மூவண்ண லஸ்ஸி
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு நிறத்திற்கு குங்குமப்பூவின் சிரப் – 2 மேசைக்கரண்டி
தயிர் – 3 கப்
பச்சை நிறத்திற்கு – வெட்டிவேர் சிரப் – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பவுடர் – 1 மேசைக்கரண்டி
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
செய்முறை
- தயிரை நன்றாக அடித்துக்கொள்ளவும். அதில் சர்க்கரை மற்றும் ஏலக்கய் பவுடரை சேர்க்கவும்.
- மேற் கூறியவற்றை மூன்று பாகமாகப் பிரித்துக்கொள்ளவும்.
- ஒரு பாகத்தில் குங்குமப்பூவின் சிரப்பை சேர்த்துக்கொள்ளவும். ஒன்றில் வெட்டிவேர் சிரப்பை சேர்க்கவும். ஒரு பாகத்தை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
- நீளமான கண்ணாடி கிளாஸில் முதலில் வெட்டிவேர் சிரப் கலந்த தயிரை ஊற்றவும். அதன் மீது வெள்ளை தயிர், கடைசியாக குங்குமப்பூ தயிர் ஊற்றவும்.
- இதன் மீது நறுக்கிய பிஸ்தாவை தூவி அலங்கரிக்கவும்.
- ஜில்லென்று பரிமாறவும்.