― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகட் அண்ட் ரைட்டு கோவிந்து: கண்ணு செந்தில் பாலாஜி, அல்லார் கண்ணும் உம் மேலதான்!

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: கண்ணு செந்தில் பாலாஜி, அல்லார் கண்ணும் உம் மேலதான்!

- Advertisement -
stalin met senthil balaji

— ஆர். வி. ஆர்

செந்தில் பாலாஜி விசயம் தெரியுமில்ல? ஆமா, அந்த கில்லாடி மந்திரிதான்….

அமலாக்கத்துறை இவுரை விசாரிக்கப் போச்சு. இவுரைப் பத்தி எல்லா விசயமும் தெரட்டி வச்சிக்கினு, “இப்பிடி இப்பிடி இருக்கு. இங்க இங்க இவ்ள போயிருக்கு. இதான் ரூட்டு. இந்த ரூட்ல நீ நிக்கிற. உன் குடும்பத்துல, உனக்கு வேண்டப்பட்டவங்க இந்த ரூட்ல வந்துகிறாங்க. இந்த ரூட்டு லாங்கா எங்க போவுது. வெவரம் சொல்லு” அப்பிடின்னு கேக்கப் போயிருப்பாங்க. அது இல்லாம, “அண்ணாத்தே, ஊர்ல யாரோ உன்னப் பத்தி தப்புத் தப்பா பேசிக்கிறாங்க. அதுல உண்மை இருக்குதா, யோசிச்சு சொல்லு. அதெல்லாம் பொய்யி. நீ உத்தமன்னு சொன்னியானா, டாங்க்ஸ் சொல்லிட்டு போயிக்கினே இருப்போம்”னு டைலாக் பேசவா செந்தில் பாலாஜிய விசாரிப்பாங்க?

அமலாக்கத் துறை கேட்ட கேள்விக்கு செந்தில் மேலயும் கீளயும் பாத்துக்கினு, தாகமா இருக்குன்னு தண்ணி வாங்கி குடிச்சிக்கினு, “என்ன கேட்டீங்க?”ன்னு கேள்விய திருப்பிக் கேக்க வச்சு, அப்பறம் கொட்டாவி விட்டுக்கினு, ‘தெரில, நாபகம் இல்ல”ன்னு சிரிச்சிக்கினே பதில் சொல்லிருப்பாரு. வேற வளி இல்லாம இவுரைக் கைது பண்ணி கார்ல ஏத்துனப்போ, இவுரு பின் சீட்டுல படுத்துகினு நெத்திலயும் மார்லயும் கை வச்சு சீட்லயே அரை உருளு உருண்டு அளுதாரு. இவுருக்கு ஆர்ட்டுல என்னவோ மக்கர் பண்ணுது, அதுனால அந்த நிமிட்லேர்ந்து டாக்டருங்க மட்டும்தான் இவருகிட்ட பேசணும். அமலாக்கத்துறை அப்பால போயிக்கணும்னு சிக்னல் குட்தாரு.

டிவி-ல பாத்தில்ல? செந்தில் கார் சீட்டுல படுத்துக்கினு இருக்காரு. அவர் வாய் அளுவுது, ஆனா கண்ணு அளுவல. மெய்யாலும் மார்ல வலி இருந்திச்சுனா வாய் மட்டும் பெரிசா அளுவும், ஆனா கண்ணுல தண்ணி வராதா, சொல்லு. நீ நடிச்சுக்கினே வாயை மட்டும் அள வச்சிரலாம். அளுவுற சவுண்டும் குட்துக்கலாம். ஆனா நடிப்புல கண்ணை அள வெக்கணும்னா, சிவாஜிக்கே கிளிசிரீன் ஊத்தணும். அதான், அளுவாத ரண்டு கண்ணையும் ஒரு கைல மூடி வச்சிக்கினு சவுண்டுல மட்டும் அளுதாரு செந்திலு. கார் சீட்டுல கொஞ்சமா பொரண்டப்ப, அவுரு போட்டிருந்த டீ சர்ட்டு மேல ஏறி வயிறு தெரியப் போச்சு. அப்ப வலியை மறந்துட்டு அவுரே டீ சர்ட்டைக் கரீக்டா புடிச்சு கீள இளுத்து விட்டுக்கினாரு. அப்பறம் பாதுகாப்பு ஆளுங்க இவுரு காலை ஆதரவா தொட்டு மெள்ள இவுரை இறக்கலாம்னு பாத்தா, அரெஸ்ட் ஆன கோவத்துல படுத்துக்கினே மெஸ்ஸி மாதிரி காலால ஓங்கி ஓங்கி உதை விட்டாரு. தத்ரூவமா இல்லபா!

எனக்குப் புரிது. யாருக்கும் நெஞ்சு வலி எப்ப வேணா வர்லாம். தூக்கத்துல வர்லாம். டான்ஸ் பண்ணும்போது வர்லாம். போலீஸ் விசாரிக்கும்போது வர்லாம். அதெல்லாம் சர்தான். உனக்கு இதயக் குளாய்ல அடைப்பு இருக்குது, பைபாஸ்னு அறுவை சிகிச்சை பண்ணத்தான் வேணும்னா பண்ணிக்க. பாரு செந்திலு, நீ நல்ல உடம்போட திரும்பி வரணும்னு யார் இப்ப நெனச்சிக்கிறாங்க? மொதல்ல உங்க வூட்டம்மா, அப்பறம் உன் குடும்பத்துக் காரவுங்க. அடுத்தது யாருன்ற? உன்னை விசாரண பண்ணிக்கிற அமலாக்கத் துறை ஆபீசருங்க. பதட்டமா இருந்துக்கினு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து உன்னை பாத்த ஸ்டாலினு, அவுரு மருமகப் பிள்ளை, மந்திரிங்கல்லாம் அவுங்க நல்லதுக்குதான் உன்னைப் பாக்க வந்துக்கினாங்க. ஏன்னு உனக்குத் தெரிமில்ல?

உன் பிரச்சினை இதான் செந்திலு. உனக்கு ஆசை இருக்கற அளவு திருப்தி கெடியாது, நிதானமும் இல்ல. உன் நிம்மதிய நீ அடுத்தவன் கிட்டயும் ஆடிட்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் விட்டுக்கினு ஜாலியா ஏதோ பண்ணிக்கின. அவன்லாம் நீ வாள்ந்தாலும் பொளைப்பான், விளுந்தாலும் பொளைப்பான். “எனக்கு வாய்ப்பு குடுத்து எனக்கும் மேல ஒருத்தர் குந்திக்கினு இருக்காரே, அவுரும் அப்பிடித்தான இருக்காரு?”ன்னு கேட்டுக்காத. அவுங்கல்லாம் ஆடிட்டர் வக்கீல் நிம்மதியைக் கூட தன் கைல வச்சிக்கிறாங்க. சக்தியானவுங்க. நீ காரியத்தை முடிச்சு கைல கொணாந்து குடுக்கற எடுபிடி, அவ்ளதான். மாட்டுனா நீதான் மொதல்ல மாட்டுவ. அடுத்தவனும் பின்னாடியே ஜெயிலுக்கு வந்தாலும் உனக்கு என்னபா பெனிபிட்டு?

சரி நீ ஒரு தப்பும் பண்ணலன்னு வச்சிக்கலாம். உனக்காவும் பண்ணலை, அடுத்தவனுக்கு குடுக்கவும் பண்ணலன்னு வச்சிக்கலாம். அதத்தான் ஸ்டாலினும் சுத்தி வளச்சு சொல்றாரு. ஆனா பதட்டமா சொல்றாரு, துடிக்கிறாரு. டவுட்டு வருமா இல்லியா?

அதிமுக ஆட்சிக் காலத்துல நீ போக்குவரத்து அமைச்சரா இருந்து டிரைவரு, கண்டக்டரு, மெகானிக்குன்னு வேலைக்கு ஆள் சேக்க வாங்கின பணம் பத்தி விசாரிக்க அமலாக்கத்துறை வந்தா, திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் பதறணும்? விசாரணைல புது புது விசயமா நீ என்ன சொல்லுவ, எங்கல்லாம் கை காட்டுவன்னு ஸ்டாலினுக்கு பயம் பத்திக்கின மாதிரி தெரிதே?

ஸ்டாலினுக்கு கனிக்சனே இல்லாம, கட்சிக்காரன் எவன் எவனோ எங்கயோ வாய் தவறிட்டான், கை ஓங்கிட்டான்னு வருத்தப் பட்டு கட்சி மனுசங்களப் பாத்து அவுரு என்ன பேசினாரு? “எனக்கு கெட்ட பேரு வெக்காதீங்க. உங்களால என் தூக்கமே பூட்சு”ன்னு மைக்குல ஒரு தபா அவரே அளுதாருல்ல? இப்ப அமலாக்கத் துறை உன்னைக் கைது பண்ணிருச்சு, குடைஞ்சு குடைஞ்சு விசாரிப்பாங்கன்னு தெரிஞ்ச உடனே, “அல்லாருக்கும் சொல்லிக்கிறேன். திமுக-வை சீண்டிக்காத. தாங்க மாட்ட” ன்னு சண்டியர் கணக்கா சவால் விடறாரு. ஏன் செந்திலு? தூக்கம் போன மேட்டர்ல அவருக்கு தெரியாம எவனோ தப்பு பணணிக்கினான், அதுல அவுருக்கு ஒரு பங்கும் இல்ல. ஆனா உன் மேட்டர்ல ஸ்டாலின் இப்பிடி துள்றாரே, இதுல யாருக்கு எவ்ள பங்கு இருக்குமோன்னு ஜனங்க பேசிக்குவாங்களே?

வருமான வரித்துறை உன் வூட்டுக்கு ரெய்டு வந்தப்போ, “அவுங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு தெர்ல. நாங்க எல்லா கணக்கையும் வச்சிருக்கோம். நல்லா ஒத்துளைப்பு குடுப்போம். கொறை இருந்தா சொல்லுங்க. சரி பண்ணிக்கிறோம்”னு அடக்கமா பேசிக்கின. இப்ப பைபாஸ் முடிஞ்சு ரூம்புக்கு வந்துட்ட, திட சாப்பாடு சாப்பிடறன்னு ஆஸ்பத்திரி சொல்லுதுன்னு டிவி-ல நூஸ் வருது. வாயை ஓப்பன் பணணித்தான சாப்பிடுவ? அதே வாயைத் தெறந்து, “நான் உடம்பு தேறிக்கினு இருக்கேன். வெளிய வந்து அமலாக்கத் துறைக்கு நல்லா ஒத்துளைப்பு குடுப்பேன். எல்லாக் கேள்விக்கும் எங்கிட்ட பதில் இருக்குது. எனக்கு மடில கனம் இல்ல. வளில பயம் இல்ல” அப்பிடின்னு ஏன் சொல்லிக்கலை? அதையே ட்விட்டர்லயும் தட்டி விடலாமே? நீ ஏன் அந்த மாதிரி அறிவிப்பு குடுக்கல? அப்பிடிப் பேசிட்டா நீ கூட ‘தாங்க மாட்ட’ – சர்தானா ?

அமலாக்கத்துறை சட்டம் எப்பிடி ஆளை வளைக்கும், அவுங்க விசாரணை தொட்டுத்தொட்டு எங்கல்லாம் போகும், எல்லாத்தயும் நீ இப்ப புரிஞ்சிட்டிருப்ப. ஆனா நீயும் மனுசன்தான். இன்னிக்கி உன் நெனப்பு இப்பிடித்தான் இருக்கும். ‘நம்ம இருதயம் இப்ப நல்லா இருக்குது. எப்பிடியும் ஒரு நாள் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்துதான் ஆவணும். அமலாக்கத்துறை கேள்விக்கு பதில் சொல்லி ஆவணும். புது விசயம்லாம் கூட வெளிய வரும். அதுலயும் விசாரணை நடக்கும். பல வெவகாரத்துல நான் தப்பிக்க முடியாதுன்னு ஆவும். என் தப்புக்கு நான் ஜெயிலுக்கு போவணும்னா போய்க்கிறேன். ஆனா என்னை வேலை வாங்குனவன் மட்டும் சொகம்மா சுத்திக்கினு இருப்பானா?’

பாரு செந்திலு. சட்டம் ஓரமா தூங்கிக்கினு இருக்கும். அதை கைல வாங்கி சொடுக்கற ஆளு யாரு, அதை நேர்மையா நாயமா பண்ணிக்கிறானா அப்பிடின்றத பொறுத்துதான் அது வேலை செய்யும். அது நல்லா வேலை செஞ்சா, கூட்டு சதி பண்ணவன் ஒர்த்தன் மட்டுனா போதும். அவனைப் பிடிச்சு உலுக்கினா, மத்தவன் பேருல்லாம் அவன் வாயிலேர்ந்து வரும். ‘மத்தவன் மட்டும் எதுக்கு தப்பிக்கணும்’னு அவனே பாதி போட்டுக் குடுத்துருவான். இல்லாட்டியும், அவுங்க கூட்டு சதி பத்தி மத்த ஆதாரம் இருந்திச்சினா அது பேசும். ராஜீவ் காந்தி கொலை, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு கேஸ்ல எல்லாம் இப்பிடித்தான் கூட்டுசதி பண்ண அல்லாரும் மாட்டிக்கினாங்க.

உன் விசயத்துல, நீ தப்பு பண்ணலைன்னு வையி, நீ நிம்மிதியா இருக்கலாம். நீ தப்பு பணணிட்ட, அமலாக்கத் துறைட்ட ஆதாரமும் இருக்குது, அப்பிடின்னா நீயும் உன் கூட்டாளியும் முடிஞ்ச வரை டிராமா பண்ணிக்கினே இருக்கணும், வீர வசனம் பேசிக்கினே இருக்கணும்.

சொல்லு, நீ நிம்மிதியாத்தான் இருக்கியா? எப்பிடி ஆனாலும் பத்திரமா இருந்துக்க. அது முக்கியம் கண்ணு.


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version