இன்ஸ்டாகிராம் மற்றொரு புதிய அம்சத்தைச் கொண்டு வந்துள்ளது. இது டிக்டோக்கிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஒரு அம்சம் போல உள்ளது.
இனி இதில் ரீல் வீடியோவைச் சேர்க்கும் திறன் அடங்கும். இந்த அம்சம் வீடியோக்களுடன் வீடியோக்களுக்கு பதிலளிக்கும் TikTok இன் திறனைப் போன்றது.
இருப்பினும், தற்போது இந்த அம்சம் ரீல்களில் உள்ள கமெண்ட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
“உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான புதிய அம்சமான ரீல்ஸ் விஷுவல் ரிப்ளைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நீங்கள் இப்போது கமெண்ட்டுகளுக்கு ரீல்ஸ் மூலம் பதிலளிக்கலாம். மேலும் கமெண்ட் ஸ்டிக்கராக பாப் அப் செய்யும், “என்று இன்ஸ்டாகிராம் அம்சத்தை அறிவிக்கும் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் புதிய விஷ்வல் ரிப்ளை அம்சம், ஒரு பயனர் தனது சொந்த ரீல்களில் உள்ள கமெண்ட்டுகளுக்கு மற்றொரு ரீல் மூலம் பதிலளிக்க அனுமதிக்கிறது. இந்த புதிய ரீல் கமெண்ட் ரிப்ளையில் ஸ்டிக்கராக தோன்றும்.
ரீலை இடுகையிடும் பயனர்கள் மட்டுமே அதன் கமெண்ட்டுகளுக்கு புதிய ரீல்கள் மூலம் பதிலளிக்க முடியும். மற்ற பார்வையாளர்கள் சாதாரண டெக்ஸூடன் மட்டுமே கமெண்ட் தெரிவிக்க முடியும்.
எனவே, அசல் ரீல் அவர்களால் பதிவேற்றப்படும் வரை, பயனர்கள் தங்கள் சொந்த ரீல்களுடன் ரீல்ஸ் கமெண்ட்டுகளுக்கு பதிலளிக்க முடியாது.
ரீலைப் பதிவேற்றிய பயனர் கமெண்ட்டுகள் பகுதியைத் திறக்கும் போது, அவர்/அவள் கமெண்ட்டுகளுக்கு டெக்ஸ்ட் மற்றும் புதிய ரீல்களுடன் பதிலளிக்க முடியும்.
இருப்பினும், இவை புதிய ரீல்களாக இருக்க வேண்டும் மற்றும் பயனர்கள் தங்கள் சுயவிவரத்திலிருந்து பழையவற்றைச் சேர்க்க முடியாது.
பயனர்கள் பதிலளிக்க புதிய ரீலை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள வீடியோவைப் பதிவேற்றலாம். அது மீண்டும் பழைய ரீலாக இருக்கலாம்.