― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அப்ளிகேஷன் போட்டு அப்ரூவல்! ஐ.நா., அழைப்பு என்ற பெயரில் திமுக.,வின் பொய்யும் சதியும்! அரசு விழிக்குமா?!

அப்ளிகேஷன் போட்டு அப்ரூவல்! ஐ.நா., அழைப்பு என்ற பெயரில் திமுக.,வின் பொய்யும் சதியும்! அரசு விழிக்குமா?!

- Advertisement -

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா., மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அப்ளிகேஷன் போட்டு, அது அப்ரூவல் ஆகியதும், அதை ஏதோ ஐ.நா. சபையே அழைத்துவிட்டது என்ற ரீதியில் ஊடகங்களில் போட்டு திமுக., முழங்குவதும் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஸ்டாலின் ஐ.நா. சபையில் பேசுவதற்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்ற தகவலும் பெரும் அளவில் சமூகத் தளங்களில் எதிரொலித்து வருகிறது.

ஜெனிவாவில் உள்ள ஐநா சபையில் மாதா மாதம் கூட்டங்கள் நடைபெறும். குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் நலன், அகதிகள் முன்னேற்றம் என பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும்.

வைகோ., உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டங்களில் பேசுவதற்கு விண்ணப்பித்து, அதற்கு ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்தக் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். பலமுறை இலங்கை பிரச்னை குறித்து பேசியுள்ளார்.

ஐ.நா., அவைக் கட்டத்தில் பல்வேறு சிறு சிறு அறைகள் இருக்கும். ஏதேனும் ஒரு சிறு அறைக்குள் நடக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு விட்டு, தாங்கள் ஏதோ ஐ.நா. சபையிலேயே பேசினோம் என்று மார் தட்டிக் கொள்பவர்களும் உண்டு.

இந்நிலையில், வைகோ. பாணியில் தாமும் இடம்பெற இப்போது ஸ்டாலினுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவுக் கருத்துகளை எடுத்து வைத்து, தன்னை பாகிஸ்தான் ஆதரவாளராக வெளிப்படுத்தி வரும் ஸ்டாலின், இது குறித்து ஐ.நா. அவையின் ஏதோ ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டாலே போதும் என்று பின்னணியில் ஒரு குழு இயங்க, இப்போது ஐநா., சபையே ஸ்டாலினை அழைத்தது போல் திமுக., செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஐ.நா., சபை மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க மனித உரிமைக்காக போராடும் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். அவர்களில் ஒருவராக திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விண்ணப்பித்து, அதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே காஷ்மீர் பிரச்னையில் ஸ்டாலின் எடுத்த நிலைப்பாடு நாடு முழுதும் பெருமளவில் தமிழகத்துக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு தேசவிரோதிகள் என்ற பெயரை திமுக., பெற்றுள்ள நிலையில், இதே காஷ்மீர் குறித்தும், மத்திய பாஜக அரசு குறித்தும், அரசின் நடவடிக்கை குறித்தும் அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.

மேலும், ஈழத்தை சேர்ந்த தமிழ் அகதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு இவை குறித்தெல்லாம் அவர் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Stalin was not invited by UNHRC .Stalin himself registered to attend the session and they have sent an approval.. Now DMK and the TN media is projecting this as an invitation which is a blatant lie ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version