Home அடடே... அப்படியா? பக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்!

பக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்!

tirumalathirupathi
tirumalathirupathi

காலையிலிருந்தே விவாதம் எழுந்ததால் முடிவிலிருந்து பின்வாங்கிய திருமலா திருப்பதி தேவஸ்தானம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அடிக்கடி விவாதங்களில் சிக்கி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்பனைக்கு வைத்ததால் மிகப்பெரும் விவாதமும் பரபரப்பும் எழும்பியது. பக்தர்கள் அளித்த சொத்துகள் சிலவற்றை விற்பதற்கு வைத்தார்கள் என்ற செய்தி வந்ததால் பெரிய அளவில் விவாதம் எழும்பியது. இந்த விவாதம் நாடு தழுவிய அளவில் நடந்ததால் திருமலா திருப்பதி தேவஸ்தானம் பின்வாங்கியது.

ஆனால் இனிமேலாவது விவாதத்திற்கு உள்ளாக மாட்டார்கள் என்று நினைத்தால் மீண்டும் ஒரு செய்தி காலையிலிருந்து விவாதத்தில் இடம்பெற்று வருகிறது. இது நாடு தழுவிய அளவில் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

ஸ்ரீவாரி ஆலயத்துக்கு சொந்தமான தொகையை வங்கிகளில் மட்டும் அன்றி மாநில அரசாங்க செக்யூரிட்டி பாண்டுகளாகவும் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்ததால் மீண்டும் ஒருமுறை திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பக்தர்கள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அரசியல் கட்சிகளுக்கு அதீதமாக அனைவரும் இந்த விஷயத்தை கண்டித்து உள்ளார்கள். அரசாங்கம் இந்த செயலை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் செய்வோம் என்று திருமலையில் போராட்டம் தொடங்கினார்கள்.

இந்த விஷயம் குறித்து காலையிலிருந்தே பரபரப்பு நிலவி வருகிறது. ஹிந்து மதத்திற்கு ஒரு ஆன்மிக தலைநகராக திருமலை விளங்கிவரும் நிலையில் இங்கு எந்த சின்ன முடிவு எடுத்துக்கொண்டாலும் பக்தர்கள் அதற்கு உடனடியாக எதிர்விளைவு எடுப்பது வழக்கம்.

புதிய அரசாங்கம் வந்தபின்பு திருமலா திருப்பதி தேவஸ்தானம் எடுத்துக்கொள்ளும் முடிவுகள் அனைத்தும் விவாதத்திற்கு வழிவகுக்கின்றன. இன்று பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் பணம் அரசாங்கத்தின் பணம் அல்ல என்பதால் அங்கு செக்யூரிட்டி பாண்டுகளில் டெபாசிட் செய்யும் முடிவு எடுத்ததோடு, வங்கிகளைவிட அரசாங்கம் அதிக வட்டி அளிக்கும் என்றும் சாமர்த்தியமாக கூறியதன் மீது காலையிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு பதிவு செய்வதோடு கூட போராட்டத்தில் ஈடுபடவும் பக்தர்கள் தயாராகிவிட்டார்கள் .
நாளையிலிருந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். மக்களின் ஆத்திரத்தை கவனித்த அரசாங்கம், திருமலா திருப்பதி தேவஸ்தானம் வழியாக பத்திரிகைகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வைத்தது.

தாம் இந்த நிர்ணயத்தை அமுல்படுத்தப் போவதில்லை என்றும் எப்போதும் போலவே டெபாசிட்டுகள் அனைத்தும் வங்கிகளிலேயே செய்வோம் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவித்தார்கள். பாண்டுகள் வடிவத்தில் அரசாங்க செக்யூரிட்டியில் டெபாசிட் செய்யவேண்டும் என்ற முடிவில் பின்வாங்கினார்கள்.

இதனால் நாளை நடக்க இருந்த போராட்ட நிகழ்ச்சி ஒத்திவைக்கப் படும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் பக்தர்களின் ஆத்திரத்தால் மீண்டும் ஒருமுறை டிடிடி தன் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version