― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதேசத்தின் மாபெரும் தொழிற்சங்கத்தை கட்டியமைத்த தத்தோபந்த் தெங்கடி! நூற்றாண்டில்...!

தேசத்தின் மாபெரும் தொழிற்சங்கத்தை கட்டியமைத்த தத்தோபந்த் தெங்கடி! நூற்றாண்டில்…!

- Advertisement -

தத்தாத்ரேய பாபுராவ் ததொபந்த் டெங்கடி
– 100 –

தத்தாத்ரேய பாபுராவ் ததொபந்த் டெங்கடி தீபாவளித் திருநாள் நவம்பர் மாதம் 10ஆம் நாள் 1920ல் மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதி ஆர்வியில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை முடித்து விட்டு நாகபுரி மௌரிஸ் கல்லூரியில் சேர்ந்தார். பள்ளியில் தனது முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார்.

தனது சட்டப் படிப்பை முடித்ததும் 1942ல் ஆர்.எஸ்.எஸ். முழுநேர  ஊழியராக முதலில் கேரளாவிலும் பின்பு வங்காள மாநிலத்திலும் தன் தேசியப் பணியைத் தொடர்ந்தார்.  பின்பு நாகபுரி திரும்பியதும் ஜன சங்கம், வித்யார்த்தி பரிஷத் மற்றும் INTUC தொழிற்ச் சங்கத்தில் அனுபவம் பெற்றார். 

பாரதீய மஸ்தூர் சங்கத்தைத் தொடங்கி இடதுசாரியத்துவ தொழிற்ச் சங்கத்திற்குச் சவாலாக விளங்கினார். அதன் பின்பு பாரதீய கிசான் சங்கம், ஸ்வதேஷி ஜாகரண் மன்ச், சர்வ பந்த் சமதர்ம மன்ச், அகில பாரதீய க்ரஹக் பஞ்சாயத் போன்ற இயக்கங்களை நிறுவி தேசிய எண்ணத்தை பலப்படுத்தினார். 

12 வருடம் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். எளிய வாழ்விற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார்.  பகவத் கீதையில் கூறப்படுள்ள ஜீவன்முக்திக்கு டெங்கடி ஒரு வாழும் உதாரணம் என விவேகானந்தா கேந்திரா பி.பரமேஸ்வரன் அவர்களால் புகழப்பட்டவர்.

அடுத்த நூற்றாண்டில் பரிதி துயில் நீங்கி சூர்யநாராயணராக எழும்போது பாரதத்தின் பொருளாதாரத் துறையில் சிகப்பு முதல் ஊதா, கடும் சிகப்பு வரை அனைத்துக் கொடிகளும் தேசியத்தில் ஐக்கியமாகி விட்டது என்று திருப்தி கொள்வான்

டெங்கடி பல  இயக்கங்களை  ஆரம்பித்து வைத்தாலும் அவற்றில் அவர் பெரும் அதிகாரப் பொறுப்புகளில் பங்கு வகித்ததில்லை.  கோடானுகோடி  தொண்டர்களுக்கு ஒளி விளக்காக அவர் விளங்கினார்.  1967ல் பி.எம்.எஸ்ஸின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்  பின்னர் 1975ல் அவசரநிலை பிரகடனத்தின் காரணமாக அந்த பொறுப்பிலிருந்து விலகினார்.  மிஸா சட்டத்திற்க்கு எதிராகப் போராட அமைக்கப்பட்ட லோக் சங்கர்ஷன சமிதியின் செயலாளராக டெங்கிடி ஸ்ரீ ஜெயப்பிரகாஷ்  நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்டார். 

அதன் மற்ற தலைவர்களான நானாஜீ தேஷ்முக் மற்றும் ரவீந்திர வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டபோது, டெங்கடிஜீ அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகும் நிலையை தவிர்க்க தலைமறைவானார்.  அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக வழி நடத்திய அவர் ஜனதா கட்சியினைத் தொடங்குவதிலும் பெரும் பங்கு வகித்தார். 

1975 முதல் 1977 வரை அவசரநிலைக்காலத்தில் இடதுசாரிகள், பழைய காங்கிரஸ், லோக்தள், அகாலி தள் முதலிய கட்சிகளுடனும் மொராஜி தேசாய், சரண்சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரசேகர், சுப்பிரமணிய சுவாமி, வி.எம்.தற்குண்டே, மோஹன் தரியா, மதுலிமாயே, சுந்தர் மோஹன் மற்றும் க்ருஷ்ணகாந்த் போன்றோருடனும் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின்  ஆதரவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

தொழிலாளர்களை தேசிய மயமாக்கு;
தொழிற்சாலைகளை தொழிலாளர் மயமாக்கு;
தேசத்தை தொழில் மயமாக்கு!

1977ல் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியபின் மொராஜி தேசாய் பிரதமரானபின் டெங்கிடி அரசியலைவிட்டு விலகி தனது பி.எம்.எஸ். பணியில் இணைந்தார்.

பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் மத்திய அமைச்சக குழுவில் டெங்கடிக்கு தொழிலாளர்களின் அமைச்சர் பொறுப்பை வழங்க விரும்பியதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு செய்தி நிலவியது. டெங்கடிஜீயின் அரசியல் சார்பற்ற தன்மையினை அனைவரும் நன்கு அறிந்திருந்தனர்.

அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் பி.எம்.எஸ்ஸை ஐ.என்.டி.யு.சி.–காங்கிரஸ் போல கட்சி சார்பு இயக்கமாக்க முயற்சித்தார்.  ஆனால் டெங்கடி ஒரு மாபெரும் இயக்கம் அரசியலுக்கு அப்பால் செயல்படவேண்டும் என்று எண்ணினார்.

டெங்கடி புகழுக்கும், அதிகாரத்திற்குமான இவற்றைப் போன்ற பல வாய்ப்புகளை துச்சமாக எண்ணி தன் கொள்கையை எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல் இருந்தார்.  அவர் மதமும் அரசியலும் தொழிற் சங்கத்தில் கலவாது காத்தார்.  இதை வாஜ்பாயின் என்.டி.ஏ. ஆட்சியின்போதும் நிரூபித்துக் காட்டினார்.  அவர் “நாங்கள் பைத்தியக்காரர்கள். கடை கோடி மனிதனின் கண்ணீர் துடைக்க தாய்நாட்டிற்காகவே இந்த பைத்தியக்காரத்தனம்.  நாங்கள் இதைச் செயல்படுத்த பைத்தியக்காரர்களாகவே இருக்க விரும்புகிறோம்.” என்று கூறினார். 

சுப்பிரமணிய சாமி தன் எழுத்துக்களில் குறிப்பிடும்போது, “அவசரநிலை பிரகடனத்தின்போது நான் ஒரு பெரும் நாயகனாக கருதப்பட்டேன். ஆனால் டெங்கடிஜீயும், மாதவராவ் முளேயும்தான் உண்மையான நாயகர்கள்.  அவசரநிலை போராட்டத்தில் பெரும் பங்காற்றிய ததொபந்த் டெங்கடிஜீ எனது ஆசானாக விளங்கினார். ததொபந்த் டெங்கடியின் அவசரநிலையை எதிர்த்து அவர் ஆற்றிய பணி ஒன்றே அவர் ஒரு வரலாற்று நாயகனாகத் திகழ போதுமானது.  ஆனால் மக்கள் இன்னும் இப்பெரும்பணியை அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது” என்றார்.

dattobant thengadi1

டெங்கடியின் தேசப்பணியானது செங்கோட்டையை நோக்கிச் செல்லும் புரட்சிகர சிகப்புக் குதிரையால் இயங்கும் சிகப்பு ரத்தத்தில் வாழும் இடதுசாரிகளின் பிடியில் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தை விடுவிப்பதில் நிறைந்திருந்தது. 

1950களில், பொதுவுடைமைவாதம்  தன் சிகரத்தை எட்டிய காலத்தில், ராஷ்ட்ர  சக்தியின் ஒலி கேட்க, தெங்கடியால் உருவாக்கப்பட்ட பாரத் மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) 23 நவம்பர்த் திங்கள் 1955 அன்று போபாலில் பூஜ்யத்திலிருந்து தொடங்கப்பட்டது. 

பூஜ்யத்திலிருந்து பேரண்டத்தினை உருவாக்கும் முனைப்பில் அக்காலத்தில் தொழிற் சங்கமோ, பொறுப்பாளர்களும், நிதியோ இருக்கவில்லை.  டெங்கடிஜீ இயற்கை நீதியிலும், பாரதீய கலாச்சாரத்திலும், சத்தியத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.

பி.எம்.எஸ். டெங்கிடியின் சிறந்த நிர்வாகத் திறனால் 35 ஆண்டுகளுக்குள் கம்யூனிச சங்கம் உட்பட அனைத்து தொழிற்ச் சங்கங்களையும் பின்னுக்குத்தள்ளி மஹோன்னத நிலையை அடைந்தது.  தனிமனித அதிகாரம் மற்றும் முதலாளிகளின் பிடியிலிருந்து தொழிலாளர்களை பி.எம்.எஸ். மீட்டதைக் குறிப்பிடுகையில் அவர் இச்செயல் “தொழிலாளர்களால், தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்களோடு நிறைவேற்றப்பட்டது” என்றே குறிப்பிடுகிறார். தொழிலாளர்களை தேசிய மயமாக்கு; தொழிற்சாலைகளை தொழிலாளர் மயமாக்கு; தேசத்தை தொழில் மயமாக்கு என்பதே அவரது தாரக மந்திரம்.

டெங்கடிஜ  ஸ்வதேசக்கொள்கையில் அபரிமிதமான பற்றுக்கொண்டவர்.  தொழிற்துறையை பரவலாக்கி சிறு, குறு தொழில்களை மேம்படுத்தி அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார்.  வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழிற்துறையில் முதலீடுகள் வேண்டும் என விரும்பினார்.  பொதுத்துறையை ஆதரித்தார்.  அவர் விஸ்வகர்மா எனும் சுய தொழில் முனைவோரை பலப்படுத்தவும் சுய வேலை வாய்ப்புக்காகவும் குரல் கொடுத்தார்.  டெங்கிடி பெருமளவில் சுரண்டலுக்கும், அநீதிக்கும் ஆளாக்கப்பட்ட அமைப்பு சாரா துறைகளை ஒருங்கிணைத்தார்.

நாங்கள் பைத்தியக்காரர்கள். கடை கோடி மனிதனின் கண்ணீர் துடைக்க தாய்நாட்டிற்காகவே இந்த பைத்தியக்காரத்தனம்.  நாங்கள் இதைச் செயல்படுத்த பைத்தியக்காரர்களாகவே இருக்க விரும்புகிறோம்.

மேற்கத்தியமயமாக்கல் என்பது நவீனமயமாகாது என்றே எண்ணினார்.  உலக வர்த்தக அமைப்பையும் IMF பன்னாட்டு நிறுவனங்களையும் கடுமையாக எதிர்த்தார்.  நம் நாடு ஏராளமான இயற்கை வளங்களைப் பெற்றிருக்கிறது, ஆதலால் மேற்கத்திய நாடுகள் உலகமயமாக்கல் என்ற முகமூடியோடு நம் வளத்தை சூறையாடி அவர்கள் தங்கள் மேம்பாட்டிற்காக நம்மைப் பயன்படுத்த எண்ணுகிறார்கள் என்று கூறினார். 

IMF மற்றும் உலக வங்கியின் கட்டாயத்தால் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல் கொள்கையை, இரண்டாம் பொருளாதாரச் சுதந்திரப்போர் என்று அறிவித்து கடுமையாக எதிர்த்தார்.  தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்க்க நூற்றுக்கணக்கான பேரணிகளை நாடு முழுக்க ஏற்பாடு செய்து டெல்லியிலுள்ள செங்கோட்டையிலும் ராம்லீலா மைதானத்திலும் மிகப்பெரிய தேசியப் பேரணிகளை நடத்தினார்.

ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர் :

தொலைநோக்கு பார்வை கொண்ட டெங்கடி 1984ம் ஆண்டு இந்தூரில் தொழிலாளர்களின் ஆர்வம் தேசிய நலனுக்கேற்ப உள்ளதாகக் கூறினார்.  “தேசம் நிலையாக இருக்கும் வரை தொழிலாளர்கள் வீழ்ச்சி அடையமாட்டார்கள். தேசம் வீழ்ச்சியடைந்தால் யார் தொழிலாளர்களைக் காப்பாற்றுவார்கள்? அதேபோல் தொழிலாளர்கள் நிலையாக இருக்கும் வரை தேசத்தை வீழ்ச்சியடைய விடமாட்டார்கள்.  ஆனால் தொழிலாளர் வீழ்ச்சியடைந்தால் நாட்டை காப்பாற்றுவது யார்?” என்ற அவர் தேச துரோகிகளாலும், இடதுசாரிகளாலும் சூழப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படையான நாட்டுப்பற்றின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்தார்.

இவ்வாறு டெங்கடி பொதுவுடைமைவாதத்தின் வேடத்தை உலகிற்கு அம்பலப்படுத்தத்துவங்கினார். டெங்கடி‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடு’  என்ற முழக்கத்தை ‘தொழிலாளர்களே உலகை ஒன்றுபடுத்து’ என்று மாற்றினார். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’திற்கு பதிலாக ‘வந்தேமாரம்’ என்றும் ‘பாரத் மா கீ ஜெய்’ என்றும் மாற்றினார். ‘நிர்பந்தம் எதுவாக இருந்தாலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதை நாம் தேசிய நலனுக்காகப் பணிபுரிந்து அதற்கு எதிராக முழு ஊதியம் கோருவோம்’ என்று மாற்றினார்.

சிகப்புக்கொடிக்கு பதிலாக காவிக்கொடியை பறக்கவிட்டு ‘விஸ்வகர்மா ஜெயந்தி’யை தேசிய தொழிலாளர் தினமாக அறிமுகப்படுத்தினார்.  இருப்பவர் மற்றும் இல்லாதவர் என்னும் பொதுவுடைமை சித்தாந்தத்தை முழுமையாக நிராகரித்தார்.  வர்க்க ஒத்துழைப்பு எனும் சகவாழ்வுக் கொள்கையையும் அநீதி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

<strong>தொழிலாளர்களை தேசிய மயமாக்கு தொழிற்சாலைகளை தொழிலாளர் மயமாக்கு தேசத்தை தொழில் மயமாக்கு<strong>

பொதுவுடைமை சித்தாந்தத்தை ஆழ்ந்து ஆய்வு செய்தவர்.  அக்கொள்கை பொருளை மையப்படுத்தி உள்ளதாலும் முரண்பாடுகள் உள்ளதாலும் அது நிலையானதல்ல என்றார். டெங்கடி கார்ல் மார்க்ஸ் மீது பெருமதிப்பு கொண்டவர்.  ஆனால் மார்க்சியத்தின் கொள்கைகளில் பல தவறானவை என்றும் மார்க்சின் கணிப்பு தவறு என்றும் டெங்கடி கூறினார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பெலேன்ஸ்கியிடமிருந்து பெற்ற கார்ல் மார்க்ஸ் அசல் சிந்தனையாளர் அல்ல. ‘தொழிலாளர்களுக்கு நாடு இல்லை’, ‘தொழிலாளர்களே! உங்களை அடிமைப்படுத்தும் விலங்கைத் தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லை’ என்பன மௌரெட்டிடமிருந்தும் ‘உலக தொழிலாளர்களே ஒன்றுபடு’ என்பது கார்ல் ஷாப்பரிடமிருந்தும் மார்க்ஸ் பெற்றவை என்றார் டெங்கடி  புரட்சி எனும் வாக்குகூட மார்க்ஸ் வழிவகுத்தபடி நடக்கவில்லை என்றார்.  ‘’ (முதலாளித்துவம்) எனும் நூல் வெளியிட்டு 31 ஆண்டுகளுக்குப் பின் 1898ம் ஆண்டு பெட்ரிக் ஏஞ்செல்ஸ் எனும் மார்க்ஸிய மேதை தங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் கூறியதனைத்தும் தவறு என்றதை சுட்டிக்காட்டினார்.

1970ல் டெங்கடிஜீ கான்பூரில் கம்யூனிசம்-மார்க்ஸிஸம் 1989க்குள் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றார்.   அவரது இரண்டு கணிப்புகளும் மெய்யானது.  2010க்குள் இம்பீரியலிஸம் வீழ்ச்சி அடையும் என்று கணித்ததும் இப்பொழுது மெய்யாகி வருகிறது.  டாக்டர் ஹெட்கேவர் அவர்களின் 100வது பிறந்த வருடமான 1989ல் நாகபுரியில் ஒன்று கூடிய ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் அகண்ட பாரதத்தின் படத்தின் முன்னால் “தேசிய மற்றும் உலக நிகழ்வுகளின் மெய்ஞ்ஞான பார்வை கொண்டு சொல்கிறேன் அடுத்த நூற்றாண்டில் பரிதி துயில் நீங்கி சூர்யநாராயணராக எழும்போது பாரதத்தின் பொருளாதாரத் துறையில் சிகப்பு முதல் ஊதா, கடும் சிகப்பு வரை அனைத்துக் கொடிகளும் தேசியத்தில் ஐக்கியமாகி விட்டது என்று திருப்தி கொள்வான்”’ என்றார்.  இந்த கணிப்பு தற்காலத்தில் நிஜமாகி வருகிறது.

1968ம் ஆண்டு பாராளுமன்ற குழுவின் உறுப்பினராகச் சென்றபோது ஹிரேன் முகர்ஜி எனும் கம்யூனிஸ்ட் தலைவர் “டெங்கடி! இந்த பேரண்டத்தில் எனக்குக் கிடைக்காத இடத்தை நீ பெற்று விட்டாய்” என்றதற்கு “இந்த நாட்டின் அடிக்கல்லின் கீழ் இருக்கும் ஒரு சிறு கல்லாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார் டெங்கடிஜீ.

அவ்வாறு நமது பாரத மாதாவின் பீடத்தின் அடிக்கல்லின் கீழ் இருக்கும் ஒரு சிறு கல்லாகவே இருப்போம்.

வந்தேமாதரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version