Homeசமையல் புதிதுலஞ்ச் பாக்ஸ் கார்னர்: பச்சை நிற புலாவ்!

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பச்சை நிற புலாவ்!

Green pulao - Dhinasari Tamil

பச்சை நிற புலாவ்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – அரைக்கிலோ
வெங்காயம் – இரண்டு
பச்சைநிற தக்காளி – இரண்டு
பச்சைமிளகாய் – ஆறு
பச்சைநிற காய்கறிகள் – அரைக்கிலோ
இஞ்சிவிழுது – அரை தேக்கரண்டி
பூண்டுவிழுது – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு பிடி
எண்ணெய் – கால் கோப்பை
நெய் – ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைரசம் – ஒரு மேசைக்கரண்டி
பட்டை – ஒரு துண்டு
இலவங்கம் – நான்கு
ஏலக்காய் – நான்கு
பிரிஞ்சி இலை – இரண்டு
உப்புத்தூள் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை
பச்சரிசியை கழுவி வைத்து மற்ற பொருட்களை தயாரிக்கும் வரை ஊறவைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பிடித்தமான பச்சைநிற காய்கறிகளை (பீன்ஸ், பச்சைபட்டாணி, அவரை, ப்ரோக்கலி, அஸ்பரகஸ், ஸ்னோ பீஸ்) ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வடித்து கொள்ளவும்.
பிறகு அடிகனமான சட்டியில் எண்ணெயை காயவைத்து வாசனைப் பொருட்களை போடவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்தவுடன் இஞ்சி, பூண்டு பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும். அடிபிடிக்காதவாறு சிறிது நீரைத்தெளித்து வதக்கவும்.
பிறகு தக்காளியுடன் மற்ற எல்லாக் காய்கறிகளைப் போட்டு எலுமிச்சைரசத்தை ஊற்றி உப்பையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். தொடர்ந்து இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி மூடியைப்போட்டு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த அரிசியைக் கொட்டி கிளறி விட்டு மூடியைப்போட்டு அடுப்பை குறைந்த அனலில் வைத்து விடவும்.
பத்து நிமிடம் கழித்து நெய்யை மேலாக ஊற்றி நன்கு கிளறி விடவும். பரிமாறும் பாத்திரத்தில் கொட்டி கொத்தமல்லியை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,542FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...

Exit mobile version