― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையைத் தொடங்கி வைத்து அமித் ஷா பேச்சு!

அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையைத் தொடங்கி வைத்து அமித் ஷா பேச்சு!

- Advertisement -

பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தொலைவு பாதயாத்திரை தொடக்க விழா இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான ஆர்.பி. உதயகுமார், ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள தில்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்ச்சர் அமித் ஷா ராமேஸ்வரம் வந்திருந்தார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தொடக்க விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசினார்கள். அதிமுக., சார்பில் ஆர்.பி. உதயகுமார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தேவநாதன் யாதவ், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.

பின்னர் தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியபோது…

இந்த புண்ணியபூமியான ராமேஸ்வரத்திற்கு நாம் அனைவரும் ஆண்டவன் சாட்சியாக வந்துள்ளோம். காரணம் தமிழகத்தில் தி.மு.க, ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

2024 தேர்தலில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக அமர வேண்டும் என்பதும் என்பதும் நமக்கு தெரியும். இதற்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டுளளனர். மிக நீண்ட இரவு விலகுவது போன்று தோன்றுகிறது. பிரதமர் சாமானியர் இந்தியாவில் நடப்பது சாமானியனின் ஆட்சி. பிரதமர் மோடி இதயத்தால் தமிழர். அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் பார்க்கின்றன. 2024ல் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வர நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்த யாத்திரை பாஜக.,வின் ஒவ்வொரு தொண்டனின் யாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற உள்ள யாத்திரை. என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. பிரதமர் மோடியின் சாதனைகளை தமிழகத்தில் விளக்கவே இந்த யாத்திரை நடத்துகிறோம்.

மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை இந்த அளவிற்கு உயர்த்தி பிடித்ததில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் திருக்குறளை பிரபலப்படுத்த வில்லை. மோடியின் ஆட்சியில் அனைத்து குடும்பங்களும் பயன் அடைந்து உள்ளது. திட்டங்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் மோடி உள்ளார். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது. பயனடைந்த ஒவ்வொருவரின் முகவரின் தான் பிரதமரின் முகவரி .

மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்திருக்கிறது. தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் இங்கு வந்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.

நம்முடைய கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால் ஐஎண்டிஐஏ., என்ற பெயரில் ஒரு கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன் கிழமை கேசிஆர் பிரதமர், வியாழக்கிழமை தாக்கரே பிரதமர், வெள்ளிக்கிழமை இன்னொருவர் புதிதாக சேருபவர் பிரதமர். ராகுல் காந்தி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர். ஏனென்றால் அன்றுதான் விடுமுறை. சனி, ஞாயிறுக்கு பிரதமராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை கொண்டு வந்து ஐஎண்டிஐஏ., என்கிறார்கள்.

இந்தியாவை தன்னுடைய மூச்சாக, தன்னுடைய டிஎன்ஏவாக, தன்னுடைய ரத்தமாக, தன்னுடை சதையாக, தன்னுடைய எலும்பாக வைத்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும் நம்முடைய பிரதமர் மோடி மறுபடியும் ஐந்தாண்டுகள் பிரதமராக வரவேண்டும்.

இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், தொண்டர்களும், நம்முடைய யாத்திரையாக கருத வேண்டும். இங்கு பேச மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். அவர் அதிக நேரம் பேச வேண்டும்… என்று அண்ணாமலை பேசினார்.

என் மண் என் மக்கள் யாத்திரை – என்பது முழு உலகிலும் தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், மாநிலத்தில் வாரிசு அரசியலையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் ஏழைகளின் நலனுக்கான ஒரு சகாப்தத்தை உருவாக்குவதற்கான யாத்திரை…- என்று அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

அவர் இந்த யாத்திரை குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது…

ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பாஜகவின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை கொடியசைத்து துவக்கி வைத்தேன். தமிழகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான பாஜக உறுதி பூண்டுள்ளது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலை வேரோடு அகற்றி, ஏழைகள் மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான அரசை அமைப்பதன் மூலம் திமுக ஆட்சி, தமிழகத்தை தவறாக கொண்டு செல்வதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற முழக்கத்தை இந்த நடைபயணம் எழுப்பும். மாநிலத்தின் 39 நாடாளுமன்ற மற்றும் 234 சட்டமன்ற தொகுதிகளை ஒட்டிய இந்த யாத்திரை, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சமூக நீதியின் வழியில் செயல்படுவதை இது எதிரொலிக்கும். இந்தப் பாதயாத்திரைக்காக திரு @annamalai_k அவர்கள் மற்றும் @BJP4TamilNadu குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலையின் இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசிய போது…

இந்த விழா மேடையில் அமர்ந்துள்ள அனைத்து கூட்டணி தலைவர்களுக்கும் வணக்கம். தமிழில் பேச முடியாததற்கு என்னை மன்னிக்க வேண்டும். இந்த ராமேஸ்வரம் பூமியானனது இந்தியாவின் ஹிந்து மதத்தின் பாரம்பரிய சின்னம். ராமநாத சுவாமி ஆசியுடன் தமிழகம் முழுதும் என் மண், என் மக்கள் என யாத்திரையை அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணம் தமிழகத்தின் பெருமையை காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டு செல்லும்.

தமிழ் மொழியை உலகம் முழுதும் கொண்டு செல்லும் பயணம் இது. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கை சீர்படுத்துவதற்கான நடைபயணம் இது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வரவே அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். 234 தொகுதிகளிலும் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். தமிழ்நாட்டை ஊழலில் இருந்து மீட்பதற்கான நடைபயணம் தான் என் மண், என் மக்கள் நடைபயணம்.

ஐ.நா.வில் தமிழின் பெருமை குறித்து பிரதமர் மோடி பேசினார். அதுமட்டுமல்ல தமிழின் சிறப்பை உலகமெங்கும் எடுத்துச் சென்றுள்ளார். காசி தமிழ்ச்சங்கம், செளராஷ்டிரா தமிழ்ச்சங்கமம் மூலம் தமிழ் பெருமையை வடக்கிலும் பரப்பியவர் பிரதமர் மோடி. மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை உயர்த்திப் பிடித்ததில்லை.

காங்கிரஸ், திமுக., ஆட்சியில் ரூ. 12,000 கோடி ஊழல் நடந்துள்ளது. இஸ்ரோ நிறுவனத்தில் ஊழல் செய்தது காங்கிரஸ் கூட்டணி. ஐஎன்டிஐஏ., கூட்டணியில் வாக்கு கேட்டுச் சென்றால் ஊழல் பற்றித் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். துல்லிய தாக்குதலை காங்கிரஸ் கூட்டணி எதிர்த்தது. யுபிஏ., கூட்டணி அரசு தமிழ் மொழியின் பின்னடைவுக்கு காரணம்.

சோனியாவுக்கு ராகுலை பிரதமராக்க ஆசை. மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு தனது மருமனை முதல்வராக்க ஆசை. ஐஎண்டிஐஏ., கூட்டணியில் உள்ளவர்களுக்கு வாரிசுகளை முதல்வராக்க ஆசை. பிரதமர் மோடி மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார். பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகிறார்.

தமிழக அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு. ஒவ்வொரு துறையிலும் திமுக., அரசு ஊழல் செய்து வருகிறது. ஊழலில் கைது செய்யப்பட்டவரை அமைச்சராக வைத்திருப்பது வெட்கக் கேடானது. முதல்வராக உள்ள ஸ்டாலின் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஊழல் செய்கிறது திமுக., அரசு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைத்தது?!

செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொன்னால் அவர் ரகசியங்களைப் போட்டு உடைப்பார்! அவரை ராஜினாமா செய்யச் சொல்லாதது ஏன் ? தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் அம்பலமாகியுள்ளது. அண்ணாமலை ஒரு டிவிட் போட்டால் தமிழக அரசில் பூகம்பம் ஏற்படுகிறது.

இலங்கையில் தமிழர்கள் ஒழிக்கப்பட்டதற்கு இதே கூட்டணி தான் காரணம். மத்திய அரசு தரும் நிதி மக்களுக்கு சென்று சேர்வதில்லை. தமிழ்நாட்டில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ தவிர்த்து பிற ரயில்வே திட்டங்களுக்காக ரூ.34 ஆயிரம் கோடி தந்துள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் 36 லட்சம் மக்ககளுக்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிவறை திட்டத்தை பிரதமர் தந்துள்ளார். 15 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்- திமுக., என்றால் நிலக்கரி, 2ஜி ஊழல் தான் நினைவுக்கு வரும். பிரதமர் 9 ஆண்டு கால ஆட்சியில ஊழலுக்கு எதிராகவும், குடும்ப வாரிசு அரசியலுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க சர்ஜிக்கல் விமானப்படை தாக்குதலை பிரதமர் நடத்தினார். காங்கிரஸ் கூட்டணியினர் நாட்டை வளப்படுத்த நினைக்கவில்லை குடும்பத்தை வளர்க்கவே நினைக்கின்றார்கள்.

ஒன்பது ஆண்டு ஆட்சிக் கால திட்டங்களின் கணக்குகளைக் காட்ட நான் தயார் என்று பேசினார் அமித் ஷா.

இன்று ராமேஸ்வரம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு கலாம் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிவிட்டு, அவர் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்க்கிறார். பின், ராமேஸ்வரம் தனியார் ஓட்டலில் நடக்கும், ‘கலாம் நினைவுகள் ஒரு நாளும் மறையாது’ என்ற நுாலை வெளியிடுகிறார். நுால் வெளியீட்டு விழாவில் அண்ணாமலையும் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version