
கோவை இருகூர் காமாட்சிபுரம் 51வது சக்தி பீடம் ஆதினத்தில் கொரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று, மனித உயிர்களை கருணையின்றி காவு வாங்கி வருகிறது. இந்தத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ம
ருத்துவமனைகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன. ஊரடங்கு காரணமாக கோயில்கள் அடைக்கப்பட்டாலும் பிரார்த்தனைகள் மனதுக்குள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கிடையே, கோவையில் கொரோனா தேவி சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள், பயங்கொண்ட பக்தர்கள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில் இன்று கொரோனா மனித வாழ்க்கையினை அச்சுறுத்தி வருகிறது. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற வாக்கின்படி கொரோனோ கிருமி பாதிக்கப்பட்டவர்களை கண்டு பயப்படாமல் இருக்க கொரோனா தேவி கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாகத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதி இல்லை எனவும் ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என கூறினார்.
இன்றும் கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் இருப்பது போல இந்த கொரோனா தேவி வழிபாடும் அவசியம் என அந்த ஆலயத்தின் ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறினார்.
மேலும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் பண வசதி உள்ளவர்கள் இல்லாதவருக்கு உதவுங்கள்” என அவர் தெரிவித்தார்.