10 வருட சேலஞ்ச்சாமே! இப்படி ஒரு ‘பிகினி பாடி’ வர்றதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டாராம்!

Published:

Rai Lakshmi - 2026

நடிகை ராய் லட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மைக் கால படங்களைப் பதிவு செய்து ரசிகர்களுக்கு கிக் ஏற்றியிருக்கிறார். இப்படி ஒரு பிகினி பாடி வர்றதுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறேன் என்று வேறு கேள்வி எழுப்பியுள்ளார் ராய் லட்சுமி.

இப்போது, புது மனுஷியாகவே மாறியிருக்கிறார் ராய் லட்சுமி. அதனை தன் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் போட்டிருக்கும் பிகினி ட்ரெஸ் படத்தை வைத்து தெரிந்து கொள்ளலாமாம்!

‘நீச்சல் உடை அணிய வசதியாக என் உடலை மாற்றவேண்டும் என கடினமாக உழைத்தேன். அதன் பலனாகத்தான் இந்தப் புதிய தோற்றம். என் பழைய தோற்றத்தை என்னாலேயே நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. எனது வாழ்நாளில் எடை குறைப்பு, எடை ஏற்றம் என போராடிக் கொண்டிருந்தேன். கடைசியாக ஒரு புதுமனுஷியாக என்னை உணர்கிறேன்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது ரசிகர்கள் இதனை 10 வருட சேலஞ்ச் என்று போட்டு, பழைய படத்தையும் புதிய படத்தையும் பதிவு செய்து, ராய் லட்சுமியை பாராட்டி வருகின்றனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Related articles

Recent articles

spot_img