― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryயோக நரசிம்மர் மலையை போத மலையாக்கும் மதவெறி கிறிஸ்துவம்! அரசுத் துறைக்கு ஆண்மை இருக்கிறதா?

யோக நரசிம்மர் மலையை போத மலையாக்கும் மதவெறி கிறிஸ்துவம்! அரசுத் துறைக்கு ஆண்மை இருக்கிறதா?

- Advertisement -

சோளிங்கர் யோக நரசிம்மர் மலை… கிறிஸ்தவ மதபோதகர்களால் சிலுவை நடப்பட்டு – பைபிள் வசனம் எழுத “போத மலை” என பெயர் மாற்ற முயற்சி… மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக அரசே தடுத்து நிறுத்து என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட இந்து மக்கள் கட்சி தமிழக பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் தெரிவித்தபோது….

புனித மிக்க சோளிங்கர்
அருள்மிகு யோக நரசிம்ம பெருமாள் அருள்பாலித்து கொண்டிருக்கக்கூடிய புனித மலையில் சிலுவையை வைத்து மலையை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவர்களால் இந்த மலைக்கு ஆபத்து உருவாகி இருக்கிறது.

சிலுவை வைத்து “போத பாறை “
என பெயர் பலகை வைத்து , வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் , இளைப்பாறுதல் தருகிறேன் என ஏசுநாதர் கூறிய உபதேச வசனங்களை எழுதி வைத்து உள்ளார்கள் .

சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பாவிகளே மனம் திரும்புங்கள் .

இயேசுவின் போதனை சர்வ வல்லமை உண்டாக்கும் என பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் .

இந்த மோசடி மதமாற்ற கிறிஸ்தவர்களுக்கு சைவம் ,வைணவம் என்கின்ற திருத்தல பேதமில்லை.

 மலைமீது இருக்கக்கூடிய இந்து திருத்தலம் எதுவாக இருந்தாலும்
அங்கே சென்று ,மெல்லமெல்ல ஒரு சிலுவை நட வேண்டும் .பின்னர் அங்கேயே பைபிள் வசனங்களை எழுத வேண்டும் ,

கர்த்தர் இந்த மலையில் அற்புதம் புரிந்தார் என்று ஒரு பொய்யான வரலாறு உருவாக்க வேண்டும்,

பின்னர் அந்த மலையை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து கிறிஸ்தவ மதமாற்ற கேந்திரமாக ஆக்கிட வேண்டும் என்பதே இவர்களுடைய செயல் திட்டம்.

இந்தச் சூழ்நிலையில் சோளிங்கர் மலையையும் ,யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயிலையும்பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்து ஆன்மீக பக்தர்கள் மற்றும் இந்து உணர்வாளர்கள் மற்றும் ஒவ்வொரு இந்துக்களுடைய கடமை ஆகும்.

புனித மலையை பாதுகாப்போம்
மோசடி மதமாற்றம் கும்பலை விரட்டி அடிப்போம் என்கின்ற உறுதிமொழியை ஒவ்வொரு இந்துவும் எடுத்துக்கொள்ள வேண்டும் …. சமீபத்தில் இந்த கோவிலுக்கு சென்று வந்த ஒரு அன்பர் கூறினார்…

இயேசுவின் வசனம் ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு சொல்லி அழிக்க சொல்லுங்கள்
என்று சொன்னார் .

நான் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் சொன்னேன் .

வேறொரு இடத்தில் “இயேசு சுகம் தருகிறார் இயேசு சர்வ வல்லமை படைத்தவர் என்று எழுதியிருப்பதாகச் சொன்னார். “

எது எப்படியோசோளிங்கர் யோக நரசிம்மர் மலையை பாதுகாத்திடவும் ,
மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ மாஃபியா கும்பல்கள் மீது தமிழக அரசு ,
காவல் துறை , வருவாய் துறை , வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தலையிட்டு
உடனடி தீர்வு காண வேண்டுகிறோம் .

இதை படிக்கும் நாம் ஒவ்வொருவரும் அரசிற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி email . தந்தி , அல்லது நேரடியாக புகார் என செயல் நடவடிக்கைகளில் ஈடுபட அன்புடன்
வேண்டுகிறோம் . .. என்று இராம. இரவிக்குமார் நம்மிடம் தெரிவித்தார்.

காலம் காலமாக நம் கோயில்கள் பற்றியும் திருத்தலம் குறித்தும் மூர்த்தி தலம் தீர்த்தம் என சிறப்பான தலங்கள் குறித்தும் தல புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை இப்போது நாமும் பதிவு செய்யவில்லை என்றால் இந்தக் கோயில் கிறிஸ்தவ தளம் என்று கிறிஸ்தவர்கள் பொய்யான கதைகளை எழுதி வைப்பார்கள் என்பதால் இந்தக் கோயில் வரலாறு இங்கே நாம் பதிவு செய்கிறோம்  திருக்கோவில் வரலாறு

சோளிங்கர் என்கிற திருக்கடிக்கை

பெரியமலை(யோக நரசிம்மர்)–1305 படிகள்.

சிறியமலை(யோக ஆஞ்சனேயர்)–406 படிகள்.

தாயார்-அமிர்த வல்லி நாச்சியார்.

தீர்த்தம்– தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம், அமிர்த புஷ்கரனி.

விமானம்-ஹேமகோடி விமானம், ஸிம்ஹாக்ர விமானம்.

இத்தலத்திற்க்கு சோள சிங்கபுரம், கடிகாசலம் என்ற பெயர்களும் உண்டு. ”அக்காரக்கனி” என்று திரும்மங்கை ஆழ்வார்ரால் பெரிய திருமொழியில் பாடப் பெற்ற இத்தலம் அரகோணம் ரயில் நிலையத்திலிறுந்து 25 கி.மி. தொலைவ்வில் உள்ளது.

விசுவாமித்திரர் இம் மலையில் ஒரு கடிகை (நாழிகை) நேரத்தில் நரசிம்மரை நோக்கி துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார், என்று கேட்டு சப்த ரிஷிகளும், வாமதேவர் என்ற முனிவரும் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை விரைந்து காணும் ஆசையில் இங்கு வந்து தவம் செய்தனர். சீக்கிரமாகவே நரசிம்மரும் தரிசனம் கொடுத்தார். இந்த தரிசனத்தை ஆஞ்சனேயரும் பார்த்தார் எப்படி?

இராம அவதாரம் முடிந்ததும் ஸ்ரீ இராம பிரான் வைகுண்டத்திற்க்கு புரப்பட்டார். மாருதியும் பின்தோடர ”கடிகாசலத்தில் தவம் புரியும் முனிவர்க்களுக்கு காலன், கேயன் என்ற இரு அசுரர்க்கள் துன்பம் தருக்கின்றனர். அவர்களை நீ வதம் செய்வாயாக” என மொழிந்து, சங்கு சக்கரங்க்களை வழங்கினார்.

அனுமன் அந்த அரக்கர்களை சம்கரித்து நரசிம்ம தரிசனம் பெற்றார். அஞ்சனை மைந்தர் ஆன்ந்தமாய் பஜனை செய்ய “வாயுகுமாரா! நீ என் முன் அமர்ந்து யோக அனுமன்னாக பக்தர்க்களின் பிணிக்களை தீர்ப்பாய்யாக” என்றார் நரசிம்மர்.

இதனால் தான் சங்கு சக்கரத்துடன் இப்பதியில் அனுமன் தனி சன்னதியில் அமர்ந்துள்ளார்.

ஸதல மகிமை: ஒரு கடிகை நேரம் (24 மி.னி) இம்மலையில் தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதிகம். போக முடியாதவர்கள் ஒரு நாழிகை நரசிம்மரை சிந்தித்தாலே போதும் என்கிறது 108 திருப்பதி அந்தாதி.

இங்குள்ள நரசிம்மருக்கு பக்தோசித ஸவாமி என்ற திருநாமம் உண்டு. பக்தர்கள் உசிதபடி அருள் பவர் என்று அர்த்தம். இங்குள்ள தீர்தத்திற்க்கு தக்கான் குளம் என்ற பெயர்.

இத்தல ஸவாமியை பாடியவர்கள் “பேய்யாழ்வார்”, “திருமங்கையாழ்வார்”, ”ஸ்ரீமந் நாதமுனிகள்”, “திருக்கச்சி நம்பிகள்”, “மணவாள மாமுனி”, “ஸ்ரீமத் இராமானுஜர்”.

இத்தலத்தில் பிறந்தவர்கள் “தொட்டாச்சார்யார்”, “எறும்பியப்பர்”.

தொட்டாச்சார்யார் காஞ்சி கருட சேவைக்கு ஆண்டுத்தோறும் செல்வது வழக்கம். ஒரு ஆண்டு உடல் நலிவாள் போக முடியாததை நினைத்து கண்ணிர் விட்டார். பகவான் அவருக்கு அங்கேயே கருட வாகனத்தில் காட்சி தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரமோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கோபுர வாசலில், கருட வாகனத்தில் ”தொட்டாச்சார்யார் சுவமிகள்” சேவை என்று கற்புர ஆரத்தி நடந்து வருகிறது.

ஒரு சமயம் துர்வாச ரிஷி இங்கு வந்து நரசிம்மரை வணங்கி அவரது “துளசி” மாலையை பெற்று அதை கழுத்திலும், சிரசிலும் சூடி கூத்தாடினார். அப்பொழுது நரசிம்மரை தரிசித்துக் கொண்டிருந்த புதன் கேலி செய்து சிரித்தார்.

“திருக்கடிகையில் பாண்டவத் தீர்த்தத்தில் நீராடி, அங்கு தவம் செய்யும் முனிவர்களுக்கு தொண்டு செய்தாலே நீ விண்ணுலகம் செல்ல முடியும்” என சபித்தார் முனிவர். புதன் அப்படியே செத்து மீண்டும் உயர் நிலை பெற்ற சேத்திரம் இது.

ஒரே கல்லில் இம் மலை அமைந்துயிருப்பத்தால் இதற்கு “ஏகசிலா பர்வதம்” என்று பெயர்.

இராமானுஜர் தனது ”விசிஷ்டாத்வைத” வைணவக் கோட்பாடுக்களை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று.

இங்கு விஞ்ச் ரயில் அமைக்க முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டிருக்கிறது. இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மை தரிசிப்பதையே நரசிம்மர் வேண்டுவதாக ஐதீகம்.

வரலாறு: சோழன் “கரிகால் பெருவளத்தான்” தொண்டை நாட்டை வெற்றிக் கொண்டு இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்று பிரித்திருக்கிறான். இச்செய்தி பட்டினப்பாலையில் உள்ளது.

கி.பி 1781ல் ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் நடந்த 2-ஆம் கர்நாடகப் போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்ற போதும் இக்கோவிலுக்கு எந்த சேதமும் நிகழவில்லை.

முடிவுரை: இங்கு நரசிம்ம ஸ்வாமியை தரிசித்து விட்டுத்தான் ஆஞ்சனேயரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version