Home இலக்கியம் கதைகள் புளியமரத்தடி டிபன் கடையும்… ஓசி சாப்பாட்டு போலீஸும்..!

புளியமரத்தடி டிபன் கடையும்… ஓசி சாப்பாட்டு போலீஸும்..!

police-commedy
police commedy

புருசன் செத்துட்டான்… பொட்டப் புள்ளையை காப்பாற்ற புளிய மரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது ப்ரியா.

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான்… பர்மிசன் யார்கிட்ட கேட்ட? மிட்நைட் ஆச்சு.. கடையைச்சாத்துன்னு
எதையாவது சொல்லி தினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்.

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட மாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா.

ஆனால் இந்த ஓசி போலீஸ் ஒரு தோசை குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தால் அவன் தான் ஆற அமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டு பார்சலும் வாங்கிட்டு போவான்.

என்ன செய்ய? புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்… நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டா வெறுப்பாக பரிமாறுவாள்.

என்ன சுவையா சமைத்தாலும் டவுனுக்குள் நாலுகடை சாத்தின பிறகு தான்
நாலு சனம் வரும் ப்ரியாவின் கடைக்கு… நாலு வருசம் ஆகியும் நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை.

தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கை வைத்து வாரக் கந்துக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்.

ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு… அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா… கடை வாடகை, கந்துவட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்ச நேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்.

வாடி வா, இன்னைக்கு உன்னை நாலு வார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை… இன்னிக்கு சாப்பிட்டதுக்கு இப்பவே காசைக் குடுடான்னு சட்டமா கேட்கனும்னு நினைச்ச வேளையில்….

இந்தாம்மா ப்ரியா. இதுல ஒரு லட்ச ரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் புளிய மரக்கடையில் சாப்பிட்டதுக்கான தொகை. உன்புருசன் என்னோட படிச்சவன்தான்! புருசன் இல்லாம அந்த நைட்டு நேரம் நீ அந்த இடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க்குனு தெரிஞ்சதால உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் தினமும் அங்கே வந்தேன். நான் கொடுக்கும் இந்தப் பணம்தான் புளிய மரத்தடிக் கடையின் லாப பணம். வச்சிக்கோ….

கையில் கொடுத்தான்…. ப்ரியாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லை, கடைசியாகச் சொன்னாள்…

வாங்க சாப்பிடுங்க!

வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்!
நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளுங்க…!
நாம் பிறருக்கு நல்லது செய்தா… நமக்கும் நல்லது தானா தேடி வரும்! அதுதான் கர்மா!

(சமூக வலைத்தளப் பகிர்வு…)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version