― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeலைஃப் ஸ்டைல்மிரளும் இலங்கை!மிரட்டும் சீனா! கச்சத்தீவில் கண்வைத்த பாரதம்!

மிரளும் இலங்கை!மிரட்டும் சீனா! கச்சத்தீவில் கண்வைத்த பாரதம்!

- Advertisement -

கச்சத்தீவு வரை வந்து சென்று இருக்கிறார் சீன தூதர்……. போகும் போது செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு This is the end….. and also the beginning…. என் சொல்லி சென்று இருக்கிறார் அவர்.

இலங்கையில் தற்போது அங்கு உள் நாட்டு குழப்பம் நீடிக்கிறது….. நாடாளுமன்றத்தை முடக்கி வைத்து விட்டு சிங்கப்பூர் சென்று இருக்கிறார் கோதப்பய…. இது அங்கு பல குழப்பங்களை உருவாக்கி விட்டு இருக்கிறது.

அடுத்ததாக நாடாளுமன்ற கூட்டம் வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெறவிருந்ததை மாற்றி 18 ஆம் தேதிக்கு பிறகு என்ன மாற்றி அறிவித்து விட்டு…. அறிவிப்பு வெளியிட்ட நிலையில் நாடாளுமன்றத்தை அவர் முடக்குவதாக அறிவித்து இருந்தார். போதாக்குறைக்கு இலங்கை அரசின் அங்கம் வகிக்கும் பலருக்கும் சீன அரசுக்கும் மறைமுகமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் வழி வழியாக வரும் உயிர் உரங்களை தவிர்த்து விட்டு செயற்கை நுண்ணுயிர் உரங்கள் என்கிற பெயரில் அந்த மண்ணுக்கு ஒவ்வாத வேதி உயிரியல் ரசாயனங்களை பயன் படுத்த மறைமுகமாக சீன அரசு கட்டாயப்படுத்தி வந்த நிலையில்….. இலங்கை அரசாங்கம் அந்த உரம் ஏற்றி வந்த கப்பலை திருப்பி அனுப்பி வைத்தனர்.

இது மிகப்பெரிய புகைச்சலை அங்கு ஏற்படுத்தி விட்டது.

சீனா இலங்கை வங்கியை முடக்குவதாக அறிவித்தது. நஷ்ட ஈடாக சுமார் 70 மில்லியன் டாலர்களை கேட்டது சீனா. இலங்கையில் சீன நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்களை முழுமையாக வெளியேற்றியது…… இலங்கை துறைமுகங்களில் இலங்கை அரசின் பிரதிநிதிகளையே வரக் கூடாது என்று கெடுபிடி செய்தது..,… இலங்கை அரசு நிறுவனங்களில் சீனா கை காட்டும் நபர்களை வேலைக்கு வைக்க… எடுக்க சொன்னது….. நச்சு உயிரியல் ரசாயணங்களை ராஜபக்சே வின் சொந்த மாகாணத்தில் ஹம்பதோட்டாவில் மில்லியன் டன் கணக்கில் இறக்கி வைத்து அடாவடி தனங்களை செய்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியான நிலையில்……
நம் பாரதப் பிரதமர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். அதன் பொருட்டே மாநில ஆளுநர் இந்த பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் செய்து வந்திருக்கிறார்.

இந்த சமயத்தில் வேண்டும் என்றே பூச்சாண்டி காட்டும் விதமாக தனது தூதரை தலைமன்னாரில் இருந்து படகில் ஏற்றி ராம் சேதுவையும் கச்சத்தீவு பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத தீவு பகுதியில் சுற்றி வர செய்து வேடிக்கை காண்பித்து இருக்கிறார்கள் பெய்ஜிங்கில் இருந்து கொண்டு.

நிச்சயமாக இது இந்த பிராந்தியத்தில் கொதி நிலை உஷ்ணத்தை ஏற்படுத்தும். காரணம் கடந்த காலத்தில்…. சரியாக சொன்னால் தமிழகத்தில் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது நமது இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதி திரு பிபின் ராவத் அவர்கள் கச்சத்தீவில் கால் பதிக்க நாம் யாரிடமும் அனுமதி கேட்க மாட்டோம்….. என கர்ஜனை செய்து இருந்தார்.

தற்சமயம் அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சீனா தனது வேலையை காண்பித்திருக்கிறது.

தலைமை தளபதி பொறுப்பு தற்காலிகமாக திரு எம் எம் நரவானே வசம் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த காரியத்தை செய்து இருக்கிறது சீனா.

இலங்கை தற்போது அதிகப் படியாக இந்தியா வசம் சார்த்து நிற்க ஆரம்பித்து இருக்கிறது….. இதனை பொறுத்து கொள்ள முடியாத சீனா தற்போது தகிடுதத்தமான வேலைகளில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…… இது தற்போது தமிழகத்தை ஆளும் அரசை அசைத்து பார்த்து இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…. ஏனெனில் அவர்களுக்கும் இலங்கை சமாசாரங்களுங்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

ஜனவரியில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் குறிப்பாக தேர்ந்தெடுத்த இடம் குமரி முனை என்கிறார்கள்…… ஏற்கனவே இதே குமரி முனையில் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனை சந்திக்க ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்ற நிலையில் கொரானா காரணமாக தள்ளி போனது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அதனையே தற்போது உயிர்ப்பிக்க முடிவு செய்து திட்டம் தீட்டி வருகின்றனர் என்கிறார்கள் அவர்கள்.

ஏற்கனவே ஆக்கஸ் கூட்டணி நாடுகளாக அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஒன்றிணைந்து கூட்டாக இயங்க இருப்பதாக சொன்னதற்கே பெய்ஜிங் ஜிங் ஜிங் என்று குதித்தது.

இப்பொழுது இலங்கை இந்தியா பக்கம் சாய்வதை பார்த்து கொதித்து கொண்டு இருக்கிறது…… இதனை உடைக்க…. அல்லது மடை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளவர்களையும்….. இலங்கை தமிழர்களையும் மறைமுகமாக தூண்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இதனை இந்திய அரசு நிர்வாகமும் நன்கு உணர்ந்தே இருக்கின்றது.

இவ்வாறான அழிச்சாட்டியங்களை இலங்கை தமிழர்களை வைத்து செய்யும் சீனா என்பதனை யூகித்த நம் ராஜதந்திர வட்டாரங்களில் அதற்கு எதிர் நடவடிக்கையாக…. கச்சத்தீவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கச்சச்சநாதர் திருக்கோயிலை புனரமைப்பு செய்யும் திருப்பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.. இதற்கு பலன் தர ஆரம்பித்து இருக்கிறது…..

எவ்விதம் எனில்……
இலங்கை இன ரீதியான துண்டாடும் நடவடிக்கையாக சிங்களர் தமிழர் என பாகுபாடு காட்ட….. இந்தியா மத ரீதியான பிணைப்பை… பிடிப்பை… உண்டாக்கிட முனைகிறது….. ஆதியில் சைவ சித்தாந்த சிந்தனை என்பது சிங்களர் தமிழர் என இந்த இரு பிரிவினருக்கும் பொதுவானதாகவே அறியப்படுகிறது. அதனையே முன்னெடுத்து வருகின்றனர் நம்மவர்கள்.

💓ஆனால் தமிழகத்திற்கு வருகை தரும் நமது பாரதப் பிரதமரின் திட்டம் வேறுவிதமாக இருக்கிறது என்கிறார்கள்……

வாரணாசி தொகுதியில் உள்ள காசியை புனருத்தாரணம் செய்ததை போல ராமேஸ்வரத்தையும் செய்ய நினைக்கிறார்…… இதன் மூலம் பாரதத்தின் பாரம்பரிய காசி ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை செல்லும் வழி தடங்களை…..அதனை ஒட்டி வர்த்தக வளர்ச்சி அதிகரிக்க…… அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி…. அப்படி ஏற்படும் போக்குவரத்தையும் நீர் வழி போக்குவரத்து பாதையாக மாற்ற தனது முதல் அடியை எடுத்து வைத்து இருக்கிறார்.

இது மிகப்பெரிய அளவிலான பொருளாதார வர்த்தக வளர்ச்சியை இந்தியாவில் ஏற்படுத்தி உலக அளவில் பொருளாதார வழங்கல் பாதையை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும்….. நாட்டின் BSE சென்செக்ஸ் சுமார் இரண்டு லட்சம் புள்ளிகளை எட்டி பிடிக்கும்…. உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தை அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் எட்டி பிடிக்கும் என்றெல்லாம் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றார்.

வெகு நிச்சயமாக இது மிகப்பெரிய கனவு திட்டம்…… நம் பண்டைய பாரதத்தின் உயிர் நாடி இதுவே. வெளிப்புற அடையாளங்களுக்கு காசி ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை என்று சொன்னாலும் அதன் ஆதார சுருதி பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கான வழங்கல் பாதையை உருவாக்கி தருவது…. அதனையும் நீர் வழி போக்குவரத்தாக மாற்றுவது என்பதே இதன் தலையாய நோக்கமாகும்……நாளையே இது இலங்கை வரை நீளவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள் அவர்கள்.

எவ்வளவு தூரம் இவை விரைவாக சாதியமாகுகிறதோ…… அவ்வளவு விரைவாக நம் அந்நிய செலாவணி கையிருப்பு உயரும் ‌……. பிறகு தானாகவே பொருளாதார வல்லரசாக நமது தேசம் தானாக உருப்பெற்று விடும். இதுவே நமது பிதாமகனின் கனவு என்கிறார்கள்.

இதற்கான முதல் அடி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைய இருக்கிறது.

வெகு விரைவில்…. வெகு நிச்சயமாக……. வளமான தமிழகம்…. வலிமையான பாரதம்…. என்பது இனி செயலில் இருக்கப் போகிறது.

  • கட்டுரை: ஜெய்ஹிந்த் ‘ஸ்ரீ ராம்’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version