் காதில் 10 நிமிடத்திற்கு வைத்தால் ஈரப்பதத்தை உரிஞ்சி காதில் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

ஆல்கஹால் கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் வினீகர் (vinegar) கொஞ்சம் சேர்த்து சில சொட்டுகள் காதின் உள்ள…ஊற்றினால் காதின் அழுக்குகள் வெளியேறி விடும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த மருத்துவத்தை நாமே செய்ய…கூடாது மருத்துவர்கள் மூலம்தான் செய்து கொள்ள வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version