― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கோவைதமிழகத்தில் இங்கெல்லாம் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

தமிழகத்தில் இங்கெல்லாம் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

- Advertisement -

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு, பல மாவட்டங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் வரும் 6ம் தேதி; கோவை மாவட்ட மலைப்பகுதி, நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், வரும் 7ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

வங்கக் கடலின் வடக்கு மற்றும் தென் மாவட்ட கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே 7ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 03-09-2023 காலை 0830 மணி முதல் 04-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

திருப்போரூர் (செங்கல்பட்டு) 9;

தேவாலா (நீலகிரி), மகாபலிபுரம், செங்கல்பட்டு (செங்கல்பட்டு) தலா 8;

கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7;

டிஜிபி அலுவலகம் (சென்னை), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 6;

VIT சென்னை AWS (செங்கல்பட்டு) வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), RSCL-2 கெடார், மரக்காணம் (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), (விழுப்புரம்), கல்லிக்குடி (மதுரை), பெரியார் (தேனி), திருவாடானை (இராமநாதபுரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) ) தலா 5;

ஐஸ் ஹவுஸ், உத்தண்டி, சோழிங்கநல்லூர் (சென்னை), திருக்கழுகுன்றம், மதுராந்தகம் (செங்கல்பட்டு), BASL முகையூர் (விழுப்புரம்), DSCL திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), ஊத்து, காக்காச் (திருநெல்வேலி), தொண்டி (இராமநாதபுரம்), குழித்துறை, பாலமோர்,(கன்னியாகுமரி), தம்மப்பட்டி, சங்கரிதுர்க் (சேலம்), பார்வூட் (நீலகிரி) தலா 4;

ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம், திருவொற்றியூர், மணலி, NIOT சென்னை, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG, தாம்பரம், மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், RSCL-2 சூரப்பட்டு, வானூர் (விழுப்புரம்), DSCL மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), திருச்சி விமான நிலையம் (திருச்சி), திருப்புவனம் (சிவகங்கை), அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம் (விருதுநகர்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), தூத்துக்குடி (தூத்துக்குடி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), சோலையார், வால்பாறை PTO (கோவை), பவானி (ஈரோடு), எடப்பாடி, மேட்டூர் (சேலம்), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 3;

திருத்தணி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை, பெருங்குடி, அடையார் சுற்றுச்சூழல் பூங்கா, வளசரவாக்கம், கோடம்பாக்கம் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), உசிலம்பட்டி), தேக்கடி (தேனி), காரியாபட்டி, திருச்சுழி (விருதுநகர்), குண்டார் அணை (தென்காசி), பாபநாசம், மாஞ்சோலை (திருநெல்வேலி), இரணியல், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட், அவலாஞ்சி, (நீலகிரி), சின்னக்கல்லார், சின்கோனா (கோவை), கோபிசெட்டிபாளையம், ஈரோடு, வரட்டுப்பள்ளம், எலந்தகுட்டை மேடு, அம்மாபேட்டை (ஈரோடு), தலைவாசல் (சேலம்) தலா 2;

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), புழல் ARG, தாமரைப்பாக்கம், பொன்னேரி, திருவாலங்காடு, திருத்தணி PTO, பூந்தமல்லி ARG, செங்குன்றம், திருப்பூர் KVK AWS (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், ஆலந்தூர், சென்னை நுங்கம்பாக்கம், பெரம்பூர், அண்ணா பல்கலைக்கழக ARG, அய்யனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-2 கஞ்சனூர், விழுப்புரம், RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பூதலூர் (தஞ்சாவூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), மானாமதுரை (சிவகங்கை), விருதுநகர் AWS (விருதுநகர்), ஆய்க்குடி, இராமநதி அணை, தென்காசி, செங்கோட்டை (தென்காசி), கன்னடியன் அணைக்கட்டு, கொடுமுடியாறு அணை, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சேர்வலார் அணை, மணிமுத்தாறு (திருநெல்வேலி), சூரங்குடி (தூத்துக்குடி), திற்பரப்பு, சிற்றார், மாம்பழத்துறையாறு, களியல், பூதப்பாண்டி, சிவலோகம், கொளச்சல், நாகர்கோவில், கொட்டாரம், அடையாமடை (கன்னியாகுமரி), வொர்த் எஸ்டேட் சேர், நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா (கோயம்பத்தூர்), சத்தியம்ங்கலம், நம்பியூர், கொடிவேரி, கவுந்தப்பாடி (ஈரோடு), ஆத்தூர், டேனிஷ்பேட்டை, சந்தியூர் KVK AWS (சேலம்) தலா 1;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version