― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி காசோலை கொடுத்து... முதல்வரின் ஆறுதல் வார்த்தைகள்!

கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி காசோலை கொடுத்து… முதல்வரின் ஆறுதல் வார்த்தைகள்!

- Advertisement -
santhosh babu family

எல்லா விதத்திலும் உதவியாக இருப்பேன்.. என்றார் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆர்.

திங்கள்கிழமை நேற்று, கர்னல் சந்தோஷ பாபுவின் மனைவி சந்தோஷிக்கு 4 கோடி ரூபாய்க்கு செக் அளித்த முதலமைச்சர் கேசிஆர். அவரோடு அமைச்சர்கள் ஜெகதீஸ் ரெட்டி, வேமுல பிரசாத் ரெட்டி, சிஎஸ் சோமேஷ்குமார் இருந்தார்கள்.

எந்த உதவி தேவை ஏற்பட்டாலும் என்னிடம் கேளுங்கள்… தயங்காமல் என்னிடம் கேளுங்கள்… என்ற கேசிஆர்.

santhosh babu family

சாலை வழியாக சூர்யாபேட்டைக்கு சென்று கர்னல் சந்தோஷ் குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முதலில் அமர வீரரின் படத்திற்கு பூமாலை சமர்ப்பித்தார். மனைவிக்கு நாலு கோடி ரூபாய்க்கும் பெற்றோருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் செக்களித்தார்.

பஞ்சாராஹில்சில் 711 கஜம் வீட்டு நிலம் மற்றும் குரூப்-1 உத்தியோக வேலைக்கான பத்திரம் அளித்தார். கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸராக நியமித்து ஜீவோ வெளியிட்டார்.

கர்னல் சந்தோஷ் பாபு மரணம் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. நாட்டு பாதுகாப்புக்காக அவர் உயிர் தியாகம் செய்துள்ளார். இத்தகைய தியாகம் செய்த குடும்பத்திற்கு அரசாங்கம் எப்போதும் துணையாக இருக்கும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கர்னல் குடும்பத்தாருக்கு நம்பிக்கை அளித்தார்.

santhosh babu family

எல்லையில் சைனா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சூர்யா பேட்டையைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ பாபு குடும்பத்தை விசாரிப்பதற்காக முதலமைச்சர் கேசிஆர் திங்களன்று மதியம் 3:40 மணிக்கு சூர்யா பேட்டையில் உள்ள சந்தோஷ் பாபு வீட்டிற்கு சென்றார். முதலில் கர்னல் படத்திற்கு பூமாலை அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அமைச்சர்கள் ஜெகதீஷ் ரெட்டி, சிஎஸ் சோமேஷ் குமாரோடு சேர்ந்து கர்னல் மனைவி சந்தோஷி குழந்தைகள் அபிக்ஞா, அனிருத் மற்றும் பெற்றோர் உபேந்தர், மஞ்சுளா, தங்கை ஸ்ருதியோடு உரையாடி அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

நாட்டுக்காக சந்தோஷ் பாபு செய்த தியாகம் மறக்க இயலாதது. எப்போதும் மக்கள் நினைவில் நிற்கும். அரசாங்கம் சந்தோஷ் குடும்பத்திற்கு எப்போதும் உதவியாக ஆறுதலாக இருப்போம் என்று உத்தரவாதம் அளித்தார். எப்போது எந்த தேவை ஏற்பட்டாலும் தன்னை கேட்கும்படி கூறினார். சந்தோஷ் குடும்பத்தினரின் நலன்களை பார்த்துக் கொள்வதற்கு அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டிக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

santhosh babu family

முதலமைச்சர் ஆறுதல் அளித்ததும் குடும்ப அங்கத்தினர்கள் சோகத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.

கர்னல் சந்தோஷ பாபு மனைவி சந்தோஷிக்கு குரூப்-1 ஆபீஸர் வேலை அளித்து வெளியிட்ட பத்திரத்தை முதலமைச்சர் நேராக அவரிடம் அளித்தார். அதேபோல் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் எல்வி பிரசாத் கண் மருத்துவமனைக்கு அருகில் உள்ள 711கஜம் வீட்டுநிலம் தொடர்பான பத்திரங்களை கூட அவரிடம் அளித்தார். அதோடுகூட சந்தோஷிக்கு நாலு கோடி ரூபாய்க்கான செக்கும் பெற்றோருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக்கும் அளித்தார்.

வீட்டுக்கான இடத்தை முதலமைச்சர் நேராக தேர்ந்தெடுத்தார் என்று அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி யோடு கூட சிஎஸ் சோமேஷ்குமார் கர்னல் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

கரோனா பரவுதல் காரணமாக மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள் சிஎம் வருகையின் போது கட்டுப்பாடான ஏற்பாடு செய்தார்கள்.

சிஎம் கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்தை விசாரிப்பதற்காக வரப் போகும் நேரத்தில் ரெட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் முக்கிய தலைவர்களும் யாருமே வரக்கூடாது என்று முதலாகவே உத்தரவுகளை வெளியிட்டிருந்தார்கள். கரோனா கட்டுப்பாடுகளை அனுசரித்து முதலமைச்சரோடு கூட மூன்று அமைச்சர்கள் மட்டுமே கர்னல் குடும்ப அங்கத்தினர்களை சந்தித்து உரையாடினார்கள்.

santhosh babu family

“முதலமைச்சர் கேசிஆர் எங்களை அவர்கள் வீட்டில் விருந்துக்கு அழைத்து உள்ளார். துன்பமான சோகமான நேரத்தில் உதவியாக நிற்கும் முதலமைச்சர் கேசிஆருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி” என்று கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷி நன்றி தெரிவித்தார்.

சந்தோஷ் குமாரை திரும்ப அழைத்துவர இயலாது. ஆனால் அவர் இல்லாத குறையை எங்களால் முடிந்த அளவு தீர்ப்போம் என்று கேசிஆர் நம்பிக்கை அளித்தார் என்று அவர் தெரிவித்தார். காரியங்கள் முடிந்தபின் எங்கள் குடும்பத்தை முதல்வர் விருந்துக்கு அழைத்து உள்ளார் என்று சந்தோஷி தெரிவித்தார். எந்த வேலை வேண்டுமானாலும் கேட்க வேண்டும் என்றும் விரும்பும் டிபார்ட்மெண்டில் உத்தியோகம் தருவோம் என்றும் உத்திரவாதம் அளித்தார். குழந்தைகளோடு முதலமைச்சர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது எங்களுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருந்தது என்று சந்தோஷி கூறினார்.

கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு கமர்ஷியல் டாக்ஸ் ஆபீசர் (குரூப்-1 கேடரில்) நியமித்து அரசாங்க முக்கிய செயலர் சோமேஷ் குமார் திங்களன்று இரவு ஜியோ நம்பர் 80 வெளியிட்டார். அவருடைய நியமனத்தை பிரத்தியேகமாக கணக்கில் எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டார். அவர் 30 நாட்களுக்குள் தொடர்புள்ள துறை கமிஷனருக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று அதில் உத்தரவு உள்ளது. இந்த ஜீவோவின்படி சந்தோஷியின் சம்பளம் ரூ 40,270- 93,780 வரை இருக்கும். இதற்கு அலவன்ஸ் கூட இருக்கும். ஆனால் சந்தோஷி வேறு போஸ்ட் விருப்பப்பட்டால் அந்த விஷயத்தை இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டதாக தெரிகிறது.

முதலமைச்சர் எங்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அளித்தார். சந்தோஷ் பாபுவை திரும்ப அழைத்து வர முடியாது. ஆனால் அவர் இல்லாத குறையை எங்களால் இயன்றவரை தீர்ப்போம் என்று நம்பிக்கை அளித்தார். குரூப்-1 உத்தியோகத்தை அளிப்பதாக கூறினார். இந்த வாய்ப்பு எனக்கு அளித்துள்ளார். எந்த துறையில் சேர விரும்பினாலும் அந்த துறையை அளிப்பதாக கூறினார். 4 கோடி ரூபாய்க்கு குழந்தைகளின் பெயரிலும் ஒரு கோடி ரூபாயை என் மாமியார் பெயரிலும் செக் கொடுத்தார். பஞ்சாராஹில்சில் வசிப்பிடம் அளித்துள்ளார்.

இந்த தாக்குதலில் வீரமரணம் எய்திய பிற வீரர்களுக்கு கூட விரைவில் பொருளாதார உதவியை அளிப்போம் என்றார். எங்களுக்கு துணையாக நிற்கும் அரசாங்கத்திற்கும் முதலமைச்சர் கேசிஆருக்கும் உதவியளித்த மந்திரி ஜெகதீஷ்ரெட்டிக்கும் நன்றிகள். அரசாங்கத்திற்கும் எமக்கு உதவியாக நிற்கும் ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் . வீட்டில் நிகழ்ச்சிகளில் முடிவடைந்த பிறகு தங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்த வேண்டும் என்று கேசிஆர் அழைத்துள்ளதாக கூறினார்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version