― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்நெல்லை10% இட ஒதுக்கீடு; தமிழக அரசின் துரோகத்துக்கு சைவ வேளாளர் சங்கம் பதில்!

10% இட ஒதுக்கீடு; தமிழக அரசின் துரோகத்துக்கு சைவ வேளாளர் சங்கம் பதில்!

- Advertisement -
nellai meeting reservation thanks

இந்தியாவில் உள்ள முற்பட்ட சமுதாயத்தினரில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து செயல்படுத்த மத்திய அரசு இந்திய ஜனாதிபதி அவர்களின் உத்திரவு நாள் 12-1-2019 படி இந்தியா முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது ‌

அதன்படி அந்த ஆணையை மத்திய அரசு இந்தியா முழுவதும் செயல்படுத்துகிறது. ஆனால் தமிழக அரசு அந்த உத்தரவை தமிழ்நாட்டில் இதுவரை அமல்படுத்தவில்லை. அதனால் அந்த உத்தரவை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடும்படி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு சைவ சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதன்பின் நாங்குநேரி இடைத்தேர்தலிபோது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்பொழுது தூத்துக்குடியில் வைத்து சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளும் மற்றொரு கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது உடனடியாக ஆவன செய்வதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதிமொழி கொடுத்தார்கள். ஆனால் இதுவரை முதலமைச்சர் அவர்கள் உத்தரவு எதுவும் வழங்க வில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு கடித என் RA 5(3)40521/2017 Dt 4-6-2020ன் படி Economic Weaker Section Certificate கொடுக்கக் கூடாது என்று எல்லா மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் முற்பட்ட சமுதாயத்தினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த இடத்திலும் மத்திய அரசின் தேர்வில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தானும் நன்மை செய்யாமல் செய்கின்ற மத்திய அரசையும் கொடுக்க விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று நமது முற்பட்ட சமுதாயத்தினராகிய நாம் அனைவரும் மிகவும் வருத்தமும் துயரமும் கொண்டுள்ளோம்.

நாலாபக்கமும் கதவுகளை அடைத்து விட்டால் நமது மக்கள் எப்படி வாழ்வது. நமது மக்களின் வாழ்வாதாரத்தின் கழுத்தை நெரிப்பது போல இந்த சுற்றறிக்கை உள்ளது.

எனவே இந்த சுற்றறிக்கையை உடன் வாபஸ் பெறும்படி உத்தரவிடும்படி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனுவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு தளவாய் சுந்தரம் அவர்களை தோவாளையில் அவர்கள் வீட்டில் மாநில தலைவர் புளியரைராஜா தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

திரு தளவாய்சுந்தரம் அவர்களும் இந்த கோரிக்கை மனுவை முழுவதையும் படித்துப் பார்த்து உடன் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியிடம் போனில் பேசினார்கள்.
அதன்பின் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இந்த மனுவையும் கொடுத்து விளக்கமாக எடுத்துக் கூறுகிறேன் என்று கூறினார்கள்.

இது ஒருபுறமிருக்க வியாழக்கிழமை 11-6-2020 அன்று நமது சங்க அலுவலகத்தில் வைத்து மாநில தலைவர் தலைமையில் நடைபெற்ற மூற்பட்டோர் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கு நீதிமன்றம் மூலமாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மாநில தலைவர் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த சுற்றறிக்கை நிறுத்திவைக்க உத்தரவிடும்படி நமது மாநில சட்ட ஆலோசகரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞரு மன திரு என். கனகசபாபதி பி ஏ பி எல் அவர்களிடம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை நமது சமுதாயத்தை சேர்ந்த அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது சமுதாயத்தினர் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாம் வெற்றி காண்பது உறுதி. இவை நமது சந்ததியினரின் வாழ்வாதாரப் பிரச்சனை. இதில் முழுமூச்சாக வெற்றி பெறுவோம்.

அனைவரின் நலம் நாடும்
சே.பகவதிமுத்துஎன்ற புளியரை ராஜா. மாநிலத் தலைவர்.
V..குருசாமி.
மாநில பொதுச்செயலாளர்.
A. செந்தில்ஆறுமுகம்.
மாநில பொருளாளர்.
மற்றும் நிர்வாகிகள்.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம்.
தலைமையகம் திருநெல்வேலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version