கை நடுக்கம், மரத்தல் ஏற்படுகிறதா..? இத தெரிஞ்சுக்கோங்க!

hand 1 - Dhinasari Tamil

பஸ் அல்லது காரில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பயணிக்கும் போது சிலர் கை, கால் மரத்துப்போகும் தன்மையை உணர்கின்றனர். இது ஒரு சாதாரண விடயம் தான். ஏனெனில் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருத்தல் அல்லது நின்றநிலையில் நிற்றல் தான் இதற்கு காரணமாகும். அதாவது ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருக்கும் போது அல்லது நின்ற நிலையில் இருக்கும் போது குருதியோட்டம் தடைபடும். அதன் விளைவாகவே இந்த மரத்து போதல் தன்மை (Numbness Symptoms) ஏற்படுகின்றது.

என்றாலும் இந்த மரத்து போதல் தன்மை ஏற்பட வேறுபல காரணங்களும் வழிவகுக்க முடியும். பொதுவாக உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது ஒரு நோய் அல்ல. ஆனால் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளில் ஒன்றாக அது அமையலாம் என்பது தான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். குறிப்பாக உடலின் ஏதாவதொரு பகுதியில் மரத்து போதல் தன்மை உணரப்பட்டால் அது மூளை அல்லது முள்ளந்தண்டில் ஏற்பட்டுள்ள ஏதாவது உபாதையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை நீண்ட கால மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போகலாம். இது ஈரல் பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். அதேநேரம் இரண்டு கால்களிலும் மரத்து போதல் தன்மை உணரப்படுமாயின் அது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகக்கூட இருக்க முடியும். அதாவது குருதியில் குளுக்கோஸின் அளவு அதிகரித்து காணப்படுவதன் வெளிப்பாடாகவே இந்த மரத்து போதல் தன்மை வெளிப்படுகின்றது.

இவை இவ்வாறிருக்க, ஒரு சிலருக்கு இந்த மரத்து போதல் தன்மை பல ஆண்டுகளாக க் காணப்பட முடியும். அதற்கு பெரும்பாலும் மரபணு கோளாறு காரணமாக இருக்கலாம்.

மேலும் ஒரு சில நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள், புற்று நோயைக் குணப்படுத்தும் மாத்திரைகள் போன்றவாறான மாத்திரைகளைத் தொடர்ந்து பாவிப்பதன் விளைவாகவும், தைரொய்ட் ஹோர்மோன் சுரப்பு குறைவடைந்ததன் விளைவாகவும், உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்திருந்தாலும், உடலில் விட்டமின் பி 12குறைபாடுகள் காணப்பட்டாலும் கூட இந்த மரத்து போகும் உபாதை ஏற்படலாம்.

ஆனால் இந்த உபாதைக்கான காரணத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை ஒழுங்கு முறையாக அளிக்கும் போது இந்த கை, கால் மரத்து போதலைச் சீராக்கி குணப்படுத்தி விட முடியும். குறிப்பாக விட்டமின் பி 12நிறைந்துள்ள உணவு வகைகளை அன்றாடம் உண்பது இந்த உபாதைக்கு நல்ல தீர்வாக அமையலாம்.

ஆன போதிலும், குஷ்டரோகம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சினை ஏற்படும். இந்நோய்க்கு உள்ளானவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்வு இருக்காது. அதனால் குஷ்டரோகம் நோய்க்கு உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது இந்த உபாதை சீராகிவிடும்.

என்றாலும் நீரிழிவு நோயாளர்கள் இந்த உபாதையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இது மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்நோயாளர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்படுமாயின் அதன் விளைவாக அவர்களது நரம்புகள் அதிகளவில் பாதிக்கப்படும். அதனைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியே குருதியில் குளுக்ேகாஸின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும்.

இதேநேரம் சிலருக்கு தலையின் ஒரு பக்கத்தில் மாத்திரம் மரத்து போதல் தன்மை வெளிப்படும். இது பக்கவாதத்திற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதனால் இவ்விதமான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் நரம்பியல் மருத்துவ நிபுணரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் பக்கவாதம் போன்ற பாதிப்புக்களை அல்லது அவற்றின் தாக்கங்களைக் கூட தவிர்த்தோ குறைத்தோ கொள்ளலாம்.

ஆகவே கை, கால் மரத்து போதல் தன்மை உடலில் வெளிப்படுவது குறித்து கவனயீமாகவோ அல்லது அசிரத்தையாகவோ நடந்து கொள்ளக்கூடாது. இவை தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி செயற்படும் போது இந்த மரத்து போதல் தன்மையால் ஏற்படக்கூடியபாதிப்புகளைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நடுக்கம் என்பது இப்போது பலருக்கும் இருக்கும் குறைபாடு ஆகும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் ஆற்றல் குறைபாட்டால் நடுக்கம் ஏற்படுவது சாதாரண ஒன்றுதான். ஆனால் இன்று இளம் வயதினருக்கே நடுக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக கை நடுக்கம் என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும்.

நடுக்கத்தில் இரண்டு வகைகள் உள்ளது, ஒன்று ஓய்வு நேர் நடுக்கம் அதாவது தசைகள் ஓய்வில் இருக்கும்போது ஏற்படுவது. மற்றொன்று செயல்நேர நடுக்கம், இது வேலையில் ஈடுபட்டிருக்கும்போது ஏற்படுவது. இந்த பதவில் கை நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பலமடங்கு ஸ்களீரோசிஸ் ஆங்கிலத்தில் MS என்று அழைக்கப்படும் இந்த குறைபாடு உள்ளவர்கள் கை நடுக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மைய நரம்பு மண்டலத்தின் பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

தமனிகளில் இரத்தக்கட்டு ஏற்படும் போது அது மூளைக்கு செல்லும் இரத்தத்தை தடுப்பதால் அது மூளை பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நமது நரம்பியல் பாதைகளில் கோளாறுகள் ஏற்படுவதால் அது நடுக்கம் ஏற்பட காரணமாக அமைகிறது.

உடல்ரீதியாக மூளையில் ஏற்படும் பாதிப்புக்கூட நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி மூளையுடன் ஒருங்கிணைவு ஏற்படுவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நரம்புகளில் பாதிப்பு ஏற்படும் போது அது கை நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் செயல்நேர நடுக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. அதேசமயம் ஓய்வு நேர நடுக்கம் இரண்டு கைகளிலும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுவாக நடுக்கம் என்பது உடலின் ஒரு புறத்தில் இருந்துதான் தொடங்கும் பின்னர் அது உடல் முழுவதும் பரவும். அதிக உணர்ச்சிவசப்படும் நேரங்களிலும் கை நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது மிகவும் பொதுவான ஒரு இயக்க குறைபாடு ஆகும், இதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நடுக்கம் பொதுவாக உடலின் இரண்டு புறங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் பொதுவாக எந்த கை அதிக பயன்பாட்டில் உள்ளதோ அந்த பக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இது செயல்படும்போது வரலாம் அல்லது ஓய்வில் இருக்கும்போதும் வரலாம். பரம்பரை மூலமாக இது பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவருக்கு டிஸ்டோனியா பாதிப்பு இருந்தால் அவர்களின் மூளை உறுப்புகளுக்கு தவறான செய்திகளை அனுப்பும். இதன் விளைவாக தசைகள் அதிகமாக செயல்படுவது, செயல்படாமல் இருப்பது, விரும்பத்தகாத இயக்கங்கள் போன்றவற்றை செய்யும். இளம் வயதில் இருப்பவர்களுக்கு உடலின் எந்த தசைகளில் வேண்டுமென்றாலும் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
காஃபின் மற்றும் ஆம்பெட்டமைன்கள் போன்ற நடுக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களின் உபயோகத்தை குறைக்க வேண்டும். இது நடுக்கத்தில் இருந்து பெரிய நிவாரணத்தை வழங்கும். உடல் சிகிச்சை என்றழைக்கப்படும் பிஸிக்கல் தெரபி உங்கள் தசைகளின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வரவும், வலிமையை அதிகரிக்கவும், செயல்பாட்டை கட்டுப்படுத்தவும் உதவும். பதட்டம் மற்றும் பயம் போன்றவை நடுக்கம் ஏற்பட காரணமாக இருந்தால் அதற்கு உளவியல் சிகிச்சை தர வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,099FansLike
379FollowersFollow
74FollowersFollow
0FollowersFollow
3,868FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version