― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இந்துக்களின் போராட்டத்துக்கு வெற்றி; விநாயகர் கோயில் எதிரில் உள்ள கல்லறைத் தோட்டத்தை மூட உத்தரவு!

இந்துக்களின் போராட்டத்துக்கு வெற்றி; விநாயகர் கோயில் எதிரில் உள்ள கல்லறைத் தோட்டத்தை மூட உத்தரவு!

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உச்சிஷ்ட கணபதி கோயிலில் இருந்து சில அடி தொலைவில் ஏஜி திருச்சபை என்ற பெயரில் செயல்படும் கிறிஸ்துவ மிஷனரி அமைப்பு, கல்லறைத் தோட்டம் ஒன்றை அமைத்து இருந்தது.

கோயிலுக்கு அருகில் அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி உள்ளூர்வாசிகளும் பக்தர்களும் பலமுறை கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சட்ட உரிமைகள் ஆய்வகம் அமைப்பின் நடவடிக்கை, மற்றும் இந்துக்களின் பல கட்டப் போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக மாவட்ட நிர்வாகம் தற்போது பணிந்துள்ளது. இதை அடுத்து உடனடியாக அந்தக் கல்லறையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

manimoorthiswaram vinayakar temple

திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி கோவில் புகழ்வாய்ந்த ஒன்று. உலகிலேயே ராஜ கோபுரம் கொண்ட ஒரே விநாயகர் கோவில் இதுதான் என்பது இதன் சிறப்பு. இந்தக் கோபுர வாசலில் இருந்து சில அடி தொலைவில் கோவில் வாசலிலேயே ஏஜி சர்ச் என்ற மிஷனரி அமைப்பு ஒன்று, நிலத்தை விலைக்கு வாங்கி அதை கல்லறைத் தோட்டமாக பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்ட நிலையில், கோயிலுக்கு அருகே கிறிஸ்தவர்களின் சடலங்களைக் கொண்டு வந்து, புதைத்து வந்தது இந்துக்களின் மனத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கோயிலுக்கு அருகில் பிற மதத்தினரின் கல்லறைத் தோட்டத்துக்கு எப்படி மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது, அறநிலையத்துறை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

இதை அடுத்து, உள்ளூர்வாசிகளும் பக்தர்களும் பல முறை கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், வெறும் புகார்களாலும் கோரிக்கை மனுக்களாலும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இதை அடுத்து, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் களம் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டன. இந்து அமைப்புகளின் கடும் போராட்டத்துக்குப் பின் கடந்த 2018இல் இரண்டு கல்லறைகளில் ஒன்றை மட்டும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கிறிஸ்துவ அமைப்புக்கு அறிவுறுத்தல் வழங்கியது. ஆனால், சில நாட்களிலேயே, இரண்டு கல்லறைகளிலும் சடலங்களைப் புதைக்கத் தொடங்கியதால், மீண்டும் இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ALSO READ: விநாயகர் ஆலயம் அருகே கல்லறை கட்டிய கிறிஸ்துவ வன்மம்: காவல் துறையால் அடங்கிப் போன அசம்பாவிதம்!

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு Legal Rights Observatory- LRO என்ற அமைப்பு கல்லறையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியது‌. அதற்கு எந்த பதிலும் கிட்டாத நிலையில் தமிழக வருவாய்த் துறைச் செயலருக்கு மனு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தப் பகுதியில் கிறிஸ்தவர் சடலங்களைப் புதைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே இனி அங்கு சடலங்கள் புதைக்கப்படாது என்றும் கோவில் தக்கார் உறுதி அளித்தார்.

ஆனால் மீண்டும் அங்கே சடலங்கள் புதைக்கப் பட்டதால் மீண்டும் பிரச்னை பெரிதானது. இதை அடுத்து, நெல்லையில், இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள், பெரிய அளவில் அறவழிப் போராட்டத்துக்கு திட்டமிட்டு அறிவித்திருந்தன. ஆனால், அதற்கு இரு தினங்கள் முன்னரே, இந்து மக்கள் கட்சியினர், அந்தக் கல்லைறைத் தோட்டத்துகுள் புகுந்து, சேதப் படுத்தினர். இதை அடுத்து, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், ஒருதலைப் பட்சமான நெல்லை மாவட்ட காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும், பிரச்னைக்குக் காரணமான கிறிஸ்துவ அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்று வேடிக்கை பார்த்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இது தொடர்பில், சட்ட உரிமைகள் ஆய்வகம், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியது.

கிறிஸ்துவ மிஷனரி அமைப்பின் தகாத செயலால் மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் சூழலில், பிரச்னையைத் தவிர்ப்பதற்காக, கல்லறைத் தோட்டம் செயல்படுவதைத் தடுத்து, மாற்று இடத்தில் இயங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு அறிவுறுத்தியது.

இதே இடத்தின் அருகில் சற்று தொலைவில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த இடுகாடு ஒன்றும் இருக்கும் நிலையில், அந்த அமைப்பையும் அழைத்து, மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தியது. பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப் பட்டது.

தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் நிலையில், ஆலய பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version