புது தில்லி : காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் என்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்கின்றார்கள். இந்தப் புகாரை எத்தனை முறை கட்சித் தலைமையிடம் கொடுத்தும் அது, கண்டுகொள்ளவில்லை என்று கூறி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து சிவசேனைக்குத் தாவியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவர், அக்கட்சியின் தேசிய செயலாளர் கே.வேணுகோபாலிற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ” காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேர்ந்தேன். இளைஞர் காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அதை நிறைவேற்ற 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இந்த பதவி காரணமாக பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் நானும், குழந்தைகள் உள்ளிட்ட எனது குடும்பத்தினரும் சந்தித்துள்ளோம். நான் கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் கடந்த சில வாரங்களாக எனது சேவைகள் மதிக்கப்படவில்லை என்று கருதுகிறேன்.
கட்சியில் சில தலைவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை எடுத்துச் சொல்லியும் கட்சித் தலைமையும் கட்சியின் மேலிடமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. இதன் பிறகும் நீடிப்பது கண்ணியக்குறைவு என்பதால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று எழுதியிருந்தார்.
தேர்தல் நேரத்தில் செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றிய பிரியங்கா சதுர்வேதியின் ராஜினாமா மற்றும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது, ஊடகங்களிலும் அரசியல் மட்டத்திலும் அவரது குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
ஏதாவது அரசியல் பின்புலத்தில் இருந்தாக வேண்டிய நிலையில், பிரியங்கா சதுர்வேதி தற்போது உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் ஊடகங்களில் பிரியங்கா சதுர்வேதியின் முடிவும் குற்றச்சாட்டுகளும் பட்டிமன்றப் புயலைக் கிளப்பியுள்ளது.
எனà¯à®© சாரà¯, நீஙà¯à®•à®³à¯à®®à¯ திகிலான தலைபà¯à®ªà¯ செயà¯à®¤à®¿ கொடà¯à®•à¯à®•à®¿à®±à¯€à®°à¯à®•à®³à¯‹ எனà¯à®±à¯ செயà¯à®¤à®¿à®¯à¯ˆ விறà¯à®µà®¿à®±à¯à®ªà¯à®ªà¯à®Ÿà®©à¯ படிதà¯à®¤à¯‡à®©à¯, ஆனால௠பிரியஙà¯à®•à®¾ சதà¯à®°à¯à®µà¯‡à®¤à®¿ எனà¯à®±à¯ à®®à¯à®Ÿà®¿à®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà¯€à®°à¯à®•à®³à¯‡ !