தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்
சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் தொடர்ந்து 3ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது என்பது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.
தமிழகத்தில் இன்று5994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6020 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பினர் இதையடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,38,638 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தனர். இதையடுத்துகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,927ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,117ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,186 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 31,09,708 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரம்