― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஷஹீன்பாக் பயிற்றுவிக்கும் பாடம்!

ஷஹீன்பாக் பயிற்றுவிக்கும் பாடம்!

- Advertisement -

எழுதியவர்: ஜே. பட்டாச்சார்ஜீ
மொழியாக்கம்: சக்கரத்தாழ்வார்

(எழுத்துக்குச் சொந்தக்காரர் எழுதிய இந்த அருமையான ஆய்வுக்கட்டுரையை நீங்கள் கண்டிப்பாகப் படியுங்கள், தெரியுங்கள், உணருங்கள், அனைவருடனும் பகிருங்கள்; ஏனென்றால் இது வாழ்வா சாவா என்ற போராட்டத்தின் ஒருகட்டம். புரிதலின்மை காரணமாக நாம் தோற்றால், இழப்பு நமக்குத் தான், இதன் விலை நமது மட்டுமல்ல, நமது சந்ததிகளின் உயிரும் தான்)

கடந்த இருமாதங்களாக நான் ட்விட்டரில் நிகழ்த்திய எனது ஊடாடல்களின் முடிவில் தெரிந்து கொண்ட உண்மை என்னவென்றால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற உண்மை.

அவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானம் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஊடுறுவல்காரர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தான் போராடி வருகிறார்கள். இது ஜனநாயகம், சமயசார்பின்மை, அரசியலமைப்புச்சட்டம் என்ற போர்வையில் அரங்கேற்றப்படுகிறது.

ஒரு இஸ்லாமியனின் மனோவியலை, இஸ்லாத்தின் கண்ணோட்டம் கொண்டு நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்த மூலையில் இருக்கும் இஸ்லாமியனும் உங்கள் சகோதரன் என்பதால் அவனுக்கு உதவிகள் செய்து, ஆதரவளிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் இஸ்லாம் இஸ்லாமியர்களுக்குக் கற்பிக்கிறது.

ஆனால் அதே வேளையில், உங்கள் பக்கத்து வீட்டிலேயேகூட இஸ்லாத்தைச் சேராத ஒரு காஃபிர் இருப்பாரேயானால், அவர் வெறுக்கப்பட வேண்டும், மதமாற்றம் செய்யப்பட்டு, திம்மியாக்கப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும். (திம்மி என்றால் ஒருவகையில் சம உரிமைகள் இல்லாத இரண்டாம்நிலைக் குடிமக்கள் என்று பொருள் கொள்ளலாம்)
இந்த எண்ணம் இஸ்லாத்தில், இஸ்லாமிய உலகம் அல்லது உம்மா என்ற கோட்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக முஸ்லீம்களும், குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதிகளும் இந்த உம்மாவிடத்தில் விசுவாசம் கொண்டவரகளாக இருக்க வேண்டும். அதுவும் இந்தியா போன்ற இஸ்லாமிய தேசமல்லாத அல்லது மதச்சார்பின்மை கொண்ட தேசத்தில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இது அதிகம் பொருந்தும். இந்தவகையில் இந்திய இஸ்லாமியர்களின் விசுவாசம் நாட்டின் எல்லைகளைத் தாண்டியது, அவர்களுக்கு நாடு ஒரு பொருட்டல்ல, உலக இஸ்லாமியர்கள், இஸ்லாம் ஆகியவை மட்டுமே முதன்மை பெறும்.

(இங்கே நாம் கவனிக்க வேண்டிய மேலும் ஒரு விஷயம் என்னவென்றால், கிறிஸ்தவத்திலும் இதனை ஒட்டிய நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விசுவாசம், நாட்டை ஒரு பொருட்டாக எண்ணாத எண்ணோட்டம் உண்டு. கிறிஸ்தவத்திலும் சரி, கம்யூனிஸ்டுகளிடத்திலும் இது உண்டு. அவர்கள் உலக கிறிஸ்தவர்கள், உலகம் கம்யூனிஸ்டுகளுக்காக குரல் கொடுப்பார்கள்; அந்த விசுவாசத்திற்கெல்லாம் பிறகு தான் நாட்டுப்பற்று, நாட்டின் மீது விசுவாசம் எல்லாம்)

இந்த நாட்டிற்கு அப்பாற்பட்ட விசுவாசம் என்பது இந்திய இஸ்லாமியர்களின் மூளைகளுக்குள் ஆழ வேரூன்றியிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ காந்தியடிகளும் 1919 தொடங்கி 1924 வரையிலும் இதற்கு ஆதரவாக இருந்தார், நியாயப் படுத்தினார், பலம் சேர்த்தார் என்பது தான் உண்மை. கிலாஃபத் இயக்கத்தின் போது, துருக்கியின் ஆட்டோமான் கலீஃபாவிடம் இந்திய இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் விசுவாசத்திற்கு ஆதரவளித்ததோடு மட்டுமல்லாமல், நாட்டிற்கு அப்பாற்பட்டு இந்திய முஸ்லீம்களின் கொண்டிருக்கும் இந்த விசுவாசத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ஹிந்துக்களையும் வற்புறுத்தினார் காந்தியார்.

இத்தகைய செயல்பாடுகள் இரு சமயத்தாருக்கு இடையேயும் ஒரு இணைபிரியா பந்தத்தையும் உறவையும் ஏற்படுத்தும் என்று அவர் நம்பினார். ஆனால் ப்ரிட்டிஷாரின் ஆட்சியில் 1946 தேர்தல்களின் போது, இந்தியாவில் தற்போது இருக்கும் 95 சதவீத இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆனால் 1947 நாடு துண்டாடப்பட்ட பிறகு அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலேயே தங்கி விட்டார்கள். கண்ணிமைப்பதற்குள் அவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களானார்கள்.

இந்திய இஸ்லாமியர்களின் இந்நாளைய தலைமுறையினர் ஏதோ தங்கள் பாட்டான்கள் விரும்பி இந்தியாவில் தங்கியதாகப் புனைசுருட்டுப் புனைகிறார்கள்.

கோல்காத்தாவில் 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று இந்தியாவிடம் அவர்களுக்கு உள்ள விசுவாசம் குறித்து சர்தார் படேல் பலமான தனது ஐயப்பாட்டைத் தெரிவித்திருந்தார்.

ஷஹீன்பாக் என்பது உம்மாவை வேண்டி புரியப்படும் போராட்டம். இதனையே வேறு சொற்களில் கூற வேண்டுமென்றால், ஷஹீன்பாக் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கிலாஃபத் இயக்கம், இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பீடிக்க வந்திருக்கிறது.

அரசியல் இஸ்லாத்தை இந்தியாவில் பயன்படுத்திப் பார்ப்பது இது எனலாம். பிரதமர் மோதி அவர்கள் இதனை ஒரு பிரயோகம், application என்றழைக்கிறார். சில முக்கியஸ்தர்கள் ஷஹீன்பாக் கூட்டங்களில் உரையாற்றி, கூட்டத்தினரை தைரியமாக இருக்குமாறும், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுமாறும் வற்புறுத்தி இருக்கிறார்கள்; இந்த உரிமை கோரல் என்பது இந்தியாவிலிருந்து தங்கள் இஸ்லாமியப் பங்கைப் பிரிப்பதற்கு ஒப்பாகும்.

ஷஹீன்பாகின் அரசியல் இஸ்லாம், ஹிந்து இந்தியாவிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது. ஹிந்துக்களிடமிருந்து விடுதலை, ஜின்னா போல விடுதலை, உனக்கும் எனக்கு உறவு என்ன, லா இலாஹா இல்லல்லா, ஹிந்துக்களின் கல்லறையை அமைப்போம் நாம், போன்ற இஸ்லாமிய கோஷங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ராணா அய்யுப் போன்ற இந்திய ஜிஹாதி பத்திரிகையாளர், அவர்கள் பயன்படுத்தும் மொழி பற்றி யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என்கிறார். அதாவது கொச்சையாக, தேசவிரோதமாக, பிரிவினைவாதமாகப் பேசுவதும் கோஷம் எழுப்புவதும் அவர்களின் உரிமை என்கிறார்.

ஆக ஷாஹீன்பாக் என்பது ஒரு எளிய குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிரான போராட்டமல்ல, இது இந்தியாவில் பலமடங்கு அபாயகரமான, பலபங்கு பரந்துபட்ட இஸ்லாமியப் போராட்டம். ஷர்ஜீல் இமாமும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிதியளிப்பும் இதனை நிரூபித்திருக்கின்றன.

ஷாஹீன்பாகிற்கு கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும், மதச்சார்பின்மை அற்ற கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் வேறு சில பிராந்தியக் கட்சிகளும் அளிக்கும் முழு ஆதரவுக்கான காரணங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி. இந்திய கம்யூனிஸ்டுகள் நிகழ்கால இந்தியாவில் அரசியல்ரீதியாக வழக்கொழிந்து போனவர்கள். அவர்களால் தொல்லை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

தங்களின் இந்த தொல்லை ஏற்படுத்தும் திறத்தை அவர்கள் ஷஹீன்பாக் போன்ற இஸ்லாமிய காரணங்களுக்காகப் பயன்படுத்தி நாட்டிலே சீர்கேட்டைத் தூண்டி விடுகிறார்கள். அவர்கள் நாட்டிலிருக்கும் ஒட்டுண்ணிகள். இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு சிறிய அளவிலான பிராந்திய சக்தியாக காங்கிரஸ் முடக்கப்பட்டு விட்டது.

காங்கிரஸை அதன் பல்லாண்டுக்கால அதிகாரப் பீடத்திலிருந்து பாஜக அகற்றி விட்டது. இன்றைய நிலையில் காங்கிரஸ் மெல்ல இறந்து வரும் கட்சி; இதன் ஒரே கண்மூடித்தனமான குறிக்கோள் எப்பாடுபட்டாவது நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பில் பாஜகவிற்கு இக்கட்டை ஏற்படுத்தி, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்பது.

மதச்சார்பின்மைக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பிராந்தியக் கட்சிகளான ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பஹுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளுக்கு முஸ்லீம்களின் வாங்குவங்கி தான் உயிர்மூச்சாக விளங்குகிறது.

ஆகையால் தேசிய நலனுக்கு எதிராகக்கூட, இஸ்லாமியக் காரணங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அதிக சலுகை கொடுக்கப்பட்ட இஸ்லாமியர்கள், ஷஹீன்பாகில் இருக்கும் தங்கள் ஜிஹாதிக் கும்பலால் நாடு ஆளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக, இந்த ஜிஹாதிப் போக்கிற்கு எதிராக இந்தியாவின் ஹிந்துக்கள் ஒன்றுபடவில்லை என்றால், ஷஹீன்பாகும் அதன் ஜிஹாதிச் செயல்பாடுகளும், தாராளவாத ஹிந்துக்களை ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரால் முட்டாள்களாக்கி, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வரும். ஹிந்துக்களே, விழித்தெழுங்கள்!! இனி உங்கள் உறக்கம் மீளா உறக்கத்துக்கே வழிவகுக்கும்.

  • ஜடபேஸ்வர் பட்டாச்சார்ஜீ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version