திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பாக திமுக சார்ப்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டு தலைமை உரை ஆற்றினார். இது ட்விட்டரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் ‘தளபதி – தலைவர் – முதல்வர்’ என்கிற தலைப்பில் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நேற்று பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தி.மு.கழக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., இயக்குநர் கரு.பழனியப்பன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் உணர்வு உரை ஆற்றினார்.
பிரபல பாடகி ஒருவர் கொடுத்த மிகப்பெரிய குற்றச்சாட்டினால் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து, திமுக மேடையில் உரை ஆற்றியது கலவையான விமர்சனக்களை எழுப்பியுள்ளது. சிலர், ஸ்டாலினிடம் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
நேற்று இரவு முதல், பலரும் இதுத்தொடர்பான கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
#Stalin அவர்களே, உங்களை போற்றி பேச ஒரு பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் தான் தலைமை தாங்குவாரா?? இது தான் விடியலா? நீங்க இது தான் தருவீங்களா?? உங்கள் தொகுதியின் ஒரு வேட்பாளராக நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு நல்ல தலைமைக்கு இது அழகல்ல. #metoo #SayNo pic.twitter.com/NAFVuJK6UN
— Dhivya Marunthiah (@DhivCM) February 23, 2021
🤮🤮🤮🤮🤮 https://t.co/QdAZYdRdXC
— Dhivya Marunthiah (@DhivCM) February 23, 2021
திமுக அனுதாபிங்கிறதுக்காக வை.மு க்கெல்லாம் முட்டு குடுக்காதீங்கைய்யா… கேவலமா இருக்கு.
— கருவிளநறுநிழல் (@SelfRespector) February 23, 2021
@KanimozhiDMK இது உங்களுக்கு தப்பா தெரியலையா?? இதை கண்டு ஏதேனும் ஒரு பெண் தைரியமாக வெளியே வந்து புகார் அளிக்க சூழல் இருக்கா? குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று நீங்களும் தப்பிக்க பொகுறீர்களா?? #வைரமுத்து வை பாதுகாக்குறீர்களா?? ஒரு பெண்ணாக சக தோழிகளை கைவிட போகிறீரா? #Metoo #SayNo pic.twitter.com/TNvLCAuNbL
— Dilip Srinivasan (@dilipsrinivasan) February 23, 2021
@thirumaofficial அவர்களே.
— Dilip Srinivasan (@dilipsrinivasan) February 23, 2021
17 பெண்களால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் நீங்கள் மேடையை பகிர்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெண் உரிமை, பெண் பாதுகாப்பு என்று பெரியார் வழி பிர்ச்சாரம் செய்த நீங்கள் இதை செய்வது துரோகம். @RVikraman @DhivCM @VanniArasu_VCK pic.twitter.com/uqdEeCAgja