புட்டு பாயசம்
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்
தேங்காய்த் துருவல் – முக்கால் கப் பொடித்த வெல்லம் – ஒரு கப் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன்
புட்டு மாவு – ஒன்றரை அல்லது இரண்டு கப்
நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வறுத்து வேகவைத்து தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
புட்டு மாவில், உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும்.
குறிப்பு: புட்டு இட்லியை பருப்பு கிரேவியுடன் நெய் சேர்த்துச் சாப்பிடவும். தஞ்சாவூர் பகுதியில் `புட்டு பாயசம்’ என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விசேஷங்களில் முக்கிய இடம்பெறும்.