Home இலக்கியம் கவிதைகள் இன்று… ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆராதனை நாள்!

இன்று… ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆராதனை நாள்!

sringeri-sri-chandrasekara-bharathi-mahaswamigal1
sringeri sri chandrasekara bharathi mahaswamigal1

“ஸ்ரீ சந்திர சேகர பாரதீ சத்குரு”
(கவிதை: மீ.விசுவநாதன்)

சந்திர சேகர பாரதீ சத்குருவை
வந்தனை செய்திட வாருங்கள் – இந்தப்
பொழுதினைப் பொன்னென்றே கொண்டு மனத்தால்
தழுவுவோம் தாளினைத் தான்.

தானென்ற எண்ணம் தவறியும் கொள்ளாத
மாபெரும் யோகி; மகத்தான சாரதா
பீடத்தின் ஆசார்யர்; பேரன்பு பொங்கியே
சீடரைக் காப்பார் சிறந்து.

சிறந்து விளங்கும் சிலபொழுதி லொன்று
துறந்து சிரிக்கும் துறவி அருகினை
அண்டி இருத்தலே ஆத்ம சுகமெனக்
கொண்டிருக்கும் நல்ல குணம்.

குணபூதம் ஐந்தும் பொதிந்த உடலுள்
மணக்கும் மறைகள் ஒலிக்கும் – கணமும்
கடவுளை எண்ணியே காலத்தை வென்று
கடந்தவரை நன்றுள்ளே காண்.

காணும் இடமெல்லாம் காட்சிதரும் ஜோதியைக்
காணத் துடிப்பதே ஞானமாம் – வீணாகக்
காலத்தை ஒட்டாதார் கால்பற்றி வந்தாலே
ஞாலமே சின்னதாம் சந்து.

(இன்று (17.09.2020) மகாளய அமாவாசை.
சிருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித
ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின்

ஆராதனை நாள்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version