Home இந்தியா 30 செயற்கைக் கோள்களுடன் ஏப்.1ல் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி- சி45 ராக்கெட்!

30 செயற்கைக் கோள்களுடன் ஏப்.1ல் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி- சி45 ராக்கெட்!

பிஎஸ்எல்வி சி – 45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 30 செயற்கைக்கோள்கள் ஏப்.1-ல் விண்ணில் ஏவப்படவுள்ளன. இவை 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப் படவுள்ளன என்பது சிறப்பம்சம்.

நாட்டின் முக்கியத் தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது, ‘எமிசாட்’ என்ற நவீன மின்னணு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி – 45 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் ஏப்ரல் 1-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக் கட்ட பணிகள் இப்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. எமிசாட் செயற்கைக்கோள் 420 கிலோ எடை கொண்டது. நமது ராணுவத்தின் உளவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். உள்நாட்டு டிஆர்டிஓ மையத்தின் (Defence Research and Development Organization) நேரடிகட்டுப்பாட்டில் இது இயங்கும்.

பிஎஸ்எல்வி ஏவுதலில் எமிசாட்டுடன் வணிக ரீதியாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 28 சிறிய வகையான செயற்கைக் கோள்களும், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி) தயாரித்த சிறிய நானோ செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப் படவுள்ளன.

இந்த செயற்கைக் கோள்கள் எல்லாம், உலகிலேயே முதல் முறையாக 3 வெவ்வேறு சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட உள்ளன என்பது இதன் சிறப்பம்சம்.  அதன்படி பிஎஸ்எல்வி ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்டு 763 கி.மீ,. தொலைவை அடைந்ததும் எமிசாட்டும், தொடர்ந்து 504 கிமீ தொலைவில் 250 கிலோ எடையுடைய 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்படும்.

அதன் பின்னர் ராக்கெட் இறுதி நிலையான பிஎஸ் 4 இயந்திரம் படிப்படியாக உந்தித் தள்ளப்பட்டு, சோதனை முயற்சியில் அதில் வைக்கப்பட்டுள்ள நானோ செயற்கைக் கோள் 485 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பிஎஸ் 4, சூரிய மின்தகடுகள் (சோலார் பேனல்கள்) மூலம் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • For the first time in the country’s space history, Indian Space Research Organization (ISRO) is going to launch a PSLV mission in March where it will release payloads of 30 different satellites in three different orbits.
  • In the space technology race in global level, India with Chandrayaan-1 and Mars Orbiter Mission India has proved that it is one of the forerunners in the race and knows exactly what it is doing.
  • ISRO centers began the launch assembly campaign for launch of the advanced electronic intelligence satellite EMISAT with 29 satellites on board the PSLV-C45 rocket.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version