திருக்குறளை உலக நூலாக யுனேஸ்கோ அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், தமிழ் அகராதியின் தந்தை என்று போற்றப்படும் வீரமா முனிவர் பிறந்த நாள் தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆதித்தனார் பெயரில் புதிய விருது என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டுள்ளது. நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகிய ஒவ்வொன்றிலும் ஒன்றை தேர்ந்தெடுத்து வருடந்தோறும் விருது வழங்கப்படும். மேலும் ரொக்கப் பரிசு 1 லட்சம் ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.