கோவில்களை அழிக்க நான் நாத்திக ரவுடி கும்பல் அல்ல! நித்தியானந்தா!

192
nithyanatha - 2026

மேட்டூர் ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தன்னிடம் இருப்பதாக நித்யானந்தா கூறிய நிலையில், தன்னுடைய பேச்சுக்கு தற்பொழுது புதிய விளக்கம் அளித்துள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பன்னவாடி கிராமத்தில், சோழ மன்னர் காலத்தில் ஜலகண்டேசுவரர் கோவில் கட்டப்பட்டது. பழமையான இந்த கோயிலில், சோழமன்னர் காலத்தில் கட்டப்பட்டது. பூஜை செய்வதற்காக 14 நாயன்மார்கள் பணி அமர்த்தப்பட்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன. சமீபத்தில் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, ஜலகண்டேசுவர் கோயிலை தாம் முந்தைய ஜென்மத்தில் கட்டியதாக பேசினார்.

nithyanatha 2 - 2026

அதுமட்டுமின்றி, அந்த கோயிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் தான் உள்ளதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில், நித்யானந்தாவிடம் உள்ள மூலவர் லிங்கத்தை மீட்டுத் தர வேண்டுமென காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நித்யானந்தா தமது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.

பூஜை செய்த லிங்கத்தைக் அசைப்பதற்கு தான் நாத்திகனா என்று கேட்டுள்ளார். கோவில்களை அழிப்பதற்கு தான் நாத்திக ரவுடி கும்பலைச் சேர்ந்தவன் அல்ல என பேசியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிகிறது. நித்யானந்தாவின் பேச்சுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், பாலவாடி கிராம மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனரம்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.