ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் கசிவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக அமிலக் கிடங்கில் சிறிய கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை, மக்கள் பயப்பட வேண்டாம் என்று கூறிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ரசாயன கசிவை சரிசெய்யும் பணி நாளை காலை தொடங்கும் என்று கூறினார்.

ரசாயன கசிவு ஒரே நாளில் சரிசெய்யப்படும் என்றும் அச்சப்படவேண்டாம் என்றும் அவர் கூறினார்.