Home நலவாழ்வு அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! பல்..!

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! பல்..!

health tips 1
health tips 1

பற்கள் பலமடைய…

அடிக்கடி கரும்புத் துண்டுகளை நன்றாய் மென்று துப்ப பல் சுத்தமாவதுடன் பற்களும் நல்ல பலமடையும்.

பல் வலிக்கு…

பெருங்காயத்தை எலுமிச்சம் சாற்றில் இழைத்து பல்லில் தடவலாம்.

அல்லது அதைப் பஞ்சில் நனைத்து பல் இடுக்கில் அடக்கிக் கொள்ள பல்வலி சரியாகி விடும். பல் சொத்தை ஏற்பட்டால் எருக்கம்பால் ஒரு சொட்டை சொத்தை கண்ட இடத்தில் வைக்க சொத்தை அதோடு நின்று விடும். பல் கூச்சமும்

நீங்கும். இரண்டு மூன்று முறை பயன்படுத்த மறுபடியும் சொத்தை
வராது,

அருகம்புல்லைப் பறித்து சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று வலியுள்ள பகுதியில் அதை ஒதுக்கி வையுங்கள் சிறிது நேரத்தில் சரியாகி விடும்.

ஆலமரத்தில் கிடைக்கும் மொட்டுக்களைப் பறித்து வாயில் போட்டு மென்று அடக்கிக் கொண்டால் பல்வலி பறந்தே போய்விடும்.

பல் முளைக்கிறதா?

குழந்தைக்குப் பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் அதனால் ஏற்படும் வலிப்பு நோய்களுக்கும் வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு திராட்சை ரசத்தைக் காலை, மாலை நேரங்களில் கொடுப்பது நல்லது.

சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது வயிற்றுப் போக்கு ஏற்படும். புளியாரைக் கீரை ஒரு பிடியும் வாழைப்பூ (ஆய்ந்தது) ஒரு பிடியும் எடுத்து இரண்டையும் ஆவியில் அவித்து சாறெடுத்து தேன் கலந்து காலை, மாலை கொடுத்து வரலாம். இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறை புதிதாக தயாரித்துக் கொடுத்து வரவும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.

பல் பதிந்து இரத்தம் வருகிறதா?

பல் பதிந்து இரத்தம் வந்தால் அது விஷமாகும். அவுரி வேர் 15 கிராம். நன்னாரி 15 கிராம் இரண்டையும் அரைத்து பசுவின் பாலில் கலக்கி மூன்று நாள் பருக வேண்டும். கொல்லங்கோவைக் கிழங்கை அரைத்து கடி வாயில் பூசி வர வேண்டும்.

பருவமடைய…

  • செம்பரத்தைக்குருது உண்டாக்கக்கூடிய குணம் உண்டு. தகுந்த வயது வந்தும் பருவக்கழிவெய்தாத பெண்களுக்கு செம்பருத்திப் பூவை எந்த ரூபத்திலாவது கொடுத்து வர அப்பெண் பருவமடைவாள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version