― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅதிதி தேவோ பவ: டிரம்பின் ஹிந்தி ட்வீட்டுக்கு மோடியின் பதில்!

அதிதி தேவோ பவ: டிரம்பின் ஹிந்தி ட்வீட்டுக்கு மோடியின் பதில்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். ஆமதாபாத் வந்திறங்கிய அவர், சபர்மதி ஆசிரமத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக, டிரம்ப் இந்தியாவுக்கு வரும் முன்னர், ஹிந்தியில் ஒரு டிவிட்டர் பதிவினைச் செய்திருந்தார். அதுகுறித்து கருத்து தெரிவித்த மோடி, இந்தியாவுக்கு வருகை தரும் 7வது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதுவரையிலும், இந்தியாவுக்கு வந்த எவரும் ஹிந்தியை ஒரு இருதரப்பு தொடர்பு ஊடகமாக பயன்படுத்தியதில்லை. இந்த ட்வீட் இந்தியாவின் மென்பொருள் துறையின் சக்தியைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார் மோடி.

மேலும் டொனாட்ல் ட்ரம்பை வரவேற்கும் விதமாக அதிதி தேவோ பவ என்று குறிப்பிட்டு, விருந்தினரைப் போற்றுவோம் என்று தெரிவித்திருந்தார். பாரதத்தின் பண்டைய வேத ஞானக் கருத்து இது என்பதும், அதனை பிரதமர் மோடி குறிப்பிட்டு, நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பதும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார், அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள்

இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி

விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர்

கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது

இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி

இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு

வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு இந்தியா

இந்தியா எங்களது இதயத்தில் இடம் பிடித்த நாடு

வறுமையில் இருந்து பல கோடி இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்

இந்திய படைகளுக்கு ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை வழங்க தயார்

விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும்

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்

தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன்

‘டைகர் டிரயல்’ என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும்

ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல் கட்டுவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு – என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version