― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்அவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்!

அவதூறு பிரசாரம் செய்யும் திருமா, சுந்தரவள்ளி மீது சேவாபாரதி சார்பில் புகார்!

- Advertisement -
Deputy Commissioner

சமூக தன்னார்வ தொண்டு அமைப்பான சேவாபாரதி குறித்து அவதூறு கிளப்பி, சாத்தான்குளம் சம்பவத்துடன் இணைத்து பொய் பிரசாரம் செய்யும் தொல். திருமாவளவன், சுந்தரவள்ளி, மனோஜ்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் அந்த அமைப்பின் சார்பில் புகார் அனு அளிக்கப்பட்டது!

இன்று காலை சென்னை கீழ்ப்பாக்கம் சரக காவல் துணை ஆணையரைச் சந்தித்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி சேவாபாரதி தமிழ்நாடு மாநில தலைவர் B. ரபு மனோகர் புகார் மனு ஒன்றினை அளித்தார். மாநில அமைப்புச் செயலாளர் கா.சீனிவாசன் உடன் இருந்தார்.

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருவர்  இறந்தது தொடர்பில் போலீசார் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சிபிசிஐடி விசாரணை நடத்தப் பட்டு வரும் நிலையில், சேவா பாரதி அமைப்பின் மீது குற்ற உணர்வுடன் (Criminal intention and Ulterior motive to divert the investigation in Sathankulam case)  – பொய்ச் செய்தி பரப்பும் நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும் – Youtube video வலைதளத்தில் இருந்து நீக்கவும் – முதல் தகவலறிக்கை பதிவு செய்து வழக்கு விசாரணை செய்யவும் கோரி, இந்த மனு அளிக்கப் படுகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொய்ச் செய்தி பரப்பும் You Tube சேனல் லிங்கள் என

  1. மனோஜ்குமார் – கருப்பர் கூட்டம்  – எச்சரிக்கை !! யார்  இந்த சேவா பாரதி – Friends of Police – RSS https://www.youtube.com/watch?v=Z1wsRGotUu8&feature=youtu.be
  • திருமாவளவன் – சாத்தான்குளம் படுகொலையில் RSS பின்னணி –
https://www.youtube.com/watch?v=WIrXAh6tUO4&fbclid=IwAR21QRRzGVQgIeZgXhP0mnNilZGNsh2kGEk4hkqKLv49nfFpzhmERzjHJOo

என்று மூன்று சுட்டிகள் அதில் இணைக்கப் பட்டுள்ளன.

இதுதொடர்பில், ரபு மனோகர் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது….

நான் நேற்று 03.07.2020 மேற்படி மூன்று வீடியோகளையும் பார்த்தேன். மேற்படி வீடியோக்கள் முழுவதும் பொய்யான தகவலும் சாத்தான்குளம் வழக்கு விசாரணையை திசை திருப்பும் விதமாக குற்ற மனப்பான்மையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

மேற்படி நபர்கள் வீடியோவில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு இறந்துபோன வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தால் நேரடியாக கண்காணிக்கப் பட்டு வரும் சூழ்நிலையில் மேற்படி CBCID போலீசார் விசாரணையை திசைதிருப்பும் நோக்கிலும் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலும் மக்களுக்கு தவறான தகவல்களை தந்து திசைதிருப்பி விடுகிறார்கள்.

உண்மையில் சாத்தான்குளத்தில் சேவாபாரதி என்ற அமைப்பே இல்லை. தமிழகத்தில் எந்த காவல் நிலையத்திலும் போலீசாருடன் இணைந்து காவல் நிலையத்திற்குள் Friends of Police என்ற பெயரில் சேவாபாரதி அமைப்பினர் பணிசெய்யவே இல்லை. மேற்படி வீடியோவிலும் அதை பதிவிட்ட நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்த சேவா பாரதியினர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் Friends of Police ஆக பணியாற்றுகிறார் என்று கூறவில்லை.

பொதுவான குற்றச்சாட்டை வேண்டுமென்றே தவறான உள் நோக்கத்தில் பரப்பி விடுகிறார்கள்.

கொரோனா என்ற கொடிய நோய் தீவிரமாக பரவி வரும் இக்கட்டான காலகட்டத்தில் காவல்துறையினருடன் இணைந்து பொது இடங்களில் கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் மருத்துவ மனைக்கு சென்று நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளை சேவாபாரதி அமைப்பு தமிழகம் முழுவதும் செய்து வந்தது. மேலும் சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சேவா பாரதி அமைப்பினர் பல லட்சம் பேருக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகளை செய்துவந்தனர் என்பது வெளிப்படையான உண்மை.

கொரோனா காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பல லட்சம் பொதுமக்களுக்கும் மருவத்துவமனையில் உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளையும் சேவாபாரதி அமைப்பினர் செய்து வந்தனர். மேற்படி செய்தி ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சேவா பாரதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நற்பெயரும் மரியாதையும் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் சேவா பாரதி அமைப்பிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் மேற்படி அமைப்பை சாத்தான்குளம் காவல்நிலையம் கொலை வழக்கில் வழக்கு விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும் பொய்யான தகவல்களை மக்களுக்கு அளித்து இரண்டு பிரிவினர்களிடையே கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து அதன் மூலம் லாபம் அடைய துடிக்கும் மேற்படி வீடியோக்களை பதிவு செய்த நபர்கள் மீதும் அதற்கு காரணமானவர்கள் மீதும் அதனை தூண்டியவர்கள் மீதும் சட்டப்படியான முதல்நோக்கு வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

எனவே மேற்படி மூன்று சேனல்களையும் தடை செய்து வீடியோகளை வலைதளத்தில் இருந்து நீக்கவும் மேற்படி பொய்த்தகவலை பரப்பிய, தூண்டிய, உடந்தையாக இருந்த அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் Information Technology Act மற்றும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.

மேற்படி வீடியோவில் திருநெல்வேலி நகரத்தில் வெளியிடப் பட்டதாக சொல்லியுள்ள ஒரு சுவரொட்டியை காட்டி விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்துள்ளார்.

சாத்தான்குளம் காவல்நிலைய இருவர் மரணம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இல்லாத சூழலில் சம்பந்தம் இல்லாத செய்திகளை மேற்படி குற்றச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்புதல் குற்றம் என தெரிந்தே செய்துள்ளார்.

எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இத்துடன் மேற்படி Youtube சேனல்களின் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை இணைத்துள்ளேன். சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த பணிவுடன் வேண்டுகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version