நடிகர் விமல், நடிகை ஓவியாவை வைத்து இயக்குநர் சற்குணம் இயக்கிய படம் களவாணி. இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.
8 வருடங்களுக்குப் பின் இயக்குநர் சற்குணம் களவாணி பார்ட் 2 இயக்கினார். இந்தப் படத்திலும் களவாணி படத்தில் நடித்தவர்களே நடித்துள்ளனர்.
இந்த படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் சற்குணம் களவாணி போன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களை திருப்திப்படுத்துவது என்பது பெரிய விஷயம்.
ஆனால் களவாணி 2 படத்திற்கும் மக்கள் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனர். எனக்கும் விமலுக்கும் நல்ல ராசி உண்டு. நாங்கள் இருவரும் இணைந்து களவாணி, வாகை சூடவா ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
விமலை வைத்து நான் தயாரித்த மஞ்சப்பை, இப்போது களவாணி 2 என அனைத்து 4 படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன. நாங்கள் சேர்ந்தால் தோல்வியே இல்லை. இது வெற்றி கூட்டணி என்று கூறினார் சற்குணம்



