― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபிரதமரின் ‘தன்னிறைவு பாரதம்’ திட்டம்: 5ஆம் நாளாக நிதியமைச்சரின் அறிவிப்புகள்!

பிரதமரின் ‘தன்னிறைவு பாரதம்’ திட்டம்: 5ஆம் நாளாக நிதியமைச்சரின் அறிவிப்புகள்!

- Advertisement -

கடந்த நான்கு நாட்களைப் போல் அல்லாமல், ஞாயிற்றுக்கிழமை இன்று முற்பகலிலேயே செய்தியாளர்களைச் சந்தித்து, 5ஆம் கட்ட புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத், என்ற தன்னிறைவு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நாட்களாக அறிவிப்புகளைச் செய்து வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்றும் சில அறிவிப்புகளைச் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 12ஆம் தேதி தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்; இந்த அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நாட்களில் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

அதன்படி, கடந்த நான்கு நாட்களாக தில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளைச் செய்தார். முதல்கட்ட அறிவிப்பில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.

2ஆம் கட்ட அறிவிப்பில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டங்களை அறிவித்தார். சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் இதில் இட பெற்றிருந்தன.

3ம் கட்ட, 4ம் கட்ட அறிவிப்புகளில், வேளாண்மை, தொழில்துறையினருக்கான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவரது அறிவிப்புகளில் இருந்து…

  • ஏழைகளுக்கும், பசியில் வாடுபவர்களுக்கும் உணவளிக்க வேண்டியது அரசின் கடமை-
  • நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியீடு.
  • ஏழைகளுக்கும், பசியில் வாடுபவர்களுக்கும் உணவளிக்க வேண்டியது அரசின் கடமை.
  • கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை வாய்ப்புகளாக மாற்ற நடவடிக்கை.
  • 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருள் கிடைப்பதை உறுதி செய்யும்.
  • ஜன் தன் கணக்கு மூலம் 20 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
  • 2.2 கோடி தொழிலாளர்கள் ரூ.3,950 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர்.
  • ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும்.
  • ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தில் 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கும்.
  • அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
  • இன்று 7 துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
  • பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள்.
  • 5வது கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்;
  • மிக சிக்கலான ஒரு காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்
  • சுய சார்பு பாரதம் திட்டத்தை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
  • சரக்குகளை கையாளுவதில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை.
  • நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம்.
  • பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் நேரடியாக பயன்பெற முடியும்.
  • தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும்.
  • 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தி உள்ளோம்.
  • தனித்துவம் மிக்க இந்தியாவை உருவாக்க இந்த திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.3660 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • 6.8 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2.20 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ.3950 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 2 மாதங்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் ரூ.10 கோடி அளவிற்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டுள்ளது.
  • தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும்.
  • 10025 கோடி ஜன்தன் கணக்குகள் மூலம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட உள்ளன.
  • பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.
  • ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.
  • இ-பாடசாலை திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப் புத்தகங்கள் சேர்ப்பு.
  • ஏற்கனவே 3 கல்விச் சேனல்கள் உள்ள நிலையில் மேலும் 12 புதிய கல்விச் சேனல்கள் தொடங்கப்படும்.
  • புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
  • ஊரடங்கு முடிவடைந்த பிறகு தொழில்துறை சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்த சீர்திருத்த அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
  • நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம்.
  • இக்கட்டான சூழலாக இருந்தாலும், இது ஒரு நல்ல வாய்ப்பு என பிரதமர் கூறி இருக்கிறார்.
  • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், கல்வி மற்றும் சுகாதாரம், வணிகம்.
  • பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுகள், எளிமையாக தொழில் துவ​ங்குவது.
  • நிறுவன சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க 15000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
  • மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன,
  • மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • 4113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இன்றைய 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது.
  • இதுவரை 87 லட்சம் N95 முகக் கவசங்களும், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்க 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும்.
  • ஊரக, நகர பகுதிகளில் சுகாதார நல மையங்கள் மேம்படுத்தப்படும்.
  • சுகாதார துறையில் பொது செலவின தொகை அதிகரிக்கப்படும்.
  • மக்கள் சுகாதார பரிசோதனை மையங்கள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்படும்.
  • ஐ.சி.எம்.ஆர் மூலம் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
  • சுகாதார திட்டங்களுக்கான செலவினங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.
  • கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தொழில்நுட்ப உதவியுடன் கல்வித்துறையை வலுப்படுத்த பிரதமர் இ-வித்யா திட்டம்.
  • டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கல்வி கற்பித்தல் உடனடியாக செயல்படுத்தப்படும்.
  • திக்‌ஷா என்ற பெயரில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே தேசம் ஒரே கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வசதி இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தப்படும்.
  • பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணையவழி கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மனோதர்பன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
  • தொடக்கக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும்.
  • ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான தொழில்துறைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.
  • தொழில் செய்வதை எளிமையாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
  • கொரோனா வைரஸ் காரணமாக திருப்பி செலுத்தப்படாத சிறுகுறு நிறுவனங்களின் கடன் வாராக் கடனாக எடுத்துக் கொள்ளப்படாது.
  • நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டமாக அமலுக்கு வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version