Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சுபாஷிதம்: பிறர் கவனத்தைக் கவருதல்!

சுபாஷிதம்: பிறர் கவனத்தைக் கவருதல்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!
பிறர் கவனத்தைக் கவருதல்.

செய்யுள்:

கடம் பிந்த்யாத் படம் சிந்த்யாத் குர்யாத் வா !
யேன கேநாப்யுபாயேன ப்ரசித்த: புருஷோபவேத் !!

பொருள்: பானைகளை உடை. உடையை கிழித்துக் கொள். கழுதை போல் கத்து. ஏதாவது ஒரு விதத்தில் பிறர் கவனத்தைக் கவர்.

விளக்கம்: செய்திகளில் வராத தலைவனை மக்கள் மறந்து போவார்கள். ஏதோ ஒரு விதத்தில் செய்திகளில் இடம் பிடிக்க வேண்டும். பிறர் பார்வையை கவருவதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறும் குறும்பு ஸ்லோகம் இது. இவ்விதமாகக் கூட வெளிச்சத்திற்கு வரலாம். ஆனால் என்ன பயன்? முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வதை தவிர…!

அனைவரின் பார்வையும் நம் மேல் பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? வினோதமாக நடந்து கொண்டு பிறரை விட வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள வேண்டும். கழுதை போல் கத்தினால் வேடிக்கை பார்ப்பார்கள்.

பத்திரிக்கைச் செய்திகளில் இடம் பிடிப்பதற்கு சில தலைவர்கள் இந்த குறிப்புகளை கடைபிடிப்பது உண்டு. ஏதோ ஒரு விதத்தில் பொதுமக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அளிக்கப்பட்ட குறும்பு அறிவுரை இது. பிரபலங்களின் மீது செருப்பு வீசிய செய்திகள், அளிக்கப்பட்ட விருதுகளை திரும்பக் கொடுக்கும் அபத்தங்கள்… இதற்கு உதாரணங்கள்.

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version