அவனைப்போல் நல்லகவி உண்டா? – அவன்
அகத்தைப்போல் வெள்ளைப்பூ உண்டா?
அவனைப்போல் தேசபக்தர் உண்டா? – அவன்
அன்பைப்போல் காமதேனு உண்டா?.
அவனைப்போல் பிள்ளைகுணம் உண்டா? – அவன்
அறிவைப்போல் சோதியொளி உண்டா?
அவனைப்போல் பாசமுளோர் உண்டா? – அவன்
அகத்தாழ்ந்து முத்தெடுத்தோர் உண்டா?.
அவனைப்போல் ஞானமுளோர் உண்டா? – வாணி
அருள்வாக்கைத் தான்பெற்றோர் உண்டா?
அவனைப்போல் துன்புற்றோர் உண்டா? – அட
அப்போதும் இன்பமேன்றோர் உண்டா?.
பாரதியே பாரதியே உன்போல் – இந்தப்
பாரினிலே யாரய்யா உண்டு
பாரதியே பாரதியே உன்போல் – ஆதி
பராசக்தி ஒன்றேதான் உண்டு.
- கவிஞர் மீ.விசுவநாதன்
(இன்று (11.09.2019) மஹாகவி பாரதியார் நினைவுதினம்)