Home Blog Page 4

IPL 2024: மும்பை Vs லக்னோ

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

41ம் நாள் ஐபிஎல் 2024 – 30.04.2024 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணியை (143/7, நெஹால் வதேரா 46, டிம் டேவிட் 35*, இஷான் கிஷன் 32, மொஹிஷின் கான் 2/36, மார்கஸ் ஸ்டோயினிஸ் 1/19) லக்னோ அணி (19.2 ஓவர்களில் 145/6, மார்கஸ் ஸ்டோயினிஸ் 62, கே.எல். ராகுல் 28, தீபக் ஹூடா 18, நிக்கோலஸ் பூரன் 14*, ஹார்திக பாண்ட்யா 2/26) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று லக்னோவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதனால் மும்பை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 4 ரன்) மற்றும் சூர்ய குமார் யாதவ் (6 பந்துகளில் 10 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த திலக் வர்மா (11 பந்துகளில் 7 ரன்), ஹாதிக் பாண்ட்யா (பூஜ்யம் ரன்), ஆகியோர் இன்று சிறப்பாக விளையாடவில்லை.

மும்பை அணி பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 28 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இதற்குப் பின்னர் நெஹல் வதேரா (41 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இரண்டாவது தொடக்க வீரரான இஷான் கிஷனுடன் (36 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.

இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர் டிம் டேவிட் (18 பந்துகளில் 35 ரன்) உடன் இணைந்து விளையாடி அணி ஒரு மதிப்பான ஸ்கோரை அடைய உதவினார்.  இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்திருந்தது. 

145 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான அர்ஷின் குல்கர்னி முதலாவது ஓவரின் நாலாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் (22 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மூன்றாவதாகக் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

அதன் பின்னர் ஆடவந்த தீபக் ஹூடா (18 ரன்) மற்றும் நிக்கோலஸ் பூரன்  (ஆட்டமிழக்காமல் 14 ரன்) இருவரும் கொல்கொத்தா அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 19.2 ஓவரிலேயே 6 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்தபோது மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. பின்னர் பந்து வீசியபோது ஹார்திக் பாண்ட்யா பந்துவீச்சாளர்களைக் கையாண்டவிதம் சரியில்லை.

பும்ரா போன்ற பந்து வீச்சாளரின் ஓவர்களை முன்னரே முடித்தது தவறான முடிவு. கடைசி இரண்டு ஓவர்களில் ஒன்றை பும்ரா வீசியிருக்க வேண்டும்.

17ஆவது ஓவரை தனது கடைசி ஓவராக பும்ரா வீசினார்; அந்த ஓவரில் அவர் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். இனி மும்பை அணி பிளே ஆஃப் ஸ்டேஜுக்கு முன்னேறுவது சற்று கடினம். 

லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோயினிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காவும் பந்துவீச்சிற்காகவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை சென்னையில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

30.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 981160.694
கொல்கொத்தா963121.096
லக்னோ1064120.094
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
டெல்லி115610-0.442
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை10376-0.272
பெங்களூரு10376-0.415

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

“90 சதவிகித மக்களுக்கு அநீதி நடக்கிறது!” — பிதற்றுகிறார் ராகுல் காந்தி!

ஆர். வி. ஆர்

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”

“ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்தால், அப்படியான எக்ஸ்-ரே எடுத்தால், நாட்டில் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தான் ஏழைகள் என்பது தெரியவரும்.”

“ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எனது அரசியல் அல்ல, அது என் வாழ்க்கையின் நோக்கம்.”

“இன்று 90 சதவிகித இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப் படுகிறது.”

”90 சதவிகித மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்.”

சுருக்கமாக, ராகுல் காந்தி சொன்னது இது: ‘இந்தியாவில் 100-க்கு 90 நபர்கள் ஏழைகள். அந்த 90 பேரும் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடி ஜாதியினர். மீதி 10 சதவிகித மக்கள் வேறு ஜாதியினர், அவர்கள் ஏழைகள் அல்ல, அவர்களிடம் சொத்து சுகம் உள்ளது. நாட்டின் 90 சதவிகித மக்களுக்கு, அதாவது நாட்டின் ஏழை மக்களுக்கு, அந்த ஏழைகள் சார்ந்த ஜாதியினருக்கு, அநீதி நடக்கிறது. அதற்கான தீர்வின் முதல் படி, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு.’

ராகுல் காந்தி நேராகப் பேசவில்லை.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், நமது ஏழை மக்களுக்குக் கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலைகள், இருப்பிடம், என்று சீராக, படிப்படியாக, அடிப்படை வசதிகளை ஒரு அரசால் திட்டமிட்டு ஏற்படுத்தவே முடியாதா – மக்கள் நலனைக் குறிவைத்தும், பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு அங்கமாகவும்?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏதும் நடத்தாமல், உலகமே வியக்க 2021-ல் துவங்கி இந்திய மக்கள் அனைவருக்கும் இரண்டு வருடங்களில் நரேந்திர மோடி அரசு கொரோனா தடுப்பூசி வழங்கியதே? ஏதாவது புரிகிறதா, ராகுல் காந்திக்கு?

ராகுல் இப்படியாவது யோசித்தாரா? இதுவரை மொத்தமாக சுமார் 55 ஆண்டுகள் காங்கிரஸ் பிரதம மந்திரிகள் மத்திய அரசை வழிநடத்தினர். அவர்களில், ராகுல் காந்தியின் அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் உண்டு. 55 ஆண்டுகால காங்கிரஸ் பிரதமர்களும், ஏழை மக்களைக் கைதூக்கிவிட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் என்று புரியாமல், அதை நடத்தாமல், நாற்காலியைத் தேய்த்துவிட்டுப் போனார்களா?

இல்லையென்றால், கடைசி காங்கிரஸ் பிரதமரின் பதவிக் காலமும் முடிந்து, நரேந்திர மோடி 2014-ல் பிரதமர் ஆன பின்புதான் நாட்டில் ஏழைகள் தோன்ற ஆரம்பித்தார்களா, அவர்கள் விர்ரென்று அதிகரித்து 90 சதவிகிதம் ஆகிவிட்டனரா?

90 சதவிகித மக்கள் ஏழைகள், அவர்களுக்கு அநீதி நடக்கிறது, என்று பேசினால் என்ன அர்த்தம்? மீதி 10 சதவிகிதத்தினர் தான் அந்த 90 சதவிகித மக்களுக்கு அநீதி செய்கின்றனர் என்று அர்த்தமா? அல்லது, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆனாலும், தங்கள் முயற்சியால், திறமையால் நமது அரசாங்கத்தையும் சகித்து அதோடு போராடி ஏழ்மையிலிருந்து மீள முடிந்தவர்கள் நாட்டில் 10 சதவிகிதத்தினர் தான், அந்த அளவுக்கு இந்திய அரசாங்கம் முன்னர் பல வருடங்களாகவே தூங்கியது, பொதுமக்களை உதாசீனம் செய்தது, என்று அர்த்தமா?

உண்மை என்னவென்றால், வலுவான அரசியல் தலைமை, தொலைநோக்குப் பார்வை, பயனுள்ள பொருளாதாரத் திட்டங்கள், திறமையான நேர்மையான நிர்வாகம், ஆகியவை நமது மத்திய அரசிலிருந்து நடுவில் பல வருடங்கள் காணாமல் போயின. பல மாநில அரசுகள் படு மோசம். இவைதான் நமது மக்கள் பின்தங்கி இருக்க முதன்மைக் காரணங்கள்.

சாதாரண இந்திய மக்கள் நல்லவர்கள், ஆனால் அப்பாவிகள். நமது அநேக அரசியல் தலைவர்களின் பதவிப் பித்தை, சுயலாபக் கணக்குகளை, சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது ராகுல் காந்திக்கு ஒரு பலம்.

பொதுவாக இந்திய ஹிந்துக்களுக்கு மதத்தை விட, ஜாதியின் மீது பற்று அதிகம். ஜாதி அடிப்படையில் அவர்களிடம் அனுதாபம் காட்டுவது போல் அவர்களை அணுகி, “இந்தியாவில் நீங்கள் 90 சதவிகிதம். உங்களுக்கு அநீதி நடக்கிறது. மற்ற ஜாதியினருக்கு அநீதி நடக்கவில்லை. தேசத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுத்து, உங்கள் ஜாதியினர் அனைவரையும் அநீதியிலிருந்து மீட்டுக் கரையேற்ற நான் இருக்கிறேன்” என்று ஒரு தலைவர் சொன்னால் என்ன அர்த்தம்? அவர் பேசுவதின் அர்த்தம் விலாவாரியாக இதுதான்.

’90 சதவிகித மக்களே! மீதம் 10 சதவிகித மக்களிடம் இருக்கிற சொத்து சுகங்கள், உங்களிடம் இருப்பதை விட மிக அதிகம். அவர்கள் மட்டும் அப்படி முன்னேறியதால், அவர்களை அப்படி வளர விட்டதால், நீங்கள் ஏழைகளாக விடப் பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குச் செய்யப்பட்ட அநீதி.‘

’90 சதவிகித மக்களே! உங்கள் நிவர்த்திக்கான முதல் நடவடிக்கை, நாடு முழுவதுமான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு. என் தலைமையிலான மத்திய அரசு அதைச் செய்யும். உங்களில் யார் யார் என்ன ஜாதி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், என்பதை ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காண்போம். மற்ற 10 சதவிகித மக்கள் யார் யார், அவர்கள் என்ன ஜாதி, எங்கு வசிக்கிறார்கள், அவர்களின் சொத்து சுகம் என்ன என்பதும் அந்த எக்ஸ்-ரே கணக்கெடுப்பில் தெரியும்.‘

’90 சதவிகித மக்கள், 10 சதவிகித மக்கள், இரு தரப்பினரையும் இப்படி அடையாளம் கண்டபின், இரண்டு பக்கத்து மனிதர்களின் சொத்து சுகங்கள் சமமாக அமையும்படி எனது அரசு தேவையானதைச் செய்யும் – அதாவது, அந்த 10 சதவிகித மக்களிடம் உள்ள சில சொத்துக்கள் உங்களிடம் லபக் என்று வந்து சேரலாம்’

இந்த ரீதியில் தனது பேச்சை அந்த சாதாரண மக்கள் புரிந்து கொள்ளட்டும் என்று அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும். ‘மக்கள் எப்படியோ ஏமாந்து என் கட்சிக்கு ஓட்டளித்தால் சரிதான். நான் எப்படித்தான் பிரதமர் ஆவது?’ – என்றும் அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும்.

பரிதாப நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், அதற்கான நல்லெண்ணமும் திராணியும் இல்லாமல், அவர்களை அந்தத் தலைவர் வஞ்சிக்க நினைப்பதாகவும் அர்த்தம். ராகுல் காந்தி வேறு மாதிரியாகவா நினைப்பார்?

ஆனால் ஒன்று. இந்தியாவில் நீங்கள் ஒரு ஜாதியைச் சேர்ந்தவராக இல்லாமல், ஜாதி ரீதியாக, ஜாதி அடிப்படையில், அந்த ஜாதி மக்களின் மனதை வசீகரிக்க முடியாது, அவர்களை நீங்கள் ஜாதி ரீதியாக அணுகி அவர்களின் ஜாதித் தலைவர் மாதிரி – அதுவும் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஜாதிகளின் தலைவர் மாதிரி – ஆக முடியாது. ஆகையால் ராகுல் காந்தியின் புதிய பித்துக்குளிப் பேச்சு அவருக்கு உதவாது.

இன்னொன்று. ஹிந்துக்கள் பொதுவாக விதியை நம்புகிறவர்கள். அசிரத்தையால் ஒரு அரசாங்கம் தங்களை வாட்டி வதைத்தாலும், யார் எப்படிப் பிழைத்தலும், பணம் சேர்த்தாலும், தங்கள் கஷ்டம், தங்கள் ஏழ்மை, ஆகியவை தங்களின் விதி வசம் என்று பொறுத்துப் போகிறவர்கள். அவர்களிடம் போய், “90 சதவிகித மக்களே! பத்து சதவிகிதம் உள்ள வேறு ஜாதி மக்கள் மட்டும் சொத்து சுகத்தோடு இருக்கிறார்கள். நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால், 90 மற்றும் 10 ஆகிய இரண்டு தரப்பினரையும் சொத்து சுகத்தில் ஒரே அளவுக்கு சமன் செய்கிறேன்” என்று பேசினால் அது எடுபடாது. ராகுல் காந்திக்கு இதுவும் புரியாது

Author: R Veera Raghavan,
Advocate, Chennai
([email protected])

https://rvr-india.blogspot.com

IPL 2024: கொல்கத்தா அணி பெற்ற எளிய வெற்றி

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

40ம் நாள்: ஐபிஎல் 2024 – 29.04.2024 

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி அணியை (153/9, குல்தீப் யாதவ் 35*, ரிஷப் பந்த் 27, அபிஷேக் போரல் 18, அக்சர் படேல் 15, ப்ருத்வி ஷா 13, ஜேக ஃப்ரேசர் மகுர்க் 12, வருண் சக்ரவர்த்தி 3/16, வைபவ் அரோரா 2/29, ஹர்ஷித் ராணா 2/28) கொல்கொத்தா அணி (16.3 ஓவர்களில் 157/3, பில் சால்ட் 68, ஷ்ரேயாஸ் ஐயர், 33*, வெங்கடேஷ் ஐயர் 26*, சுனில் நரேன் 15, ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 2/25) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான ப்ருத்வி ஷா (7 பந்துகளில் 13 ரன்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (7 பந்துகளில் 12 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த அபிஷேக் போரல் (15 பந்துகளில் 18 ரன்), ஷாய் ஹோப் (3 பந்துகளில் 6 ரன்), ரிஷப் பந்த் (20 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), அக்சர் படேல் (21 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர்), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (7 பந்துகளில் 4 ரன்), குமார் குஷகரா (1 ரன்), ரசிக் சலாம் (8 ரன்), லிசாட் வில்லியம்ஸ் (ஆட்டமிழக்காமல் 1 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக விளையாடவில்லை.

குல்தீப் யாதவ் மட்டும் 26 பந்துகளில் 35 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்தது. 

154 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (33 பந்துகளில் 68 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) மற்றும்  மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் (10 பந்துகளில் 15 ரன், 3 ஃபோர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களம் இறங்கிய ரிங்கு சிங் (11 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்) இன்று சோபிக்கவில்லை.

அதன் பின்னர் ஆடவந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் கொல்கொத்தா அணிக்கு ஒரு நல்ல் வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 16.3 ஓவரிலேயே 3 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கொல்கொத்தா அணியின் சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை லக்னோவில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

29.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 981160.694
கொல்கொத்தா963121.096
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
லக்னோ954100.059
டெல்லி115610-0.442
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை9366-0.261
பெங்களூரு10376-0.415

தாலிக்கயிறைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சாடிய மோடி!

#image_title

சகோதர சகோதரிகளே, இப்போதெல்லாம் காங்கிரசை விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் ஒரு விஷயத்தை மிகத் தீவிரமாகக் கூறுகிறார்கள்.  

அவர்கள் எல்லாம் கூறுகிறார்கள் – இப்போது காங்கிரஸ் காங்கிரஸாக இல்லை என்கிறார்கள்.   இப்போது காங்கிரஸ் அர்பன் நக்ஸல்வாதிகள் கைகளில் சென்று விட்டது. 

காங்கிரஸ் இப்போது, இடதுசாரிகளின், வலையில் சிக்கி இருக்கிறது.   நண்பர் ஒருவர் அவர்களிடம் கேட்டார், இதை எப்படி நீங்கள் சொல்கிறீர்கள் என்று?   அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பாருங்கள் என்று அவர் கூறினார்.  

இந்த முறை வெளியாகி இருக்கும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்!! 

 காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, கவலையளிப்பது ஆபத்தானது.  மேலும் மாவோ சித்தாந்த, எண்ணத்தை பரவலாக்குவது தான் அவர்களுடைய, இந்த முயற்சி.  

அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்?  ஒரு வேளை காங்கிரஸின் ஆட்சி அமைந்தால், அனைவரின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்படும்.   நம்முடைய சகோதரிகளிடம் எத்தனை தங்கம் இருக்கிறது,  இது ஆய்வு செய்யப்படும்.   அது கணக்கு செய்யப்படும். 

நம்முடைய பழங்குடி குடும்பங்களிடம் வெள்ளி இருக்கும்.   எத்தனை வெள்ளி இருக்கிறது என்பது கணக்கெடுக்கப்படும்.  

அரசு அலுவலர்களிடம் எத்தனை இடம் இருக்கிறது பணம் என்ன எங்கே இருக்கிறது வேலை எங்கே என்ன, இது ஆய்வு செய்யப்படும்.   இது மட்டுமா மேலும் என்ன கூறியிருக்கிறார்கள் தெரியுமா?  

நம் சகோதரிகளிடம் இருக்கும் தங்கம் இருக்கிறதே!!   மேலும் இருக்கும் சொத்துக்கள், இவை அனைத்தையும், சமமான வகையிலே பிரித்துக் கொடுத்து விடுவார்களாம்.   என்ன இது உங்களுக்கு சம்மதமா?   

உங்கள் சொத்துக்களைக் கவர அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?   உங்களுடைய சொத்துக்களை, கடினமாக நீங்கள் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை, அரசாங்கம் கவர்ந்து கொள்ள அதிகாரம் இருக்கிறதா?  

அந்தச் சொத்துக்களை, என் தாய்மார்கள் சகோதரிகளின் வாழ்க்கையிலே, தங்கம், அது வெறும், பகட்டுப் பொருள் மட்டும் அல்ல.   அது சுயகௌரவத்தோடு தொடர்புடையது.   அவர்கள் அணியும் தாலி, அது பணம் கொண்டு எடை போடும் பொருளல்ல.  அவர்களுடைய வாழ்க்கையின் கனவுகளோடு தொடர்புடையது.  

அதைப் பிடுங்குவதைப் பற்றியா உங்கள் அறிக்கையிலே எழுதியிருக்கிறீர்கள்?  

தங்கத்தை எடுத்துக் கொள்வோம், அனைவருக்கும் பங்களித்துக் கொடுப்போம்.  

முன்பு அவர்கள் ஆட்சி நடந்த போது என்ன கூறினார்கள்?   இந்த தேசத்தின் சொத்தின் மீது முதல் அதிகாரம், முஸ்லீம்களுடையது.  இதன் பொருள் என்ன?  இந்தச் சொத்துக்களைச் சேகரித்து யாரிடம் கொண்டு சேர்ப்பார்கள்?   யாருக்கு அதிகக் குழந்தைகள் இருக்கிறார்களோ அவர்களுக்கு அளிப்பார்கள்.   ஊடுறுவல்காரர்களுக்குக் கொடுப்பார்கள்.   

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்து வைத்த பணம், ஊடுறுவல்காரர்களுக்கா அளிக்கப்பட வேண்டும்?   உங்களுக்கு இதில் சம்மதமா?  

இதையே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.   தாய்மார்கள் சகோதரிகளின் தங்கத்தைக் கணக்குப் பார்க்க நினைப்பவர்கள், அதைப் பட்டியலிட்டுத் தகவல் சேகரிப்பவர்கள், அதன் பிறகு, அந்தச் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பார்கள்.  

யாருக்குக் கொடுப்பார்கள்?   யாரைப் பற்றி மன்மோஹன் சிங் அவர்களின் அரசு கூறியது?  சொத்துக்களின் மீது முதல் உரிமை முஸ்லீம்களுக்கு உரியது.  

சகோதர சகோதரிகளே, இந்த அர்பன் நக்ஸல் கருத்தியல், என்னுடைய தாய்மார்களே சகோதரிகளே, இது உங்களுடைய, தாலிக் கயிற்றைக் கூட விட்டு வைக்காது.  இந்த அளவுக்குக் கொண்டு போகும் என்பதைக் கூறவே வந்திருக்கிறேன். 

ராஜஸ்தான் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியவை…
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

IPL 2024: ருதுராஜ் அதிரடியில் மீண்டும் பட்டியலில் மேலேறிய சென்னை!

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

39ம் நாள் :ஐபிஎல் 2024 – 28.04.2024

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றாது.

குஜராத் டைடன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

          குஜராத் அணியை (200/3, சாய் சுதர்ஷன் 84*, எம். ஷா ருக் கான் 58, டேவிட் மில்லர் 26*, ஷுப்மன் கில் 16) பெங்களூரு அணி (16 ஓவர்களில் 206/1, வில் ஜேக்ஸ் 100*, விராட் கோலி 70*, டியு பிளேசிஸ் 24) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே குஜராத் அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான விருத்திமான் சாஹா (4 பந்துகளில் 5 ரன்) முதலாவது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் (19 பந்துகளில் 16 ரன்) 6.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பின்னர் ஆடவந்த சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷா ருக் கான் (30 பந்துகளில் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), டேவிட் மில்லர் (19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கட் இழப்பிற்கு 200 ரன் எடுத்திருந்தது.

          201 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி (44 பந்துகளில் 70 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும்  மற்றொரு தொடக்க வீரரான டியு பிளேசிஸ் (12 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களம் இறங்கிய வில் ஜேக்ஸ் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 5 ஃபோர், 10 சிக்சர்) ஆகியொர் பொறுப்பை உணர்ந்து ஆடி பெங்களூரு அணிக்கு ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தனர்.

அந்த அணி 16 ஓவரிலேயே 1 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். குஜ்ராத் அணியின் சுழல் பந்து வீச்சாளர்களை பெங்களூரு அணி இன்று கையாண்டவிதம் பாராட்டிற்கு உரியது.

குஜராத் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் இன்று 11 ஓவர்கள் வீசினர் அதில் ரஷீத்கான் 51 ரன்கள் கொடுத்தார். நூர் அகமது 43 ரன்கள் கொடுத்தார். சாய் கிஷோர் 30 ரன்கள் கொடுத்தார். குஜராத் அணியில் தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷா ருக் கான் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தும் வெற்றி கைநழுவிப் போனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

          சென்னை அணி (212/3, ருதுராஜ் கெய்க்வாட் 98, டேரில் மிட்சல் 52, ஷிவம் துபே 39*, அஜிங்க்யா ரஹானே 9, தோனி 5*) ஹைதராபாத் அணியை (199/3, ஐடன் மர்க்ரம் 32, கிளாசன் 20, நிதீஷ் குமார் ரெட்டி 15, அபிஷேக்ச் ஷர்மா 15, துஷார் தேஷ்பாண்டே 3/23, பதிரனா 2/17) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே சென்னை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே (12 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.  

மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் (54 பந்துகளில் 98 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) 19.2ஆவது ஓவர் வரை ஆடினார். மூன்றாவதாகக் களமிறங்கிய டேரில் மிட்சல் (32 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), ஷிவம் துபே (20 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்திருந்தது.

          213 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் (7 பந்துகளில் 13 ரன்) இரண்டாவது ஓவரிலும் அபிஷேக்ச் ஷர்மா (9 பந்துகளில் 15 ரன்,) மூன்றாவது ஓவர் ஐந்தாவது பந்திலும் ஆட்டமிழந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் (பூஜ்யம் ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மர்க்ரம் (32 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (15 ரன்), கிளாசன் (20 ரன்), அப்துல் சமது (19 ரன்), ஷப்பாஸ் அகமது (7 ரன்), பேட் கம்மின்ஸ் (5 ரன்), ஜெயதேவ் உனக்தத் (1 ரன்), புவனேஷ் குமார் (ஆட்டமிழக்காமல் 4 ரன்) என பேட்டர்கள் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்துகொண்டே இருந்தனர்.

இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 134 ரன் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          சென்னை அணியின் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

28.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்981160.694
கொல்கொத்தா853100.972
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
லக்னோ954100.059
டெல்லி105510-0.276
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை9366-0.261
பெங்களூரு10376-0.415

IPL 2024: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாய்ங்க…! இது என்ன கிரிக்கெட்டா?

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 27.04.2024

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம்  லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

          டெல்லி அணி (257/4, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 84, ஷாய் ஹோப் 41, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 48*, அபிஷேக் போரல் 36, ரிஷப் பந்த் 29, அகசர் படேல் 11*) மும்பை அணியை (247/9, திலக் வர்மா 63, ஹார்திக பாண்ட்யா 46, டிம் டேவிட் 37, சூர்ய குமார் யாதவ் 26, இஷான் கிஷன் 20, சசிக் சலாம் 3/34, முகேஷ் குமார் 3/59) 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே டெல்லி அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜேக் ஃப்ரேஸர் மகுர்க் (27 பந்துகளில் 84 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் அபிஷேக் போரல் (27 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.

மகுர்க் 7.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 9.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 127/2. அவருக்குப் பின்னர் ஆடவந்த ஷாய் ஹோப் (17 பந்துகளில் 41 ரன்), ரிஷப் பந்த் (19 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கட் இழப்பிற்கு 257 ரன் எடுத்திருந்தது.

          258 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா (8 பந்துகளில் 8 ரன்,) நாலாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் (14 பந்துகளில் 20 ரன்) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவதாகக் களம் இறங்கிய சூர்ய குமார் யாதவ் (13 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) நெஹல் வதேர (4 ரன்), முகம்மது நபி (7 ரன்), பியுஷ் சாவ்லா (10 ரன்), ல்யூக் வுட் (9 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு அவுட்டாயினர். திலக் வர்மா (32 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (24 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), டிம் டேவிட் (17 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ஆகியொர் பொறுப்பை உணர்ந்து ஆடியும் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 247 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 10 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          டெல்லி அணியின் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம்  லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். 

லக்னோ சூப்பட் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

          லக்னோ அணியை (196/5, கே.எல். ராகுல் 76, தீபக் ஹூடா 50, சந்தீப் ஷர்மா 2/31) ராஜஸ்தான் அணி (199/3, சஞ்சு சாம்சன் 71*, துருவ் ஜுரல் 52*, ஜாஸ் பட்லர் 34, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 24, ரியன் பராக் 14) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னொவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே லக்னோ அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான க்விண்டன் டி காக் (3 பந்துகளில் 8 ரன், 2 ஃபோர்) முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஃபோர் அடித்தார்; மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.  

மற்றொரு தொடக்க வீரரான கே.எல். ராகுல்  (48 பந்துகளில் 76 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) 17.2ஆவது ஓவர் வரை ஆடினார். மூன்றாவதாகக் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் இன்று ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின்னர் ஆடவந்த தீபக் ஹூடா (31 பந்துகளில் 50 ரன்), நிக்கோலஸ் பூரன் (11 ரன்), ஆயுஷ் பதோனி (ஆட்டமிழக்காமல் 18 ரன்), க்ருணால் பாண்ட்யா (15 ரன்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்திருந்தது.

          197 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர் (18 பந்துகளில் 34 ரன்) ஆறாவது ஓவர் ஐந்தாவது பந்திலும் யஸஷ்வி ஜெய்ஸ்வால் (18 பந்துகளில் 24 ரன்,) ஏழாவது ஓவரின் முதல் பந்திளும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன்  (33 பந்துகளில் ஆடமிழக்காமல் 71 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்), ரியான் பராக (14 ரன்), துருவ் ஜுரல் (34 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 52 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்து 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர்  சஞ்சு சாம்சன் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெறும்.

27.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்981160.694
கொல்கொத்தா853100.972
ஹைதராபாத்853100.577
லக்னோ954100.059
டெல்லி105510-0.276
சென்னை84480.415
குஜராத்9458-0.974
பஞ்சாப்9366-0.187
மும்பை9366-0.261
பெங்களூரு9274-0.721

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

#image_title

மீனாட்சி திருக்கல்யாணம், வைகையில் கள்ளழகர் இறங்குதல் என மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர் போல தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.

மதுரை கோவில் பாப்பாகுடி மகரிஷி பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து முழு சித்திரைத் திருவிழாவையும் மீட்டுருவாக்கம் செய்தனர். மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன. இந்த நிகழ்வுகளை மாணவர்கள் தத்ரூபமாகச் செய்து காட்டினர்.

இதற்காக தங்க குதிரை போல தயார் செய்யப்பட்ட வாகனத்தில், கள்ளழகர் வேடமணிந்த மாணவர் ஒருவர் அமர்ந்து கொண்டார். அவரோடு, கோயில் பட்டாச்சாரியார் வேடம் அடைந்த மாணவரும் ஏறிக்கொண்டார். எதிர் சேவையை நினைவுபடுத்தும் விதமாக, சீர்பாத தூக்கிகள் போல தலையில் பாகை கட்டிய 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி வளாகத்திற்கு வெளியே கள்ளழகரை ஊர்வலமாக அழைத்துச் சென்று வந்தனர்.

கள்ளழகருக்கு முன்பாக கருப்பசாமி வேடமிட்ட மாணவர்கள் அறிவாள் ஏந்தி ஆடியபடி சென்றனர். மேலும் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் ஊழியர்கள் காய்கறி, தேங்காய், பூ, பழம் மற்றும் மாலை தட்டுகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். நாம சின்னம் போட்ட மயிலிறகு விசிறிகளையும் எடுத்து வந்து கூட்டத்தின் நடுவே விசிறி விட்டனர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக, விளையாட்டு மைதானத்தின் நடுவில் செயற்கைக் குளமும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கள்ளழகர் இறங்க மாணவர்கள் தங்களிடமிருந்த தண்ணீர் துப்பாக்கியால் தண்ணீர் பீச்சி அடித்து கொண்டாடினர்.

இதனை பார்ப்பதற்கு சித்திரை திருவிழா மறுபடியும் நடப்பது போன்று இருந்தது. முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

திருவிழாவில் பள்ளி மாணவர்களால், சிறு கடைகள் வைக்கப்பட்டு அதனால் கிடைத்த பணம் பெற்றோர் அற்ற குழந்தைகள் மற்றும் காப்பகத்தில் இருக்கும் முதியவர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளித் தலைவர் வடிவேலு, முதல்வர் ஹேமா கண்ணன் தலைமையில் கலை மற்றும் கலாச்சார துறை ஆசிரியர்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

#image_title

2009, பிப்.18ம் தேதி எனது ப்ளாக்கில் நான் எழுதிய ஒரு செய்திக் கட்டுரை இது. 

அன்று, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அந்நாளில் நான்  விகடனில் பணியில் இருந்தேன்.அதனால்… ம்… புனைபெயர்தான்! ஜூ.வி.யில் கழுகார் பிரபலம் என்பதால், போட்டிக்கு நானும் ‘ஸம்பாதி’ என்ற கழுகின் பெயரிலான கழுகாரை என் ஒரிஜினல் பேரில் இல்லாத ‘எதிரொலிகள்’ என்ற ப்ளாக்கில் போட்டு எழுதினேன். சம்பாதி என்றால், சம்பாதித்தல் ஆகிவிடும் என்பதால், ஸம்பாதி-யென எழுதினேன். யதேச்சையாக இப்போது அந்த வாசகங்கள் படிக்க நேர்ந்தது. 

அன்றே நான், மோடியைப் போன்ற ஒரு நபர் மத்தியில் ஆளக் கூடாதா என்ற தீவிர ஏக்கத்தினை வெளிப்படுத்தி, கட்டுரையினை இப்படி முடித்திருந்தேன். 

//(கடைசியில் சொல்ல வந்ததைச் சொல்லி ஒருவாறு விடை பெற்றார். ஆனால், அவருடைய பல ஐடியாக்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை மட்டுமல்ல, வெற்றிகரமானவையும் கூட! மோடியைப் போல் மத்தியிலும் ஒரு சிறந்த நிர்வாகி அமையவேண்டும்… அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும். நம் நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகி யார்!?)

– ஸம்பாதி //

மோடியைப் போல்… நம் நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகி – மோடியே தான்! என்பதை இந்தப் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் என் டைரியைத் திருப்பிப் பார்க்கும் போது பளிச்செனக் கண்ணில் பட்டு, நீர்த் திவலைகள் விழித்திரையை மறைத்தன. 

Blog link : https://ethiroligal.blogspot.com/2009/02/blog-post_18.html

முழு நீளக் கட்டுரையையும் தருகிறேன். 15 வருடம் கழித்து இப்போது படித்தாலும், அன்றே – தெய்வத் தமிழராகிய நாம் மோடியை எவ்வாறு பார்த்தோம், புரிந்து கொண்டோம் என்பதற்கான அத்தாட்சியாகவே இது மனத்தில் பட்டது. 

ஒரு மேலாண்மைப் படிப்பு மாணவனான நான், அதை ஒட்டியே அன்றே நரேந்திர மோடியிடம் கண்ட மேலாண்மைப் பண்புகள் – என்று குறிப்பிட்டு, அவர் பேசியதன் கருப் பொருளை, கண்டு கேட்டு வியந்த வித்தகப் பேச்சை இப்படியாகப் பதிவு செய்திருந்தேன்…

விருப்பமுள்ள அன்பர்கள் பதிவின் நீளம் பார்க்காமல் படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்! 

அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்


நரேந்திர மோடியிடம் நான் கண்ட மேலாண்மைப் பண்புகள்:

பிப்.16 திங்கள்கிழமை மாலை 6 மணி. நாரத கான சபா அரங்கம் நிரம்பியிருந்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் கல்விச் சிந்தனைகள் பற்றி எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் கல்வியே கற்பகத்தரு நூலின் வெளியீட்டு விழா நிகழ்வு அது.

நிகழ்ச்சித் தொகுப்பு வழக்குரைஞர் சுமதி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அவ்வை நடராஜன், நல்லி குப்புசாமி செட்டியார், பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ், சோ ராமசாமி ஆகியோர். அவ்வை நடராஜன் எப்போதுமே தமிழில் வெளுத்து வாங்குவார். அன்று நரேந்திர மோடிக்குப் புரியவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ, தமிழிலும் பின்னர் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் கலக்கினார். நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசுவது அவருடைய சிறப்பு.

நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் நல்லி குப்புசாமி செட்டியாரைப் பார்த்திருக்கிறேன். புத்தகம் பற்றியே பெரும்பாலும் பேசுவார். இந்த நிகழ்ச்சியிலும் அப்படியே பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நூலை விட்டுவிட்டு, அவருடைய பிஸினெஸ் நூலைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு ஆச்சரியம் & மோடிக்காக அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் சாதாரண இந்தியில் அசாதாரணமாகப் பேசினார். சூரத் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் மில் அதிபர்கள் மற்றும் சூரத் துணிகளின் மேன்மையைப் பற்றி ஒரு துணி வியாபாரி என்ற வகையில் பேசிச் சென்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நரேந்திர மோடி, இவருடைய இந்தப் பேச்சுக்கு ஒரு சபாஷ் போட்டார். காரணம், தான் ஒரு ஑பக்கா பிஸினஸ் மேன்ஒ என்றும், தன் மாநில டெக்ஸ்டைல் பற்றி அவர் மார்க்கெட்டிங் செய்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டார்.பெரும்பாலான மேடைகளில் முக்கியப் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு கொடுத்து கௌரவிப்பார்கள். அப்படிச் செய்யும்போது பெரும்பாலானவர்கள் அந்தப் பொன்னாடையை அப்படியே கசக்கி சுருட்டி அல்லது ஏனோதானோவென்று வைத்துக் கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் நான் ஒன்றை கவனித்தேன். நல்லி தனக்குப் போடப்பட்ட பொன்னாடையை எவ்வித கூச்சமோ சங்கடமோ இல்லாமல், விரித்து, நன்கு உதறி, கலைக்கப்பட்ட மடிப்பிலேயே எந்தவித தொய்வும் இல்லாமல் மடித்து, எப்படி முதலில் கொண்டுவந்தார்களோ அப்படி மடிப்புக் குலையாமல் வைத்துக் கொண்டார். பழக்க தோஷம் என்பார்கள் சிலர். எனக்குப் பட்டது, தொழில் தர்மம்; திருந்தச் செய்யும் நேர்த்தி. வெற்றியாளனுக்குத் தேவையான பண்பு இது என்று எண்ணினேன்.

பி.எஸ்.ராகவன், நரேந்திர மோடியைப் பற்றி ஒரு விமர்சகர் எப்படி எழுதியிருந்தார் என்றும், பின்னர் அவரை நேரில் சந்தித்த போது, அவருடைய மனம் எப்படி மாறியது என்றும், அணுகுவதற்கு மிக எளியவர் என்பதை விளக்கி, குஜராத்தில் அவரை கடவுளுக்கு ஒப்பாக வணங்குகிறார்கள் சாமானியர்கள் என்றும் குறிப்பிட்டு அமர்ந்தார். மோடி உங்களால் முடியும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அவர் குஜராத்தோடு நின்றுவிடக்கூடாது, இந்தியா முழுமைக்கும் சென்றுவர வேண்டும் என்றார் உணர்ச்சிவயப்பட்டு…

சோ ராமசாமி பேசிய போது சில சலசலப்பு ஏற்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அப்போது நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த சிலர்( எனக்குப் பின் வரிசையில் அமர்ந்திருந்த சிலர்…) எழுந்து நின்று கூச்சல் போட்டனர். நாளிதழ்களில் வெறும் சலசலப்பு என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.

உண்மையில் அரங்கினுள் என்னதான் நடந்தது?

எப்போதுமே நக்கல் பேச்சோடு தொடங்கும் சோ வின் பேச்சு, அன்றும் நக்கலோடுதான் தொடங்கியது. ஹிந்தியில் பேசிய நல்லியை கொஞ்சம் நக்கலடித்தார்… ஑஑என்ன, நல்லி ரெண்டு மூணு வார்த்தைதான் திரும்பத்திரும்பச் சொன்னார். கர்ணா, முசே, அச்சா, பஹுத் இப்படி… இதை என்னாலும்தான் பேச முடியும். (இப்படிச் சொன்னபோது பார்வையாளர்கள் கைதட்டினர், விசில் அடித்தனர்). ஆனால், அவரைப் போல் முடியாது. அவர் பிஸினஸ் விஷயமாக பலரைப் பார்க்கிறவர். அவருக்கு பல மொழிகள் தெரிந்திருக்கலாம். எனக்கு அப்படி அல்ல, அதனால் தமிழிலும் ஆங்கிலத்திலுமே பேசுகிறேன். என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.மோடியை தமிழர்களுக்கு அதிகம் தன் பத்திரிகை மூலம் தெரியவைத்து, அவரை ஒரு சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்த்தியதாக முன்னர் குறிப்பிட்ட ஒருவரின் பேச்சை அப்படியே சொல்லி, தான் ஒன்றும் மோடியை சூப்பர் ஸ்டாராக மாற்றவில்லை என்றும், சூப்பர் ஸ்டாரைத்தான் மோடியாக மாற்ற முயல்வதாகவும் சொன்னபோது பலத்த கைதட்டல்கள்.

இப்படி, மோடியைப் பற்றியும், அல்லயன்ஸ்ஸின் பதிப்புத் திறன் பற்றியும் பேசிக்கொண்டு வந்தவர், இந்த நூல் தமிழில் வந்திருப்பது மிகவும் பொருத்தமானது. காரணம், இப்போது, பா.ஜ.கவுக்கு வேறு விடுதலைப்புலிகள் பேரில் புதிய பாசம் வந்திருக்கிறது… என்றார்.

சோவின் இந்த நக்கலுக்கு, பா.ஜ.தொண்டர்கள் தரப்பில் சலசலப்பு எழுந்தது. இலங்கைப் பிரச்னையை இங்கே பேசக்கூடாது என்று ஒரு சாரார். தமிழில் பேசு என்று ஒரு சாரார். நமது கட்சிக் கொள்கைக்கே முரணாகப் பேசுகிறார், கேட்டுக்கொண்டு சும்மா இருப்பதா என்று ஒருசிலர்… (இந்த நிகழ்ச்சி ஏதோ பா.ஜ.கட்சிக் கூட்டம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்!)… இந்த நிலையில் தங்கள் கட்சிக்காரர்களை சமாதானம் செய்ய பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசனும், தேசியச் செயலர் சு.திருநாவுக்கரசும் முன்னிருக்கையில் இருந்து எழுந்து வந்து, அரங்கு மத்திக்கு வந்தனர். ஒருவாறு கூட்டம் சலசலப்பு அடங்கியது. சோ பேசிக்கொண்டே இருந்தார். இலங்கையில் சண்டையை நிறுத்து என்று நாம் எப்படி கோரமுடியும். அது அவர்கள் உள்நாட்டு விவகாரம். நம் நாட்டில் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை கூடாது என்று பாகிஸ்தானோ மற்ற நாடுகளோ சொன்னால் நாம் சும்மாயிருப்போமா? நமக்கு ஒரு நியாயம் அவர்களுக்கு ஒரு நியாயமா என்று பேசிக்கொண்டே சென்றார்.அவ்வளவுதான், சோவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு அலை இன்னும் அதிகமானது. அதுவரை மரியாதையுடன் ஑ங்கஒ போட்டு கூச்சல் போட்டவர்கள், இப்போது ஒருமைக்கு மாறினார்கள். ஑இலங்கைப் பிரச்னையை காஷ்மீரோடு ஒப்பிடாதே… இத்தோடு பேச்சை நிறுத்து… அங்கே தினம் தினம் அப்பாவித் தமிழன் குண்டடிபட்டு சாகிறான். அவனும் சொகுசாக வாழும் காஷ்மீர் பயங்கரவாதியும் ஒன்றா? அடிப்படை தெரியாமல் இப்படி பேசாதே! என்று கோஷம் வலுத்தது.

ஆனாலும் சோ விடுவதாயில்லை. நீங்கள் என்னதான் எதிர்த்தாலும் நான் அப்படித்தான் பேசுவேன். இந்த கோஷத்துக்கெல்லாம் பயப்பட மாட்டேன். இதை இலங்கையின் வன்னி பகுதியில்கூட போய் நின்று இதையேதான் சொல்வேன். இதற்காக நான் பயப்படவில்லை… விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் ஜெயலலிதாதான் சரியான நபர். அவர் அன்றும் இன்றும் ஒரே முடிவில் உறுதியோடு இருக்கிறார்… இப்படிப் பேசிய போது, பார்வையாளர்கள் சிலர், ஑ஜெயலலிதா ஒழிக!ஒ என்று எழுந்து நின்று கோஷம் போட, நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, ஒரு பக்கா அரசியல் கூட்டமாக களம் மாறிப்போனது. ஒருவாறு சோ பேச்சை நிறுத்திக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

(அவர் இப்படி எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்தவர்தான். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லை. ஆனால் புதிது எதுவென்றால், பா.ஜ. தரப்பில் கட்சித் தொண்டர்கள் இடையில் எழுந்து எதிர்ப்பு கோஷம் போடுவது! ஒருமையில் திட்டுவது. பா.ஜ. கட்சியினருக்கு இப்போது புது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து தொற்றிக்கொண்டிருக்கும் பழக்கமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், இவர்கள் சொல்வதுபோல், இலங்கைப் பிரச்னைக்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இரண்டுக்கும் முடிச்சு போடுவது தவறு என்றே மனதில் படுகிறது. இலங்கை குறித்து பேச நமக்கு உரிமை உண்டு; ஆனால், காஷ்மீரில் கைவைக்க பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்ற எண்ணம் எனக்கு. இது குறித்து நிறைய தகவல்களை சேகரித்து பின்னர் பிளாக்கில் இட எண்ணம் உண்டு).

பின்னர் பேசிய நரேந்திர மோடி, தன் மாநிலத்தை எவ்வாறு சூப்பர் பவர் மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கிறேன் என்று பெருமிதம் பொங்கச் சொன்னார். அவருடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மேலாண்மைத் துறை மாணவன் என்ற முறையில், அவருடைய மேலாண்மை உத்திகளை கவனிப்பதிலேயே இருந்தேன். இதயம் தொட்ட அவருடைய பேச்சிலிருந்து சில பகுதிகள்…நான் குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சி எனக்கு இரண்டு நாட்கள் நீடித்திருந்தது. பாராட்டுகள் என்ன, மாலை மரியாதைகள் என்ன…. கனவுலகில் மிதக்கும் மகிழ்ச்சி. எல்லாம் இரண்டு நாட்கள்தான்! மூன்றாவது நாள் நான் நாற்காலியில் அமர்ந்து முதல் கோப்பைப் பார்த்தவுடனேயே எல்லாம் பொசுக்கெனப் போய்விட்டது. தேசிய அளவில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் மாநிலங்களின் வரிசையில் குஜராத் 20வது இடத்தில் இருந்தது. இந்த அறிக்கை என்னை இரவு முழுதும் தூங்க விடவில்லை. மோடி ஏதாவது செய் என்று என் உள்மனம் எனக்குக் கட்டளை இட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு முடிவு எடுத்தேன். இது போன்ற மேடைகளில் எனக்கு வரும் பரிசுப் பொருள்கள் இத்யாதிகளை அப்படியே அரசுக் கருவூலத்தில் சேர்த்து விடுவது; அதை ஏலம் விட்டு வரும் பணத்தில் சுயமாக கல்விக்கு என்று செலவழிப்பது…. ஆச்சர்யம், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் சேர்ந்தது. அதை பெண் குழந்தைகளின் கல்விக்காகவே செலவழித்தேன்.

கிராமப் புறங்களில் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை நிற்றல் சதவீதம் அதிகமாக இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்கினர். இந்நிலையில் அரசாங்க அதிகாரிகளுடன் நானும் ஜூன் 16,17,18 தேதிகளில் ஒவ்வொரு வருடமும் மூன்று நாட்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுடன் நேருக்கு நேர் பேசி, அவர்களுடன் தங்கி, அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். இந்தச் செயல் இப்போதும் நடைபெற்று வருகிறது. இதனால், 100 சதவீதம் பேரும் இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். 42 சதவீதமாக இருந்த பள்ளி இடைநிற்றல் இப்போது 2 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்துக்குள் அது 0% ஆக நிச்சயம் மாறும்.

(மோடி பெண் குழந்தைகள் கல்வி விஷயத்தில் காட்டிய அக்கறை போன்று அவருடைய ஆசிரியர்கள் மீதும் காட்டியிருக்கிறார் என்பதை அவருடைய பேச்சு வெளிப்படுத்தியது. கல்வி கற்பித்த ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்காவிட்டால், கற்ற கல்வியை எவ்விதத்திலும் பின்னாளில் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.)

செப்.5 ஆசிரியர் தினமென்று, முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நாம் கடைப்பிடிக்கிறோம். அந்நாளில் நான் என் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்ய எண்ணினேன். எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் எல்லோரையும் பட்டியலிட்டு அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்து, அவர்களை வீட்டுக்கு அழைத்து வணங்கினேன். 33 ஆசிரியர்கள்… அவர்களில் ஒருவருக்கு வயது 95.

இப்படிப் பேசியவர், வழக்கம்போல் குஜராத் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதையும், 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் குறிப்பிட்டு, மாணவர்களின் படிப்புக்கு முக்கியத் தேவை இது என்றும் குறிப்பிட்டார். எங்கெல்லாமோ அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டுவர சிரமப்பட்ட காலம் போய், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திருப்பதாகச் சொல்லி, இப்படிச் செய்தாலே ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட முடியும் என்று குறிப்பிட்டார்.

(அதாவது, மாநிலத்துக்கான வளர்ச்சிப் பணிகளைத் திறம்படச் செய்துவிட்டு பின்னர் ஓட்டு கேட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மறைமுகச் செய்தி).

மேலும், தகவல் தொழில்நுட்பம் என்றாலே, பெங்களூரும் ஹைதராபாத்தும்தான் பேர் வாங்கியிருகிறது; ஆனால், குஜராத்தில் உள்ள கிராமங்களில்கூட பரவலாக பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டு, எல்லா பள்ளிகளும் அகண்ட அலைவரிசை இணைப்பு மூலம் தொடர்புபடுத்தப் பட்டுள்ளது என்றார். வரும் 20ம் தேதி, குஜராத்தின் கிராமப் பள்ளி மாணவர்களுடன் செயற்கைக்கோள் வழி உரையாடப் போகிறாராம். இப்படி பிராட்பேண்ட் வசதி இருப்பதால், கல்வி வளர்ச்சி நூறு சதவீதம் சாத்தியம் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப வளர்ச்சி, பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி போன்றவை பற்றி குறிப்பிடும்போது, இது மிகவும் முக்கியம். அரசு அலுவலகங்கள் பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், நிர்வாகம் தூய்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வாய்ப்பாக உள்ளது. இப்போதெல்லாம், அரசாங்க அலுவலகங்களுக்கு மனு கொடுக்கவோ படிவங்கள் வாங்கவோ அல்லது வேறு வேலையாக வருபவர்கள், அரசு அலுவலர்களால் லேசாக அலட்சியப்படுத்தப் படுவதாக உணர்ந்தாலே, சரி விடுங்க; நான் ஆன் லைனில் போய்க்கறேன் என்று பளிச்சென்று சொல்லி விடுவார்கள். இது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை என்றார். குஜராத்தின் பொருளாதார மாநாடுகள் பற்றியும், அயல்நாட்டு முதலீட்டாளர்களை குஜராத்தின் பக்கம் திருப்பி, எப்படி அன்னிய முதலீடு அதிகளவில் குஜராத்தில் குவிய வைத்துள்ளோம் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொன்னார்.

முக்கியமாக, சென்னையில் நடந்த பொருளாதார மாநாட்டைப் பற்றிய விவரம் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் போனதையும், முக்கியமான ஒரு மாநாட்டுக்குக் கொடுக்கும் மதிப்பு தமிழகத்தில் இவ்வளவுதானா என்பது தொனிக்கும் வகையிலும் பேசினார். இதில் நிறைய உண்மை உள்ளது.

கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைப் பற்றிப் பேசியபோது, தாமதிக்கப்பட்ட நீதி, தடுக்கப்பட்ட நீதி என்பார்கள். இதன்மூலம் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இதற்கு முடிவு கட்ட ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நீதிபதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். முதலாவது, தயவுசெய்து உங்களுடைய பத்து நாள் விடுமுறையை ஆறு நாள்களாகக் குறைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீதிமன்றங்கள் காலை 11 மணிக்கு பதிலாக 10.30க்கு தொடங்குமாறு ஏற்பாடு செய்யுங்கள். மூன்றாவது, மாலை நேர கோர்ட்டுக்கு வழி ஏற்படுத்துங்கள். இதன் மூலம், சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள் முதல், பகலில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் சாமானியர்கள் மாலை நேரங்களில் வழக்குகளை அணுக ஏதுவாக இருக்கும் என்றேன். இந்த ஐடியா நன்றாகவே பலனளித்தது. நீதிபதிகளின் ஒத்துழைப்பில், கிட்டத்தட்ட ஒரு கோடி வழக்குகள் தேக்கம் என்ற நிலையிலிருந்து 20 லட்சம் வழக்குகளாகக் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அது ஜீரோ என்ற நிலைக்கு நிச்சயம் மாறும்.

மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் என் மேல், நிர்வாக ரீதியாக எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை. அது தொடர்பான எந்த வழக்குகளும் போடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், கேரளாவின் கம்யூனிஸ அரசாங்கத்தின் உறுப்பினர் என் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ரெட் தாலிபானிஸம் என்ற புதிய கொள்கை இங்கு பரவுவதையே காட்டுகிறது. ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. கேரள அரசால் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது சிறப்பாக இயங்குகிறது என்று தெரியவந்தபோது, அதை நாமும் பின்பற்றினால் என்ன என்று எங்கள் மாநிலத்திலிருந்து இரண்டு இளம் அதிகாரிகளை அனுப்பி திட்டத்தை ஆய்வு செய்து நான் என் மாநிலத்தில் அமல்படுத்தினேன். நமக்கு நாட்டின் நலன்தான் முக்கியமே தவிர, அரசியல் காழ்ப்பு கூடாது. அரசியல் தீண்டாமை பெருகி வருவது கவலை அளிக்கிறது. நாடு முன்னேற அரசியல் தீண்டாமை கூடாது. தத்துவங்கள் ஒவ்வொருவருக்கிடையீல் வேறாக இருக்கலாம். ஆனால், அடிப்படை மாண்புகளை விட்டுவிட்டால், நாடு எப்படி முன்னேறும். நான் குஜராத்தை மட்டும் முன்னேறச் செய்ய நினைக்கவில்லை; குஜராத் உருவத்தில் இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்தே சிந்திக்கிறேன்

.முன்னர் பேசியவர்கள் ஒபாமா பற்றி குறிப்பிட்டார்கள். எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்தும் நாம் எடுத்துக்கொள்ள ஒரு செய்தி உண்டு. அமெரிக்க மக்கள் நமக்கு ஒரு நல்ல பாதையை காட்டியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியிருப்பதுதான். ஜார்ஜ் புஷ், ஜூனியர் புஷ், கிளிண்டன் பின் அவர் பின்வாசல் வழியே இப்போதும் நுழையப் பார்த்தார். ஆனால், மக்கள் தடுத்து நிறுத்தி, ஒபாமாவை முன்னிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது நமக்கு அவர்கள் காட்டிய பாடம். மத்தியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக கட்சிகளின் ஆட்சி வரவேண்டும். பா.ஜ.க அப்படிப்பட்ட ஒரு கட்சி என்பதால், அதற்கு ஆதரவு பெருக வேண்டும்…

(கடைசியில் சொல்ல வந்ததைச் சொல்லி ஒருவாறு விடை பெற்றார். ஆனால், அவருடைய பல ஐடியாக்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை மட்டுமல்ல, வெற்றிகரமானவையும்கூட! மோடியைப் போல் மத்தியிலும் ஒரு சிறந்த நிர்வாகி அமையவேண்டும்… அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும். நம் நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகி யார்!?)

– ஸம்பாதி

IPL 2024: கொல்கத்தா அணியின் பந்துகளை பஞ்சா பறக்கவிட்ட பஞ்சாப் அணி!

36ம் நாள்: ஐபிஎல் 2024 – 26.04.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

          கொல்கொத்தா அணியை (261/6, பில் சால்ட் 75, சுனில் நரேன் 71, வெங்கடேஷ் ஐயர் 39, ஆண்ட்ரு ரசல் 24, ஷ்ரேயாஸ் ஐயர் 28, அர்ஷதீப் சிங் 2/45) பஞ்சாப் அணி (262/2, ஜானி பெயிர்ஸ்டோ 108*, பிரப்சிம்ரன் சிங் 54, ரிலீ ரோஸ்கோ 26, ஷஷாங்க் சிங் 68*) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே கொல்கொத்தா அணி மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (37 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் சுனில் நரேன் (32 பந்துகளில் 71 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். சுனில் நரேன் 10.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 12.3 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 163/2. அவருக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (23 பந்துகளில் 39 ரன்), ஆண்ட்ரு ரசல் (12 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (10 பந்துகளில் 28 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஷ்ரேயாசுக்குப் பின்னர் ஆடவந்த ரிங்கு சிங் 4 பந்துகளில் 5 ரன் அடித்தார். அதன் பின்னர் ரமன்தீப் சிங் 3 பந்துகளில் 6 ரன் அடித்தார். இதனால்  20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 261 ரன் எடுத்திருந்தது. கொல்கொத்தா மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச் ஐ.பி. எல் ஸ்கோர் இதுவாகும்.

          262 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரப்சிம்ரன் சிங் (20 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ (48 பந்துகளில் 108 ரன், 8 ஃபோர், 9 சிக்சர்)இறுதி வரை ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவருடன் ரிலீ ரோஸ்கோ (16 பந்துகளில் 26 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷஷாங்க் சிங் (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ரன், 2 ஃபோர், 8 சிக்சர்) இணைந்து ஆடி 18.4 ஓவரில் வேற்றிக்குத் தேவையான 262 ரன்னை எடுத்தனர்.

இதனால் பஞ்சாப் அணி ஒரு அதிக பட்ச ஸ்கோரை சேஸ் செயது 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

          பஞ்சாப் அணியின் ஜானி பெயர்ஸ்டோ தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம்  லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். 

26.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்871140.698
கொல்கொத்தா853100.972
ஹைதராபாத்853100.577
லக்னோ853100.148
சென்னை84480.415
டெல்லி9458-0.386
குஜராத்9458-0.974
பஞ்சாப்9366-0.187
மும்பை8346-0.227
பெங்களூரு9274-0.721

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

#image_title

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

1) 2.5.24 முதல் வண்டி எண் 06877 தினமும் விழுப்புரத்தில் மாலை 6.25 க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம் பூந்தோட்டம் நன்னிலம் வழியாக இரவு 10:45 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

2) 03-5-24 முதல் வண்டி எண் 06690 தினமும் காலை 5 10 மணிக்கு திருவாரூரில் புறப்பட்டு விழுப்புரம் 9. 15 மணிக்கு சென்றடையும்.
இது பல்லவனுக்கு இணைப்பாக அமையக்கூடும்.

3) 02-5-24 முதல் இரவு 8:25 மணிக்கு திருச்சியில் புறப்படும் வண்டி எண் 06876 தஞ்சாவூர் சாலியமங்கலம் நீடாமங்கலம் கொரடாச்சேரி வழியாக திருவாரூருக்கு இரவு 11:05க்கு வந்து சேரும்.

4) 03.5.24 முதல் தினமும் காலை 4.45 க்கு திருவாரூரில் புறப்பட்டு திருச்சிக்கு 7:00 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் திருச்சியில் புறப்படும் இன்டர்சிட்டி ரயிலுக்கு இணைப்பாக அமையக்கூடும்.

5)3.5.24 முதல் வ. எண் 06627 அகஸ்தியன் பள்ளியில் காலை 5.55 மணிக்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத்துறை, நெய் விளக்கு, கரியாப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் வழியாக திருவாரூர் 7.55 மணிக்கு வந்தடையும்.

6) 03.5.24 முதல் வண்டி எண் 06630 திருவாரூரில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு அகஸ்தியன் பள்ளிக்கு இரவு 9.30 சென்றடையும்.

7) வண்டி எண் 06851 திருவாரூரில் காலை 08.30க்கு கிளம்பி பட்டுக்கோட்டை 10.05 மணிக்கு சென்றடையும்.

8) மாலை 5. 15 மணிக்கு பட்டுக்கோட்டையில் கிளம்பி (வண்டி எண் 06852 ) திருவாரூருக்கு மாலை 06.55 மணிக்கு வரும்.

9) வ.எண் 06197 திருவாரூரில் காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு 9 35 மணிக்கு சேரும்.

10) மறு மார்க்கத்தில் மாலை 6 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version