விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

Published:

Vivo V23 Pro smartphone - 2026

விவோ நிறுவனம் விரைவில் விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் க்களை எடுக்க முடியும்.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில்
இந்த புதிய விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் வதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் டூயல்-சிம், 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,080×2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 460 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.

மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் விவோ Y76 5G மாடல்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல்-சிம், 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y76 5G ஸ்மார்ட்போன்

Related articles

Recent articles

spot_img