தற்போது மெல்பெர்னில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார் ஷாரூக். இந்த விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி மற்றும் காயத்திரியும் கலந்து கொண்டுள்ளனர்.
திடீரென ஷாருக்கை வரவேற்கும் விதமாக ஒருவர் மலைப் பாம்பை அவரது கழுத்தில் மாலைப் போல் போட்டு விட்டு நகர்ந்து விடுகிறார். இதனால் முதலில் ஷாருக் அதிர்ச்சியாகிறார். பின்னர் அவர் சிரித்துக் கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
இந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டிங்காகியுள்ளது. பாம்பு கழுத்தில் இருக்கும் போதும், பயப்படாமல் எப்படி நிற்கிறார் பாருங்கள் எங்கள் சூப்பர்ஸ்டார் என சமூகவலை தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.