Home இந்தியா பயிர்க் கடன் தள்ளுபடி… உண்மையில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கிறதா?! பிரதமர் பேசியது என்ன?

பயிர்க் கடன் தள்ளுபடி… உண்மையில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கிறதா?! பிரதமர் பேசியது என்ன?

pm-modi-in-parliament
pm modi in parliament

பயிர்க் கடன் தள்ளுபடி உண்மையில் சிறு குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறதா?! இதன் பின்னணி என்ன என்பது குறித்து, பிரதமர் மோதி தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி பேசியவை…

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,  அவையிலே,  விவசாயிகள் போராட்டம் குறித்து முழுமையான விவாதம் நடைபெற்றது.  அதிகப்படியான நேரம் என்று கொண்டால், என்ன அதிகம் கூறப்பட்டது என்று சொன்னால், அவை போராட்டம் தொடர்பாகவே இருந்தன.  எந்த விஷயம் குறித்து போராட்டமோ அதுபற்றி பேசப்படவே இல்லை. 

போராட்டம் என்னது போராட்டத்திலே என்ன நடந்தது என பேச்சுக்கள் பலவாறாக நிறைய இருந்தன.  அவற்றுக்கும் மகத்துவம் இருக்கிறது.  ஆனால் அடிப்படையான விஷயம், அது பேசப்பட்டிருந்தால், மிக நன்றாக இருந்திருக்கும். 

இப்போது…. நம்முடைய…. மதிப்பிற்குரிய விவசாயத்துறை அமைச்சர், மிக நன்றாகவே சில வினாக்களை எழுப்பியிருந்தார்.  அந்த வினாக்களுக்கு விடை இல்லை என்பது எதைக் காட்டுகிறது என்றால், ஆனால், அவர் மிகச் சிறப்பாக, இந்த விஷயம் குறித்து, இந்த அவையிலே விவாதம் செய்திருக்கிறார். 

நான் மதிப்பிற்குரிய…. தேவே கௌடா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  அவர் தான், இந்த ஒட்டுமொத்த விவாதத்தை, முனைப்போடு அணுகினார்.  அவர், அரசின் நல்ல முயற்சிகளை, அவற்றைப் பாராட்டவும் செய்தார். 

ஏனென்றால் அவர்…. விவசாயிகளின் பொருட்டு தன் வாழ்க்கையை அர்ப்பணிப்போடு வாழ்ந்தவர்.  அந்த வகையில் அவர் அரசின் நல்முயற்சிகளுக்குத் தன் ஆதரவையும் தெரிவித்தார்.  மேலும், அவர் நல்ல ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.  நான் மதிப்பிற்குரிய தேவேகௌடா அவர்களுக்கு, என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். 

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, விவசாயத்தின் அடிப்படைப் பிரச்சனை என்ன?  அவற்றின் வேர்கள் எங்கே?  நான் இன்று, முன்னால் பிரதம மந்திரி, சௌத்ரி சரண் சிங் அவர்கள்…. விரிவான வகையில் கூறியவற்றை, அவற்றையே மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 

பலர் சௌத்ரி ஐயாவுடைய பாரம்பரியத்துக்கு….. சொந்தம் கொண்டாடுவோர் இருக்கிறார்கள் அவர்கள் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள கண்டிப்பாக முயற்சிப்பார்கள்.  அவர் அடிக்கடி…. 1970-71, அதாவது விவசாய…. கணக்கெடுப்பு நடந்த போது, இதைப் பற்றி அடிக்கடி அவர் தனது உரைகளில் பேசுவதுண்டு.  மேற்கோள் காட்டுவார்.  சௌத்ரி சரண்சிங் அவர்கள் என்ன கூறினார்? 

அவருடைய மேற்கோள், விவசாயிகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது, இதில் 33 சதவீத விவசாயிகள் எப்படிப்பட்டவர்கள் என்றால், இவர்களிடத்திலே நிலம், ஒண்ணேகால் ஏக்கருக்கும் குறைவாக இருக்கிறது, ஒண்ணேகால் ஏக்கர் இல்லை, ஒண்ணேகால் ஏக்கர் வரை இருக்கிறது, ஒண்ணேகால் ஏக்கருக்கும் குறைவு. 

18 சதவீத விவசாயிகள், எப்படிப்பட்டவர்கள் என்றால்,  இவர்களிடத்திலே, ஒண்ணேகால் ஏக்கரிலிருந்து இரண்டரை ஏக்கர் வரை நிலம் இருக்கிறது.  அதாவது அரை ஹெக்டேரிலிருந்து ஒரு ஹெக்டேர்.  இவர்கள் 51 சதவீத விவசாயிகள்.  இவர்கள் என்னதான் உழைத்தாலும், தங்களுடைய சிறிய அளவு நிலத்திலே, இவர்களால் தங்கள் வாழ்வாதாரத்தை நிறைவு செய்ய முடியாது.  இது சௌத்ரி சரண் சிங் அவர்களுடைய… மேற்கோள். 

சிறு விவசாயிகளின் பரிதாபகரமான நிலை, சௌத்ரி சரண் சிங் அவர்களுக்கு எப்போதுமே வருத்தம் ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது.  அவர் எப்போதும் இதுபற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்.  அடுத்த விஷயத்துக்கு வருவோம்.  அடுத்தவகை விவசாயிகள், இவர்களிடத்திலே, ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் இருப்பவர்கள், 1971இலே, இவர்கள் 51 சதவீதமாக இருந்தார்கள்.  இவர்கள் இன்று, 68 சதவீதமாகி இருக்கின்றார்கள். 

அதாவது தேசத்திலே எப்படிப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால், யாரிடத்திலே, மிகக் குறைந்த நிலமே இருக்கிறது.  இன்று சிறுகுறு விவசாயிகளை இணைத்துப் பார்த்தால், எண்ணிக்கை 86 சதவீதம்… விவசாயிகள்…. மேற்பட்ட விவசாயிகளிடத்தில், 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் இருக்கிறது.  இப்படிப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, 12 கோடி பேர்கள். 

அதுசரி, இந்த 12 கோடி விவசாயிகளின் மீது நமக்கு எந்தப் பொறுப்பும் கிடையாதா?  தேசத்துக்கு எந்தக் கடமையும் இல்லையா?  நாமனைவரும் கண்டிப்பாக, நமது திட்டங்களின் மையத்திலே, இந்த 12 கோடி விவசாயிகளைப் பொருத்த வேண்டுமா கூடாதா?  இந்த வினாவுக்கான விடையை, சௌத்ரி சரண்சிங் அவர்கள் நமக்காக அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், தீர்வை நாம் தேடியாக வேண்டும், நாமனைவரும் சௌத்ரி சரண் சிங் அவர்களுக்கு, மெய்யான நினைவாஞ்சலிகளை அளிக்கவும் கூட, இந்தச் செயலுக்காக, யார் என்ன ஆலோசனை சொன்னாலும் யாருக்கு எந்த சந்தர்ப்பம் வாய்த்தாலும் இதைச் செய்தே ஆக வேண்டும்.  அப்போது தான் நம்மால், நிலையை சீர் செய்ய முடியும். 

இப்போது முந்தைய அரசுகளுடைய எண்ணப்பாட்டில், சிறுகுறு விவசாயிகள் இருந்தார்களா?  நாம் ஒருமுறை சற்று சிந்தித்தால் கவனத்தில் வரும், நான் இதை விமர்சனத்துக்காகச் சொல்லவில்லை.  ஆனால் நாம் உண்மையிலேயே, நாமனைவரும் இதுபற்றிச் சிந்திப்பது அவசியம். 

தேர்தல்கள் வந்துவிட்டாலே நாம் ஒரு திட்டத்தை அறிவிக்கிறோம் கடன் தள்ளுபடி.  அது விவசாயிகளுக்கான திட்டமா வாக்குகளுக்கான திட்டமா என்பதை இந்தியாவில் அனைவரும் நன்கு அறிவார்கள்.  ஆனால் கடன் தள்ளுபடி செய்யும் போது, அதிலிருந்து சிறுகுறு விவசாயிகள் தள்ளுபடி செய்யப் படுகிறார்கள்.  அவருக்கு இதனால் எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை. 

ஏனென்றால் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றவர்களுக்குத் தான் கடன் தள்ளுபடி.  சிறுகுறு விவசாயிடம் வங்கிக் கணக்கே இல்லாத போது அவர் எங்கே வங்கிக் கடன் வாங்கியிருப்பார்?  நாம் சிறுகுறு விவசாயிக்கு ஒன்றும் செய்யவில்லை. அரசியல் தான் செய்யப்பட்டிருக்கிறது.  ஒரு ஹெக்டேர் நிலம் உடைய விவசாயி, வங்கிக் கணக்கே இல்லாத விவசாயி, அவர் கடன் வாங்குவதும் இல்லை, கடன் தள்ளுபடியால் அவருக்கு ஆதாயமும் கிடைப்பதில்லை. 

இதே மாதிரியாக, முந்தைய பயிர் காப்பீட்டுத் திட்டம் எப்படி இருந்தது?  ஒரு வகையில் இந்த காப்பீடு, வங்கியின் உத்திரவாதம் என்ற வகையில் செயல்பட்டது.  இதுவுமே கூட, சிறுகுறு விவசாயிக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  இதுவும் எப்படிப்பட்ட விவசாயிகளுக்கு இருந்தது என்றால், வங்கியிடம் கடன் வாங்கியவர்கள் இதற்கான காப்பீடு செய்யப்பட்டு வங்கிகளுக்கும் ஒரு… நம்பிக்கை அடிப்படையில் இது செய்யப்பட்டது. 

இன்று, 2 ஹெக்டேர்களுக்கும் குறைவான, எத்தனை விவசாயிகள் இருக்கிறார்கள்?  வங்கிக்கடன் பெற்றவர்கள்?  நீர்பாசன வசதிகள்?  நீர்பாசன வசதிகளும் கூட, சிறுகுறு விவசாயிகளுக்கு வாய்க்காது.  பெரிய விவசாயிகள், பெரிய பெரிய பம்புகளையும் பெரிய பெரிய ஆழ்குழாய் கிணறுகளையும் ஏற்படுத்தி மின்சாரம் பெறுவார்கள், மின்சாரம் இலவசமாகக் கிடைக்கும்.  அவர்கள் வேலை நடந்தேறும். 

சிறுகுறு விவசாயிகளுக்கு, நீர்பாசனமேகூட பிரச்சனையாக இருந்தது.  அவரால் ஆழ்குழாய் கிணறை போடவே முடியாது, பல வேளைகளில் அவர் பெரிய விவசாயிகளிடமிருந்து நீரை விலைக்கு வாங்க வேண்டியிருந்தது.  கேட்ட விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. 

யூரியா….. பெரிய விவசாயிகளுக்கு யூரியா கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.  சிறுகுறு விவசாயிக்குத் தான் வரிசைகளில் நிற்க வேண்டிய கட்டாயம், சில சமயம் தடியடிப் பிரயோகத்தை அனுபவித்தார்கள், சில சமயம் வெறும் கையோடு வீடு திரும்ப வேண்டிய சூழல் இருந்தது. 

சிறுகுறு விவசாயிகளின் இந்த நிலை நமக்குத் தெரியும்.  2014க்குப் பிறகு, நாங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தினோம்.  நாங்கள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திறகான வரையறைகளை மாற்றினோம்.  இதனால், விவசாயிகள், சிறுகுறு விவசாயிகளும், இதனால் பயனடைய வேண்டும்.  மிக எளிமையான வகையிலே இந்தப் பணி தொடங்கப்பட்டது.  மேலும், கடந்த 4-5 ஆண்டுகளில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி, 90,000 கோடி ரூபாய்கள், இது சிறிய தொகை இல்லை.  90,000 கோடி ரூபாய்களுக்கான, இவர்களின் உரிமைக்கோரல், விவசாயிகளுக்குக் கிடைத்தன. 

கடன் தள்ளுபடியை விடவும் பெரிய தொகை ஐயா இது.  சிறு குறு விவசாயிகளுக்கு என விவசாயிகளுக்கான கடன் அட்டை முன்னேயே கூட வழங்கப்பட்டிருக்கிறது.  ஆனால் பெரிய விவசாயிகளுக்கு மட்டும் தான், அவர்கள் வங்கிகளிடமிருந்து….. மிகக்குறைந்த…. சில மாநிலங்களிலோ பூஜ்யம் வட்டிவீதத்தில் அவர்களுக்குப் பணம் கிடைத்தது. 

அவர்களில் சிலர் வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள், பணத்தை அதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  சிறுகுறு விவசாயிகளுக்கு இது, வாய்க்கவே இல்லை, இந்தியாவின் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயக் கடன் அட்டை அளிக்க முடிவு செய்தோம். இது மட்டுமல்ல நாங்கள் இதன் வரையறையை, மீனவர்களுக்கும் நீட்டித்திருக்கிறோம். 

இதனால் மீனவர்களுக்கும் இதனால் பயன் கிடைக்கும்.  ஒண்ணேமுக்கால் கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளிடத்திலே விவசாயி கடன் அட்டை, அளிக்கப்பட்டு விட்டது மற்றவர்களுக்கும்,  மாநிலங்களிடத்திலே கேட்கிறோம் தொடர்ந்து இதை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று, இதனால் அதிகப்படியான விவசாயிகள், இதனால் ஆதாயம் அடைவார்கள்.  இதிலே மாநிலங்களின் ஒத்துழைப்பு எத்தனை அதிகம் கிடைக்குமோ, அத்தனை அதிகம் இந்தப் பணி நிறைவடையும்.  இதே போல நாங்கள் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்…..

பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவக்கொடைத் திட்டம்.  நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில்.  அதுவும் ஏழை விவசாயிகளுக்கு யாருக்கு எந்த ஆதாயமும் கிடைக்க வில்லையோ.  இப்படி 10 கோடிக் குடும்பங்களுக்கு, இதனால் ஆதாயம் கிடைத்திருக்கின்றது. 

ஒருவேளை, மேற்கு வங்கத்தில் அரசியல் குறுக்கீடு இல்லாதிருந்தால், மேற்கு வங்க விவசாயிகளும் இதில் இணைந்திருப்பார்கள், இதன் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கும்.  மேலும் இதுவரை, ஒரு இலட்சத்து பதினையாயிரம் கோடி ரூபாய்கள், இந்த விவசாயிகளின் கணக்குகளில் போடப்பட்டிருக்கிறது. 

இவர்கள் ஏழை சிறுகுறு விவசாயிகள்.  அவர்களைச் சென்றடைந்திருக்கிறது.  நம்முடைய அனைத்துத் திட்டங்களின் மையத்திலே இவர்கள் இருக்கிறார்கள்.  நிலவள அட்டை.  நாங்கள் 100 சதவீதம் நிலவள அட்டையை அளித்திருக்கிறோம்.  இதனால் நம்முடைய சிறுகுறு விவசாயி தனது நிலம் எப்படிப்பட்டது எந்த பயிருக்கு உகந்தது, இதற்கு உதவும் வகையிலான நிலவள அட்டையை, அளித்திருக்கிறோம். 

இதே போலத் தான் யூரியாவுடைய வேப்பெண்ணைப் பூச்சு, 100 சதவீதம் செய்திருக்கிறோம்.  100 சதவீதத்துக்குப் பின்னே இருந்த எங்கள் நோக்கம், மிக ஏழை விவசாயிகளுக்கும் கூட, யூரியா சென்று சேர்ப்பதில் தடை இருக்கக்கூடாது, யூரியா திசை மாறிச் சென்று விடக்கூடாது, இதில் நாங்கள் வெற்றியும் பெற்றிருக்கிறோம். 

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக, நாங்கள் முதல்முறையாக, ஓய்வூதியம் என்ற திட்டத்தை முன்னெடுப்பு செய்திருக்கிறோம்.  என்னால் கவனிக்க முடிகிறது, மெல்ல மெல்ல நம்முடைய சிறுகுறு விவசாயிகளும், இதில் இணைகிறார்கள். 

இதே போலத் தான் பிரதம மந்திரி ஊரகப் பகுதிச் சாலைத் திட்டம்.  பிரதம மந்திரி ஊரகப்பகுதி சாலைத் திட்டம் வெறும் சாலை அல்ல.  இது விவசாயிகளின் ஊரக வாழ்க்கையில் மாற்றமேற்படுத்தும் ஒரு மிகப்பெரிய…. மைல்கல்லாக விளங்கும்.  அந்த வகையிலே, நாங்கள் இதன் மீதும் அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.  முதன்முறையாக நாங்கள் விவசாயிகள் இரயில் பற்றி சிந்தித்திருக்கிறோம். 

சிறுகுறு விவசாயி பின்தங்கி விடக்கூடாது.  இன்று விவசாயிகள் ரயில் காரணமாக, கிராமத்தின் விவசாயியால் மும்பை நகரின் சந்தைகளுக்குச் சென்று தனது சரக்குகளை விற்க முடிகிறது.  காய்கனிகளை விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இதனால் ஆதாயம் கிடைக்கிறது சிறுகுறு விவசாயிகள் நலன் பெறுகிறார்கள். 

விவசாயிகள் விமானம்.  இந்த விவசாயிகள் விமானம் வாயிலாக விமானம் வழி நமது வடகிழக்கில், மிக அருமையான பொருட்கள், ஆனால் போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், அங்கிருக்கும் விவசாயிகளால் ஆதாயங்களை அடைய முடிவதில்லை.  இன்று அவர்களுக்கு விவசாயிகள் விமானத்தால் ஆதாயம் கிடைக்கிறது. …

  •  தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version